Motivation image
Motivation imageImage credit - pixabay.com

80/20 கோட்பாட்டை உபயோகித்து நினைத்ததை சாதிப்பது எப்படி?

Published on

நாம் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடைவது இல்லை. சில சமயம் வெற்றிகளும் சில சமயம் தோல்விகளும் கிடைக்கும். நினைத்ததை சாதிக்க, வாழ்வில் வெற்றி பெற பலவிதமான வழிகள் உள்ளன. 80/20 கோட்பாட்டை உபயோகித்து நினைத்ததை சாதிப்பது எப்படி? என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. செயல் திறனில் கவனம் வைக்க வேண்டும். ஒரு இலக்கை அடைய வேண்டும் என்றால் அதை பல பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமான இருபது சதவீத செயல்பாடுகளை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் 80 சதவீதம் பலன் தரும் முயற்சிகளை கண்டறிய வேண்டும். அந்த செயல்களை செய்ய ஆரம்பிக்க வேண்டும். 

2. ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையைக் கண்டறிய 80/20 விதியைப் பயன்படுத்துங்கள், உங்கள் நேரத்திலும் முயற்சியிலும் ஒரு சிறிய பகுதி குறிப்பிடத்தக்க தனிப்பட்ட சாதனைகள் மற்றும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்

அந்த இருபது சதவீத முக்கியமான பணிகளில் உங்கள் ஆற்றலை குவிக்க வேண்டும் வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்த செயலை பற்றி மட்டுமே எண்ணி அதை தீவிரமாக செயல்படுத்துவதற்காக திட்டமிட வேண்டும். 

3. உங்களுடைய செயல்பாடுகளில் எவை 80 சதவீதத்திற்கும் குறைவான பலனை தருமோ அந்த செயல்களை கண்டறிந்து அதற்கு குறைவான நேரத்தை ஒதுக்கினால் போதும். 

நீண்ட கால இலக்குகள் மற்றும் நோக்கங்களுடன் இணைந்த உயர்-செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதன் முயற்சியில் வெற்றி காணலாம்.

 4. இலக்குகளை எளிதாக்குங்கள்: பெரிய இலக்குகளை சிறிய, மேலும் நிர்வகிக்கக்கூடிய துண்டுகளாக உடைத்து, மிகவும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் பகுதிகளில் கவனம் செலுத்துங்கள்.

5. பல மணி நேரம் வேலை செய்ததோ அல்லது நிறைய வேலைகளை செய்வதோ முக்கியமல்ல. அவை சிறந்த பலன்களைத் தரும் என்று எதிர்பார்க்க முடியாது. எப்போதுமே ஒரு வேலையை சரியான வேலையை சரியான விதத்தில் செய்வது முக்கியம். நிறைய வேலைகளை செய்ய வேண்டும் என்பது முக்கியமல்ல. வேலை  குறைவாக இருந்தாலும் அதன் தரம் மிகவும் முக்கியம்.

6.  நீங்கள் ஒரு வீட்டு உபயோக பொருட்கள் அல்லது துணிக்கடை வியாபாரி என்று வைத்துக் கொள்வோம். எல்லா வாடிக்கையாளர்களும் எல்லா பொருட்களையும் வாங்குவதில்லை. அதேபோல துணிக்கடையில் எல்லா விதமான துணிகளும் விற்பனையாவது  இல்லை. குறிப்பிட்ட துணிகளை வாடிக்கையாளர்கள் வாங்குகிறார்கள். அதே போல குறிப்பிட்ட வீட்டு உபயோகப் பொருட்களையே அதிகமாக வாங்குகிறார்கள்.  விற்பனையில் பெரும் பகுதி அதில் தான் நடக்கிறது. அப்போது முக்கிய வாடிக்கையாளர் களை திருப்திப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அது இருபது சதவீதமாக இருந்தாலும் அந்த முக்கியமான வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதன் மூலம் உங்களுக்கு 80 சதவீத லாபம் கிடைக்கும். 

இதையும் படியுங்கள்:
லோ பட்ஜெட்? அப்போ இது பெஸ்ட்! தேனியில் நீங்கள் சுற்றிபார்க்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Motivation image

7. உங்களது உத்திகள் மற்றும் செயல்முறைகளை தொடர்ந்து மதிப்பீடு செய்து கொண்டே இருக்க வேண்டும். அவற்றை காலத்திற்கேற்ப மாற்றம் செய்து செம்மைப்படுத்த வேண்டும். இதன் மூலம் தொடர்ச்சியாக முன்னேற்றம் காணலாம்.

 8. மாறிவரும் கால சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் உங்களது உத்திகளையும் மாற்றி அமைக்க வேண்டும். அணுகுமுறையையும் அவ்வப்போது சரி செய்து கொள்ள வேண்டும். உங்கள் முயற்சிகளில் தோல்விகளும் வரலாம். முன்னேற்ற பாதையிலிருந்து விலகி வீழ்ச்சியை அடைய என்னென்ன சாத்தியங்கள் இருக்கின்றன என்று கண்டறிந்து அவைகளை களைந்து எடுக்க வேண்டும். 

 9. உண்மையிலேயே முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் தேவையற்ற கவன சிதறல்களை தடுக்கலாம் கடமைகளை சரிவர ஆற்ற முடியும். வெற்றியும் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com