உணர்வு சார் நுண்ணறிவின் (Emotional intelligence) 5 வகைகளை தெரிந்து கொண்டால் வெற்றி உங்களுக்குத்தான்!

motivation Image
motivation ImageImage credit - pixabay.com

மோஷனல் இன்டெலிஜென்ஸ் எனப்படும். உணர்வு சார் நுண்ணறிவு என்பது உணர்ச்சிகளை உணரவும் நிர்வகிக்கவும் கட்டுப்படுத்துவதற்கும் உதவும் ஒரு திறன்.  இதை ஒரு சூப்பர் பவர் என்பார்கள். வாழ்வில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு இந்த உணர்வு சார் நுண்ணறிவு மிகவும் கைகொடுக்கும். அதன் 5 வகைகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக மனிதர்களுக்கு இரண்டு விதமான மூளைகள் இருக்கிறது உணர்ச்சிகரமான மூளை மற்றும் சிந்திக்கும் மூளை. இவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளை புரிந்து கொண்டால் உணர்ச்சிகளை திறம்பட நிர்வகிக்க முடியும்.

உணர்ச்சி நுண்ணறிவின் ஐந்து வகைகள்;

1. சுய விழிப்புணர்வு;

இது ஒருவரின் மனதில் அவரின் உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் கண்ணாடியை போன்றது. சுய விழிப்புணர்வுள்ளவர்கள் தங்கள் சொந்த உணர்வுகளை அங்கீகரிப்பதிலும் புரிந்து கொள்வதிலும் சிறந்தவர்கள். எடுத்துக்காட்டாக அவர் கோபமாக உணர்ந்தால் அந்த கோபத்தை அடையாளம் காணவும் அதை தூண்டியதற்கான காரணத்தையும் புரிந்து கொள்ள சுய விழிப்புணர்வு உதவுகிறது.

2. சுய கட்டுப்பாடு;

சுய கட்டுப்பாடு என்பது ஒருவரின் உணர்ச்சிகளின் தலைவன். தன்னுடைய உணர்ச்சிகளை எப்படி கட்டுப்படுத்துவது எப்படி ரியாக்ட் செய்வது?  என்பதைப் பற்றி அறிவதற்கு சுய கட்டுப்பாடு உதவுகிறது. சுய கட்டுப்பாடு உள்ளவர்களால் கோபமான, சோகமான உணர்ச்சிகளையும் தன் மனதை ஆக்கிரமிக்க விடாமல் அவற்றை வெளியே காட்டாமல் அமைதியாக நிர்வகிக்க முடியும்.

3. சமூக விழிப்புணர்வு;

இது மற்றவர்களின் உணர்வுகளுக்கு இசைவாக இருக்கும் எமோஷனல் ரேடார் போன்றது. சமூக விழிப்புணர்வு உள்ள மனிதர்கள் பிறர் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தாவிட்டால் கூட அவற்றை அடையாளம் காணுவதில் வல்லவர்கள். எம்பத்தி எனப்படும் பச்சாதாப உணர்வு இருப்பதால் பிறர் எப்படி நினைக்கிறார்கள், உணர்கிறார்கள் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடக்கிறார்கள். இதனால் சமூக சூழ்நிலைகளையும் பிற மனிதர்களையும் சுமுகமாக கையாளவும் வழி நடத்தவும் உதவுகிறது.

4. உறவு மேலாண்மை 

மனிதர்களுக்கு உறவு மேலாண்மை மிகவும் அவசியம். உறவு மற்றும் நட்புகளுக்கு இடையே மோதல் மற்றும் சண்டை சச்சரவு ஏற்பட்டாலும் அவற்றை அமைதியான முறையில் தீர்ப்பது எமோஷனல் இன்டலிஜென்ஸின் ஒரு பகுதி ஆகும். உறவினர் மற்றும் நண்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தால் நல்ல உறவு மேலாண்மை திறன் கொண்ட ஒருவர் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் ஒரு தீர்வை தருவார்.

இதையும் படியுங்கள்:
அழகுக்கு மட்டுமில்லை நெடுஞ்சாலை அரளிச் செடிகள்!
motivation Image

5. சுய உந்துதல்  (மோட்டிவேஷன்)

இது சுய உந்துதல் உள்ள ஒரு மனிதர் தன்னைத்தானே உற்சாகப்படுத்திக் கொள்ள முடியும். மனம் சோர்ந்து போகும்போது தனக்குத்தானே உற்சாகமூட்டிக் கொண்டு ஊக்கமும் ஊட்டிக்கொண்டு தங்கள் அவருடைய இலக்குகளை அடைய முயல்வார். தாங்கள் மேற்கொண்ட முயற்சியில் தடைகள் வந்தாலும் செயல்கள் கடினமாக இருந்தாலும் அவர்கள் உற்சாகமாக  கடினமாக உழைக்கிறார்கள். மிக விரைவில் பின்னடைவுகளிலிருந்து மீள்கிறார்கள். இவர்கள் எப்போதும் செயல்படுவதில் ஆர்வமுள்ளவர்கள். பிறருடைய உற்சாகத்திற்கும் காரண கர்த்தாவாக இருக்கிறார்கள். அவர்களையும் ஊக்குவிக்கிறார்கள்.

உணர்ச்சி நுண்ணறிவை ஒரு கருவிபெட்டியாக கற்பனை செய்து பார்க்க வேண்டும். இந்த ஐந்து வகைகளும் வெவ்வேறு கருவிகளைப் போன்றது. இவற்றை தேவையான இடங்களில் சூழ்நிலைகளில் பயன்படுத்தும் போது உணர்ச்சிகளை கையாளவும் பிறருடனான இணக்கமான நேர்மறையான உறவுகளை உருவாக்கவும் முடியும். தாங்கள் மேற்கொண்ட முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வெற்றி காணவும் முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com