ஈடுபாடு ஆழமானால் மேம்பாடு காத்திருக்கிறது!

Motivation image
Motivation imageImage credit - pixabay.com

ட்சிகளிலும் சரி, கம்பெனிகளிலும் சரி தலைமைக்கு  வேண்டியவராக சிலர் விளங்குவார்கள். இத்தனைக்கும் சீனியாரிட்டிபடி பார்த்தால் பின்தங்கியவராக இருப்பார். இதை சிலர் காக்காய் பிடித்து முன்னுக்கு வருகிறான் என்று கொச்சையாகக் கூறுவார்கள்.

ஆனால் நுட்பமாக முன்னுக்கு வரும் ரகசியத்தை கவனிக்க மறுக்கிறார்கள். திருமண வீடுகளில் வீடுகளில் விழாக்களில் அவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். அவர் எந்த இடத்திலும் முக்கியத்துவம் பெற்று விடுவார். காரணம் நகைச்சுவையாக  சாமர்த்தியமாக பேசுவதே காரணம். ஆனால் நகைச்சுவை தரம் உடையதாக புதிது புதிதாக நினைத்து நினைத்து சிரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இடத்திற்குப் பொருந்தாத நகைச்சுவையை சொன்னால் இருக்கிற மரியாதையும் போய்விடும். இன்னும் கொஞ்சம் அதிக முக்கியத்துவம் பெறும் வழி என்ன?.

நகைச்சுவைகளை  கடந்து அதிக தகவல்களை வைத்திருக்கும் நபர் இன்னும் முக்கியத்துவம் பெறுவார். ரயில் நேரம், விமான நேரம்,பொருள்களின் விலை  என்று நுட்பமான விவரங்களை அறிந்து வைத்திருந்தால் நீங்கள் மேலதிகாரிகளால் மிகவும் விரும்பப் படுவீர்கள். தலைமை அவரை அதிகம் சார்ந்திருக்க விரும்பும்.புதிதாய் பொறுப்பேற்கும்  சூட்டிகையான கலெக்டர்கள் அலுவலகத்திலேயே விவரமான எழுத்தரை  தம் அருகிலேயே வைத்திருப்பார்கள். நிரந்தர முக்கியத்துவம் பெற ஆழமான ஈடுபாடு வேண்டும்.

ஒரு திருமண வீட்டில் ஆயிரம் பேர் வந்து போனாலும் அக்கறையுடன் பல விஷயங்களில் ஈடுபடுகிறவர் மறக்கப்பட முடியாத மனிதராகிறார்

திருமணத்தின் ஒவ்வொரு சடங்கிலும் அவர் தேடப்படுகிறார். கட்சியில் கடைசியில் சேர்ந்த ஒருவர் அளவு கடந்த ஈடுபாடு காட்டும் போது அவர் முக்கியத்துவம் பெற்று முன்னேறுகிறார்.

தலைவருக்கும் இரண்டாம் இடத்தில் இருக்கும்  சிலர் தலைவரின் மறைவுக்கு பின்  இரண்டாம் இடத்தில் இருக்க நேரிடும். ஆனால் கடைசியில் வந்தவர் முதல் இடத்தைப் பெற்று விடுவார். இரண்டாம் இடத்தவர்  புலம்புவார். நான்தான் சீனியர் என்பார். என்ன பயன்? அவருக்கு எப்போதும் இரண்டாம் இடமே கிடைக்கும். கட்சியின் மீது அவருக்கு ஈடுபாடு இரண்டாம் பட்சம். எனவே கட்சிக்கு  அவர் இரண்டாம் பட்சம். கல்லூரிகளில் வேலைக்குச் சேரும் ஒருவர் தனது துறையின் வேலைகளை மட்டும் அளந்து செய்தால் கல்லூரி நிர்வாகம் அவருக்கு சம்பளம் கொடுக்கும் மரியாதை கொடுக்காது.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியம் தரும் அத்திக்காய் சமையல்!
Motivation image

தனது பணி,தனது துறையில் பிறரது பணி , மாணவர் சேர்ப்பு,அவர்களது பிரச்னை, கல்லூரி விழாக்கள், கட்டட நன்கொடை என பல வேலைகளையும் தனது வேலையாக இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறவர் நிர்வாகத்தின் நம்பிக்கைக்குரியவராகிறார். நியமிக்கப்படாத  முதல்வராக முக்கித்துவம் பெறுகிறார். எந்த விஷயத்திலும் ஈடுபாடும் மேம்பாடும்  கைகோர்த்து நிற்கின்றன. முக்கியத்துவமும் முதலிடமும் முழு மூச்சுடன் ஈடுபட்டவருக்கான உரிமைச் சொத்து. இதை புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com