தலைக்கனம் இழப்பவர்களே தலை நிமிர முடியும்!


Human strength and weakness!
Flying birds...Image credit - pixabay
Published on

ன்னிடம் எந்த பலவீனமும் இல்லை என பலர் கூறக்கேட்கலாம்.  இந்த மனிதர்களுக்குத்தான் தங்கள் மீது எவ்வளவு அசாத்திய நம்பிக்கை. யாராவது தன்னிடம் பலவீனம் இல்லை என்று சொன்னால், அவர்களிடம் பலமும் இல்லை என்பது பொருள்.  ஏனென்றால் பலம் இருப்பவர்களிடம்தான் பலவீனமும் இருக்கும். .மனிதர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பலவீனங்களை வெளிப்பபடையாகக் காட்டிக் கொள்பவர்கள் ஒருவகை. அவற்றை மறைத்து அழகுபடுத்துபவர்கள் இரண்டாவது வகை.

மூன்றாவது வகையான  மனிதர்கள் உண்டு. அவர்கள் அபூர்வமானவர்கள். தங்கள் பலவீனத்தை ஒப்புக்கொண்டு கடக்க நினைப்பவர்கள் அவர்கள். நம்முடைய பலவீனத்தை பலம் என நினைத்துக் கொண்டு  பல நேரங்களில் நாம் பிரகடனப்படுத்தி விடுகிறோம். எது பலமாக இருக்கிறதோ அதுவே இன்னொரு கட்டத்தில் பலவீனமாக மாற வாய்ப்பு உண்டு. ஏனென்றால் இரண்டிற்கும் ஒரு மயிரிழைதான் எல்லைக்கோடு.

நாம் நம் பலவீனங்களை சரியாகப் புரிந்து கொண்டாலே அவற்றிலிருந்து விடுபட ஆயத்தப்படுத்திக் கொள்கிறோம் என்று பொருள். எல்லா நெறிகளிலும் திரும்பிப் பார்க்கக் கூடாது என  கூறுவதை கேள்விப்பட்டிருக்கிறோம்.  ஏனென்றால் நாம் திரும்பிப் பார்க்கும்போது நாம் தவறவிட்டவற்றிற்காக வருத்தப்பட நேரிடும். அங்கேயே நின்று பின்தங்கி விடுவோம். லோத்தினுடைய மனைவி சோதோம் மற்றும் கொமோரா  நகரங்களை இறைவன் எரித்தபோது திரும்பிப் பார்த்த காரணத்தால் உப்புத் தூணாக மாறியதை பைபிள் கூறுகிறது.

திரும்பிப் பார்த்தோமானால் பல அழிவுகளைக் கண்ணுற நேரிடும். நாம் முன்னோக்கிப் பார்க்க வேண்டும் என்பதற்காக கண்கள் முதுகுப் பக்கம் இல்லை.

இதையும் படியுங்கள்:
உங்கள் எண்ணங்கள் உங்கள் விதியை தீர்மானிக்கும்!

Human strength and weakness!

ஒரு மன்னன் மிக அழகான வைரத்தை வைத்திருந்தான். அவன் மிகவும் பெருமைபட்டான். கர்வம் கொண்டான். அந்த வைரத்தில் ஒருமுறை விரிசல் ஏற்பட்டது. அவன் அனைத்து வைர வியாபாரிகளையும் அழைத்து அதன் குறையைப் போக்க முடியுமா எனக் கேட்டான். ஆனால் எல்லோரும் கைவிரித்து விட்டனர். 

சில நாட்கள் கழித்து வைர வேலை செய்யும் ஒருவர் அந்த வைரத்தை வாங்கி  நுணுக்கமாக செதுக்க ஆரம்பித்தார்.  அதை ரோஜா மொட்டாக்கி அதன் விரிசலைத் தண்டாக்கினார். தண்டின் மீது மலரத் துடிக்கின்ற ரோஜா மொட்டைப் போல் அவ்வைரம் காட்சி தந்தது. முன்னைப் காட்டிலும் அவ்வைரம் அழகாக இருந்தது.  ஆனால் இந்த குறையைப் போக்க அந்த வைரம் சற்று கனத்தை இழக்க நேர்ந்தது. தலைக்கனம் இழப்பவர்களே தலை நிமிர முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com