உடுமலைப்பேட்டையில் உல்லாசமாய் சுற்றிப் பார்க்க வேண்டிய 7 இடங்கள்!

உடுமலைப்பேட்டை...
உடுமலைப்பேட்டை...

டுமலைப்பேட்டையை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா தளங்கள் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் நீங்கள் சுற்றுலா செல்வதற்கு ஏற்றதாக இருக்கும். அதுமட்டுமல்ல இயற்கை எழில் கொஞ்சும் மனதுக்கு அமைதி கிடைக்கும் ஒரு அற்புதமான 7 இடங்களின் தொகுப்புதான் இப்பதிவு.

1. திருமூர்த்தி மலை

திருமூர்த்தி மலை
திருமூர்த்தி மலை

உடுமலைப்பேட்டை சுற்றுலா தளங்களில் முதலில் பார்க்க வேண்டியது திருமூர்த்திமலை தான். உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. இங்கு பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில், திருமூர்த்தி அணை, சிறுவர்கள் நீச்சல் குளம், சிறிய பூங்கா போன்ற சிறப்பு அம்சங்களை கொண்டு திருமூர்த்தி மலைக்கு பெருமையை சேர்க்கிறது.

2. அமராவதி அணை

அமராவதி அணை
அமராவதி அணை

அமராவதி அணை உடுமலையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணை சுமார் 100 படிக்கட்டுகளை கொண்டுள்ளது. அதில் ஏறி மேலே சென்று இயற்கையை ரசித்தால் உங்கள் அணைத்து கவலைகளும் பறந்து ஓடி விடும். அருகிலேயே முதலை பண்ணை, பெரிய பூங்கா, மீன் கடைகள் எல்லாம் உங்கள் பொழுதை மேலும் அழகாக்கும். இந்த இடத்திற்கு வர பேருந்தை விட சொந்த வாகனம் சரியாக இருக்கும்.

3. தூவானம் அருவி

தூவானம் அருவி
தூவானம் அருவி

தூவானம் அருவி சின்னாரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அங்கு சென்று தங்கவும் முடியும். காட்டுக்குள் தங்குவது மற்றும் அருவியில் குளிப்பதற்கு என அனைத்திற்கும் கேரள வன அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும்.

4. முதலை பண்ணை

முதலை பண்ணை
முதலை பண்ணை

அமராவதியில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் முதலை பண்ணை அமைந்துள்ளது. இங்கு சுமார் 100 முதலைகள் வளர்க்கப்படுகின்றன. இங்கே சொந்த வாகனங்களில் செல்வது தான் சிறப்பானது. ஏனெனில் பேருந்து வசதி அமராவதியில் இருந்து மிகவும் குறைவாகவே உள்ளது. 

இதையும் படியுங்கள்:
முதுமையைத் தள்ளிப்போட உதவும் 7 உணவுகள்!
உடுமலைப்பேட்டை...

5. உடுமலை திருப்பதி

உடுமலை திருப்பதி
உடுமலை திருப்பதி

உடுமலையில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள உடுமலை திருப்பதி 2018 ஆம் ஆண்டு கட்டப்பட்டு மிக பிரம்மாண்டமான அளவில் திறக்கப்பட்டது. பின், உடுமலையில் ஒரு மிக முக்கியமான கோவில் தலமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

6. கல்லாபுரம்

கல்லாபுரம்
கல்லாபுரம்

கல்லாபுரம் மிகவும் செழிப்பான மற்றும் இயற்கையான கிராமம். உடுமலையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கல்லாபுரத்தை காண அமராவதி வழியாகவும் வரலாம். இங்கு பெரிதாக சுற்றுலா தளங்கள் எதுவும் இல்லை எனினும், இந்த ஊரை சுற்றியுள்ள அணைத்து இடங்களும் நம் கண்ணிற்கு கொள்ளை அழகை தரும். 


7. காந்தளூர் அருவி

காந்தளூர் அருவி
காந்தளூர் அருவி

சின்னாரை அடுத்துள்ள மறையூரில் இருந்து ஒரு 10 கிலோ மீட்டர் உள்ள சென்றால் மிகவும் அமைதியான மற்றும் மலைகளுக்கு நடுவே அழகிய தோற்றமளிக்கும் காந்தளூர் அருவி கேரள எல்லைக்கு உட்பட்டது. இந்த அருவி அதிகம் யாருக்கும் தெரியாத காரணத்தால் கூட்டம் மிகவும் குறைவாகவே இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com