இதை நீங்கள் செய்தால், உங்களிடம் உள்ள செல்வம் குறையவே குறையாது!

Motivational articles
Normal thoughts...
Published on

னித வாழ்வில் பணம், தொழில், பாசம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, பிறரை நேசித்தல், பொியோ் சொல்கேட்டல் இப்படி பலவிதமான நோ்மறை சிந்தனைகள் உலாவருவது இயற்கை.

அதில் அனைத்தையும்விட அன்பே முதலிடம் வகிப்பதும் நிதர்சனமே! அன்புதான் அனைத்து ஜீவராசிகளுக்கும் பிரதானமாக உள்ளது.

அதை நாம் சரிவர கடைபிடிக்கவேண்டும். சிலரிடம் நாம் அன்பையும், அரவணைப்பையும், அளவுக்கு மீறி செலுத்துவதும், அதேபோல அந்த அன்பை எதிா்பாா்ப்பதிலும் சில அளவுகோல் இருக்கவேண்டும். அதுதான் நியாயம், மற்றும் முறையும் கூட.

ஆக, நாம் செலுத்திய அன்பு திரும்பக் கிடைக்கவில்லையே, என மனம் வேதனைப்படக்கூடாது. அது தவறான முன்னுதாரணமாகும். பொதுவாக, நம்மைப்போலவே, அனைவரும் இருப்பாா்கள் என நினைப்பதும் தவறு. சரி நினைத்துவிட்டோம், எதிா்பாா்த்த அளவு கிடைக்கவில்லை, அதற்காக மற்றவர்களிடம் வெறுப்பை உமிழ்வது சரியான தீா்வு  கிடையாது!

"விரும்பியது கிடைக்கவில்லை என்றால் கிடைத்ததை விரும்பும் மனப்பக்குவம் வரவேண்டும்". பொதுவாக நமது அன்பை தீா்மானிப்பது இடங்கள் அல்ல. அது ஒரு இதயப்பறிமாற்றம்.

அதோடு அருகில் இருப்பதால் அன்பு அதிகமாவதில்லை. தூரத்தில் இருப்பதால் குறைந்துபோவதுமில்லை.

அன்பால் நாம் எதையும் சாதிக்கலாம். அதற்கு மனது முதலில் விசாலமாக இருக்கவேண்டும். குறுகலான மனோநிலை அறவே தவிா்ப்பது நல்லது.

சிாிப்பும், அன்பும், நேசமும், செலுத்துவதால் நமக்கு செலவா வந்து விடப்போகிறது? மாறாக மன ஆரோக்கியத்தை அல்லவா தரும். உடல் ஆரோக்கியத்தைவிட மன ஆரோக்கியமே சரியாய் இருக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் கதை: அள்ள அள்ளக் குறையாத செல்வம்!
Motivational articles

அன்பு ஆண்டவன் நமக்கு தந்த பொிய கொடை. நமக்கு கிடைத்திருக்கும் வரங்களில் அதுவே சாலச்சிறந்ததாகும். மகிழ்ச்சியும், அன்புமே நீண்ட ஆரோக்கியம், மற்றும் ஆயுளைத்தருமே! அதை ஏன் மனித வர்க்கம் புாிந்து நடந்து கொள்வதில்லை.

நம்மிடம் இருக்கும் ஒரு பொருளை மற்றவர்களுக்கு இலவசமாகவோ, அல்லது விலைக்கு கொடுப்பதாலோ, அந்த பொருளின் அளவு குறையும். அதேநேரம்  அன்பை கொடுப்பதால்  அது குறையவா செய்யும் மாறாக நல்ல உறவுகளையும், நட்புகளையும் தருமே!  கல்வியானது அழியாத செல்வம். அது அள்ள அள்ள குறையாது.

அதேபோல நாம் செலுத்தும் அன்பானது உறவுகளை வளா்க்குமே தவிர அழியாதது. எனவே அன்பின் மகத்துவம் தொிந்து அனைவரிடமும் அன்பை செலுத்துவோம், அதுவே அள்ள அள்ள குறையாத செல்வமாகும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com