முடியுமென்றால் பல வழிகள் உண்டு. முடியாதென்றால் பல காரணங்கள் உண்டு!

If possible, there are many ways...
Success doesn't need reasonsImage credit - pixabay
Published on

வெற்றிக்கு காரணங்கள் தேவையில்லை. காரியங்களே தேவை. முடியும் என்று நினைத்தால் பல வழிகள் உண்டு. முடியாது என்று நினைத்தால் பல காரணங்கள் உண்டு. முடியும் வரை முயற்சி செய். நம்மால் முடியும் வரை அல்ல நாம் நினைத்ததை முடிக்கும்வரை. அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியால்தான் அடையப் பெற்றிருக்கின்றன. வெறும் வலிமையால் அல்ல. முற்றுப்புள்ளியை கூட மூன்று முறை வைத்தால் தொடர்ச்சியாகிவிடும். அதுபோல்தான் முயற்சித்துக் கொண்டே இருந்தால் நாம் அடைய வேண்டியவற்றை எளிதில் அடைந்து விடலாம். விடாமுயற்சி என்பது தளராமல் முயற்சி செய்வதாகும்.

முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் வெற்றியை அடையாளம் காணமுடியும். திருவள்ளுவரின் வாக்குப்படி முயற்சி திருவினையாக்கும். முடியும் என்று நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை. முடியும் என்ற எண்ணத்துடன் தளராது முயற்சித்தாலே போதும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பார்கள்.

எந்த ஒரு செயலையும் முடியும் என்று நினைத்து முயற்சித்தால் நம் வாழ்வில் நாம் தேடிய வழியை தெரிந்து கொள்ளலாம். நகர்ந்தால்தான் நதி அழகு. முயன்றால்தான் மனிதன் அழகு. வளர்ந்தால்தான் செடி அழகு. மூச்சுவிடுபவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்ல. முடியும் என்று எண்ணி செயலில் இறங்குபவர்களால் பல வழிகளைக் காணமுடியும்.

நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை யாரோ ஒருவர் எங்கோ ஒரு இடத்தில் அதை செய்து கொண்டுதான் இருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். முடியும் என்று நினைத்தால் பல வழிகள் உண்டு. முடியாது என்று நினைத்தால் அதை செய்யாமல் இருப்பதற்கு பல காரணங்களைத் தேடுவோம்.

முடியும் என்றால் முயற்சி செய். முடியாது என்றால் பயிற்சி செய். பயிற்சி செய்ய செய்ய பல வழிகள் நம் கண் முன் தெரியும். மூச்சு விட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லை. அந்த மூச்சிருக்கும் வரை நம்மால் முடியும் என்று நினைத்து முயற்சிப்பவர்கள்தான் மனிதர்கள்.

இதையும் படியுங்கள்:
தன்னம்பிக்கை எப்போது ஆணவமாக மாறும் தெரியுமா?
If possible, there are many ways...

முடியாது என்பது மூடத்தனம். முடியும் என்பது மூலதனம். என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று எண்ணிச் செய்யும் செயல்கள் சிறப்பாக முடியும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. நம்மால் செய்ய முடியும் என்று முதலில் நம்ப வேண்டும். ஒன்றை செய்ய முடியும் என்று முழுதாய் நம்பும்போதுதான் நம் மனம் அதை செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு செயலில் வைக்கும் நம்பிக்கை அந்த செயலை முடிக்கும் வழியையும் காட்டிவிடும்.

முடியும் என்று நினைப்பவருக்கு ரோஜாதான் கண்ணில் படுமே தவிர அதில் உள்ள முட்கள் தெரியாது. முடியாது என்று நினைப்பவர்கள் எப்பொழுதும் குறைபட்டுக் கொண்டே சூழ்நிலை சரியில்லை என்று பல காரணங்களை அடுக்குவார்கள். ஆனால் தன்னால் முடியும் என்று நம்புபவர்களோ அதற்கான சூழ்நிலையைத் தேடுவார்கள். அத்தகைய சூழ்நிலை அமையவில்லை என்றால் அவர்களே அதனை உருவாக்கவும் தயங்கமாட்டார்கள்.

முடியும் என்று நினைத்தால் பல வழிகள் உண்டு. உண்மைதானே நண்பர்களே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com