தாழ்வு மனப்பான்மையைத் தள்ளி வைத்தால் வெற்றி நிச்சயம்!

motivation image
motivation imageImage credit - pixabay.com

றே வாரத்தில் சிவப்பழகு என்ற விளம்பரம் தொலக்காட்சியில் மின்னுகிறது. இது இளைய மனசுகளில் தார்பூசுகிற அசிங்கம்.  சிவப்பழகு ஒரு உயர்ந்த விஷயம் என்று மூளைச்சலவை செய்கின்ற எந்த விஷயத்தையும் விரட்டி அடியுங்கள். காரணம் கறுப்பு தாழ்ந்ததல்ல. இது தாழ்வானது என்ற அபிப்ராயத்தை மறைவாக உண்டு பண்ணும் இந்தக் கொடிய விளம்பரம் இளைஞர்களை பலவீனப்படுத்தும்.

கறுப்பு நிறம் வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல. காட்டிலும் மேட்டிலும்  கழனிகளிலும்  பாடுபடும் உழைக்கும் வர்க்கத்தின் தோல் கருத்துப் போவது உழைப்பைப் பாராட்டி  சூரியன் கொடுத்த பட்டமளிப்பு. அல்லது பாரம்பரியத்தின் பரிசளிப்பு. அது பழிக்கப்படும் என்றால் நிழலில் ஒளிந்து கொள்ளும் உழைக்காத வெள்ளை கொண்டாடப்படும் என்றால் அதைச் சகித்துக் கொள்ளாதீர்கள். சலவைக் கல்லில்  கிரானைட்டுகளில் ஜெட் ப்ளாக் தான் விலை அதிகம். சிலைகளில் கூட கறுப்புக் கல்லில்தான்  கலை அதிகம். இந்தியக் கடவுளான இராமனும் க்ருஷ்ணரும் கறுப்ப. கிளியோபாட்ரா கறுப்புதான். அப்புறம் என்ன கறுப்பினம் மீது வெறுப்பு. நாம் ஒரு சராசரி இந்திய நிறத்தில் இருக்கும் போது வெட்கப்பட என்ன இருக்கிறது.

அமெரிக்காவில் ஒரு பள்ளி வாசலில் பலூன் வியாபாரி வண்ண பலூன்களை பறக்க விட்டிருந்தான். அவனது வண்டியில் நீலம் பச்சை கறுப்பு ஏன் பல நிறங்களில் பலூன்கள் இருந்தன. கறுப்பு பலூனை எந்த குழந்தையும் வாங்கவில்லை. ஒரு குழந்தை பலூன் வியாபாரியிடம் கறுப்பு பலூன் பறக்குமா? என்று கேட்க  "கறுப்பாக  இருப்பது உயரப் பறக்க ஒரு தடையே அல்ல. உயரப்போக நிறம் ஒரு தடையல்ல. உள்ளே இருக்கும் காற்றுதான் முக்கியம்" என்றான். அப்படியானால் கறுப்பு பலூன் கொடுங்கள் என்று அந்த குழந்தை வாங்கியது. அந்தக் குழந்தைதான் நிறவெறியை உலுக்கி அசைத்த மார்ட்டின் லூதர் கிங்.

இதையும் படியுங்கள்:
கொரிய பெண்களின் அழகு ரகசியம் தெரியுமா?
motivation image

இந்தியர்களின் கறுப்பு நிறத்தை ஒரு வெள்ளைக்காரர் கேலியாகப் பேசியபோது டாக்டர் இராதாகிருஷ்ணன் இந்தியர்கள் கடவுள் படைத்த கறுப்பு கேக்குகள். ஆனால் பக்குவமான கேக்குகள். வெள்ளைக் கேக்குகள் அரைவேக்காடுகள் என்றார்.

தாழ்வு மனப்பான்மையைத் தள்ளி வையுங்கள் வெற்றி நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com