இந்த 4 விஷயத்தைத் தெரிந்து கொண்டால், பிறரது கடுமையான வார்த்தைகள் உங்களை கஷ்டப்படுத்தாது!

Using Hard Words.
Using Hard Words.

மற்றவர்களின் கசப்பான சொற்களினால் உங்களுடைய பாதையில் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்களா? நமக்குப் பிடித்த சில செயல்களை நாம் செய்யும்போது எப்போதும் குறை கூற ஒருவர் இருந்துக்கொண்டுத்தான் இருப்பார்கள். சில பேர் அதனைக் கடந்து தங்களுடைய வேலையில் ஈடுப்படுவார்கள்.

ஆனால் சிலர் எவ்வளவு முயற்சி செய்தாலும் அதிலிருந்து வெளியே வரமுடியாமல் கஷ்டப்படுவார்கள். அவர்களுக்குத் தெரியும் அந்தக் கசப்பான வார்த்தைகளை நினைத்து கஷ்டப்படுவதினால் எந்த பயனும் இல்லை என்று. ஆனால் மூளைக்குத் தெரிந்தது மனதுக்குத் தெரியாது. அந்த சமையங்களில் இந்த நான்கு விஷயங்களை நினைவுக்கூர்ந்துப் பாருங்கள்.

1.  உங்களிடம் ஒருவர் எதாவது குறை கூறினாலோ பாராட்டினாலோ அதனை முதலில் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதை நிறுத்துங்கள். அவர்கள் தனிப்பட்ட முறையிலேயே கூறினாலும் கூட அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். ‘Take it easy policy’ ஐயே கடைப்பிடியுங்கள்.

2.  உங்களுடைய நண்பர்களின் பேச்சுகளையோ அல்லது உங்களுக்குப் பிடித்தமானவர்களின் பேச்சுகளையோ ஆராய்ந்து பார்ப்பதை நிறுத்துங்கள். அவர்கள் நேரான அர்த்தத்தில் கூறினாலும் கூட அதை நீங்கள் வீண் கற்பனை செய்துக் கொண்டால் விளைவு மன அழுத்தம்தான்.

3.  நீங்கள் ஒரு விஷயத்தை சரியாக செய்ய வேண்டுமென்றால், அவர் இதை கூறிவிடுவாரோ, அதை கூறிவிவாரோ என்ற பயத்தை விட்டுவிட வேண்டும். நீங்கள் செய்யும் வேலை உங்களுக்குத் திருப்திக் கொடுக்கும் வகையில் இருந்தாலே அது சிறப்பானதுதான். ஆகையால் பயங்களை விட்டு வேலையை சிறப்பாக செய்யுங்கள்.

4.  மேற்கூறிய அனைத்தையும் விட மிகவும் முக்கியமானது, நீங்கள் குறை கூறுவதை முதலில் நிறுத்த வேண்டும். ஒரு வேலையை சரியாக செய்ய முடியவில்லை என்றால், எங்கு தவறு செய்தோம் என்று யோசிக்க வேண்டுமே தவிர, என்ன சாக்கு சொல்லலாம் யாரைக் குறைக் கூறலாம் என்று எண்ணுவதை நிறுத்துங்கள். உங்களுடைய நடவடிக்கைகள் மட்டுமே மற்றவர்கள் உங்களிடம் அணுகும் முறையை தீர்மானிக்கும்.

இதையும் படியுங்கள்:
சிலர் மட்டும் எப்படி தனிமையை ரசிக்கிறார்கள் தெரியுமா? 
Using Hard Words.

இந்த நான்கு விஷயங்களைப் புரிந்துக்கொண்டாலே ஒருவர் உங்களை வார்த்தைகளால் காயப்படுத்தும்போது அதிலிருந்து வெளிவர உதவி செய்யும். அதேபோல் நீங்கள் ஒருவரைப் பார்க்கும் விதமே அவர் உங்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதை தீர்மானிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com