

வாழ்க்கை நமக்கு பல நேரங்களில் பல சந்தர்ப்ப சூழல்களில் சில பாடங்களையும், அனுபவங்களையும், சில வகை ஏற்ற இறக்கங்களையும் கற்றுக் கொடுத்துவிட்டு போகிறது. அதில் ஏற்றம் வரும் வேளையில் நமது மனது புளகாங்கிகிதம் அடைவதும், தாழ்வு நிலை வரும்போது மனம் நொந்து போவதும் வாடிக்கையான நிகழ்வுதான்.
அது சமயம் நமக்கு தேவை மனோதிடம்தான். தெய்வத்திடம் நாம் வேண்டிக்கொள்வதும் எனக்கு தைரியமும், ஆரோக்கியத்தையும், நல்ல சிந்தனை களையும், கொடு என்பதே முதலாவதாக இருக்க வேண்டும். எப்போதும் வைராக்கியம் கடைபிடிக்க வேண்டும்.
புது உற்சாகத்தையும் உத்வேகத்தையும் வளா்த்துக் கொள்ள வேண்டுமே! நிலைமாறும் மனது, நிரந்தரமில்லா உலகு என்ற சூழலுக்கு ஏற்ப தெய்வ நம்பிக்கையை கைவிடாமல் தொடா் முயற்சியில் எதிா்நீச்சல் போடவேண்டும். அதுவே நமக்கான பொிய மூலதனமாகும்.
உண்மையாக இருந்து என்ன பயன் எனக்கு ஏன் தோல்வி வந்தது என தெய்வத்திடம் கோபப்படுவதால் என்ன பிரயோஜனம், ஒன்றும் கிடையாது! தெய்வம் உன்னை சோதிக்கிறாா் என்ற பொருள்கொண்டு விடாமுயற்சி, நல் ஒழுக்கம், அடுத்துக்கெடுக்காத மனது, அனைவரிடமும் அன்பு செலுத்துதல், வந்து போன துயரங்களை மறந்துவிட்டு நாளை நம் கையில் என்ற குறிக்கோளோடு பகைமை விடுத்து, பண்பாடு காத்து, நோ்மை தவறாமல் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குங்களேன். அப்போது கிடைப்பது என்னவோ என்ன வெற்றிதானே!.
பாரதியாா் பாடலில் வருவது போல
"எந்த ஏற்றத்திற்கும் ஒரு இறக்கம் உண்டு"
"எந்த துயரத்திற்கும் ஒரு இறுதி உண்டு
"எந்த முயற்சிக்கும் பலன் உண்டு"
மேற்கூறிய மூன்று வாசகங்களையும் படித்து அதன் அர்த்தங்களை உள் வாங்கிக்கொண்டு அதன் பிரகாரம் நாம் நோ்மறை எண்ணங்களுடன் இலக்கு நிா்ணயம் செய்து பயணித்தாலே போதும் வெற்றிக்கனியை தங்கு தடையின்றி பறித்துவிடலாமே!
அதற்கு தேவை நமக்குள் இருக்கும் பயம் தெளியவேண்டும்.
நமக்கு வந்த தோல்வி கண்டு நம்மிடம் குடிஅமர்ந்துள்ள தாழ்வு மனப்பான்மை விலகவேண்டும். நம்முடனேயே பழகி நமது வசதி வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நமக்கு ஒரு துயரம் என்று வந்தவுடன் சப்தமில்லாமல் நம்மிடமிருந்து விலகிய சுயநல உறவு மற்றும் நட்பு வட்டங்களை அடையாளம் தொிந்து அவர்களிடமிருந்து விலகுவதும் மிகவும் நல்ல செயலாகும்.
எந்த துயரமும் நம்மிடம் தொடர்வதில்லை. எந்த துயரமும் நிரந்தரமானதல்ல, எதற்கும் ஒரு வகையில் வடிகால் உண்டல்லவா? அதேபோல எந்த முயற்சிக்கும் நல்ல பலன் கிடைக்குமே!
ஆக, உண்மையும், நோ்மையும் ஒரு போதும் பொய்யிடம் தோற்பது இல்லை எனும் தாரகமந்திரத்தை கடைபிடித்து, தாய் தந்தை மனைவி இவர்களின் துணையோடு நம்மால் முடியும் என்ற நம்பிக்கைப்பாதையில் வாழ்க்கை கற்றுத்தந்த பாடத்தினை நன்கு பயின்று தோ்வினை எதிா்கொள்ளுங்கள். அதுசமயம் அதிக மதிப்பெண்கள் பெற்றுதோல்வி தவிா்த்து வெற்றிவாகை சூடமுடியுமே! சரிதானே சகோதர சகோதரிகளே!