அழுத்தும் சூழலை அமைதியாக எதிர்கொண்டால் வெற்றிதான்!

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

நான் மகிழ்ச்சியாக இருக்க நினைக்கிறேன். ஆனால் சுற்றியுள்ள சூழல்கள் என்னை அப்படி இருக்கவிடாமல் செய்கின்றது. இது பலரது புலம்பலாக இருக்கிறது.

பறவைகள் உங்கள் தலைக்குமேல் சுற்றுவதை  தடுக்க முடியாது.  ஆனால் அது உங்கள் தலையில் கூடுகட்ட அனுமதிப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது என்றார் மார்ட்டின் லூதர்.

உங்களுக்கு முதல் கேள்வி. நீங்கள் உங்கள் சூழலுக்கு எதிர்வினை செய்கிறீர்களா அல்லது நேர்வினை செய்கிறீர்களா என்பதுதான். இரண்டுக்கும் இடையே பல வித்தியாசம் உள்ளது. பிறரது சொல்லோ செயலோ உங்களை பாதிக்கும்போது  உணர்வுகளின் தூண்டுதலால் எந்தப் பின்விளைவுகளையும் யோசிக்காமல் சட்டென்று எதிர்வினையாக பதிலடி கொடுக்க நினைப்பவர்கள் தாங்களாகவே வலியச்சென்று அவர்கள் வலையில் சிக்கிக் கொள்வார்கள். 

அதே நேரம் சூழல் எப்படி இருந்தாலும் உடனடியாக ரியாக்ட் பண்ணாமல் சில நொடிகள் சூழலை நோட்டமிட்டு அதை உள்வாங்கி  பாதகமில்லாததும்  சாதகமான பலன்கள் கிடைக்கும் வகையில் யோசித்து ரெஸ்பாண்ட் செய்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

நாய் ஒன்றை முயலைத் துரத்த அது புதர் ஒன்றில் ஓடி ஒளிந்து.  அங்கிருந்த எலும்புத் துண்டை நாய் கடிக்க ஆரம்பித்தபோது ஒரு சிறுத்தை அதன்மீது பாய தயாரானது. தன்னால் தப்பிக்க முடியாது என்று யோசித்த  நாய்   தான் சிறுத்தையைப் பார்த்ததை காட்டிக் கொள்ளாமல் "சே இத்தனை பெரிய சிறுத்தையை அடித்துத் தின்னும் பசி அடங்கவே இல்ல இன்னொரு கொழுத்த சிறுத்தை சிக்கினால் நன்றாக இருக்கும்" என்று சொன்னது. சிறுத்தைக்கு பயம் வந்துவிட்டது. நாய் எப்படி தன்னை தாக்கும் என்றெல்லாம் யோசிக்காமல் அரண்டு ஓடியது.

பயந்து ஓடிய சிறுத்தையை பார்த்த சிட்டுக் குருவி நாய் உன்னைத் தாக்கும் அளவுக்கு வலிமை இல்லை. அது உன்னை ஏமாற்றுகிறது என்றே கூற திரும்பவும் அங்கே சிறுத்தை சென்றது.  நாய் சமயோசிதமாக "எங்கே போய்த் தொலைந்தது இந்தச் சிட்டுக்குருவி என் பசிக்கு சிறுத்தையை ஏமாற்றி கூட்டி வருவதாகச் சொன்னதே" என்றுசத்தமாகக் கூறியது.  மறு விநாடியே  சிட்டுக் குருவியைப் பாய்ந்து நசுக்கி விட்டு  தலைதெறிக்க ஓடியது சிறுத்தை.

இதையும் படியுங்கள்:
நார்த்தாமலை சோழர் கால கற்றளிக் கோவில் விஜயாலய சோழீஸ்வரம்!
motivation article

சிறுத்தைபோல் சுற்றம் நட்பு சூழல் என உங்களை அச்சுறுத்தலாம். அழுத்தலாம். நீங்கள் உடனே உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினை செய்யாமல் சில விநாடிகள் யோசித்தால் போதும் அழுத்தமான சூழலே உங்களுக்கு சாதகமாக மாறும்.உங்கள் ஈகோவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நெருக்கும் சூழலில் நீஙகள்தான்சரி என்று நிரூபிப்பதைவிட  உங்கள் சந்தோஷம் முக்கியம் என யோசித்துச் செயல்படுங்கள்.

மற்றவர்களின் செயல்களுக்கு உடனடியாக ரியாக்ட் பண்ணாமல் ஒரு நொடி யோசித்து ரெஸ்பாண்ட் பண்ணக் கூடியவர்கள் யாரிடமும் அகப்படாமல்  தானும் தப்பித்து எதிராளிகளையும் ஓட வைத்து விடுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com