எப்படியோ பிறந்தோம். எப்படியோ வாழ்ந்தோம் என்பதல்ல வாழ்க்கை. உங்கள் வாழ்க்கை உங்களைப் பேசவேண்டும். உங்களுக் சென்று கனவுகள் இருக்கலாம். இதை அடைவதற்கு நீங்கள் என்ன முயற்சித்தீர்கள்? கனவை எக்காரணம் ஆனாலும் தூக்கி எறியாதீர்கள். புதைத்துவிட்டு புலம்பாதீர்கள். உங்கள் கனவு உங்கள் பெயர் சொல்லும் சாதனையாக இருக்கட்டும். சிறுவயதிலிருந்தே சாதனைக் கனவு நாளடைவு உங்கள் பிரச்னையின் தாக்கத்தால் காணாமல் போயிருக்கலாம்.
சிலருக்கு திருமணத்திற்குப் பின் மறைந்து போயிருக்கலாம். யாரும் தூக்கிவிடவில்லையே என அவை உங்களுக்குள்ளேயே புதைந்திருக்கலாம். யாரோ ஒருவர் உங்கள் கனவைக் சார்ந்து வெற்றி பெறும் போதெல்லாம் உங்கள் மனம் தவிக்கும். நாமும். இதுபோல் வெற்றி பெறவில்லையே என ஏங்கி, இதுபோல் திறமை எனக்கும் இருந்தது, ஆனால் என்னால் அடைய முடியவில்லை என புலம்புவார்கள்.
உலகம் போற்றும் சார்லி சாப்ளின் கண்ட இளம் கனவு உலகம் போற்றும் நடிகனாக வேண்டும் என்பதுதான். சார்லி சாப்ளின் என்றால் ஒரு தொப்பியும், ஹிட்லர் மீசையும் ஸ்டிக்குமான அடையாளம். இந்த அடையாளத்தைத் பெற அவர் பல போராட்டங்களை சந்தித்தார். இளவயதில் பிச்சை எடுத்து வாழ்க்கை. 1913ல் ஊமைப்படமான "பேக்கிங் எ லிவிங்" இல் வில்லன் வேடம். ஆனால் தோல்வி முகம். ஆனால் அவர் விடவில்லை. வேகமான ஓட்டம், கடுமையான உழைப்பு, கனவுக்கான சிந்தனை. அதன் பயனாக ஒரே ஆண்டில். கதை ,இயக்கம், நடிப்பு என ஒரே ஆண்டில் 35 படங்கள். மூன்று ஆண்டு இடைவெளியில் உலகப் புகழ்.
தன்னம்பிக்கையாளன் பிரச்னைகளை தவிடு பொடியாக்கி விடுவான். கனவுகளை அல்ல. நீங்கள் சார்லி சாப்ளின் போல் வேண்டாம். சராசரியாக கொஞ்சம் சிந்தியுங்கள். உங்களிடம் அடக்கி வைத்த கனவு இருக்குமே. உங்களுக்குள் அரித்துக் கொண்டிருக்கும் ஏக்கம் உள்ளதா?. புதைகுழிக்குள் போனதாக நீங்கள் எண்ணியதை திரும்ப எடுத்து தூசி தட்டுங்கள். கனவை எழுச்சியால் நனவாக்குங்கள். நடக்காதவன் கால்களில் சிலந்தி கூடுகட்டும் என்பது எகிப்திய பழமொழி. வீறிட்டு எழுங்கள். உங்கள் கனவுகளை அடையத் தயாராகுங்கள். உங்களை அடையாளப்படுத்துங்கள்.