உள்ளத்தை உயர்த்தும் 5 கற்பனை சக்திகள்!

Motivational articles
Imagination powers
Published on

 ‘’வெறுமனே  கற்பனைக் கோட்டை கட்டாதே’’;  “ஓவரா கற்பனையில மிதக்காதே ‘’ என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. பொதுவாக குழந்தைகளுக்கு கற்பனை வளம் நிறைய இருக்கும். நடைமுறை வாழ்க்கையின் சிக்கல்களும் பிரச்னைகளும் குழந்தைகளுக்குத் தெரியாது. தனக்கு விருப்பமானதை கற்பனை (Imagination powers) செய்துபார்ப்பார்கள். அவர்களது மனது அனைத்து மீதும் நம்பிக்கை வைக்கும். வளர வளர நிதர்சன உலகின் யதார்த்தம் புரிந்து ஒரு கட்டத்தில் கற்பனை செய்வதை நிறுத்திவிடும்.

நாமும் குழந்தையைப்போல அவ்வப்போது கற்பனை உலகத்திற்கு செல்வது நல்லது. இப்படி கற்பனை செய்வதால் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும். சிக்கல்களும் மன அழுத்தங்களும் நிரம்பிய இன்றைய வாழ்க்கை முறையில் தினமும் நேரம் ஒதுக்கி கற்பனை செய்யவேண்டும்.

1. ஞாபகசக்தியை அதிகரிக்கும்; 

மக்குப் பிடித்தவற்றை காட்சிகளாக கற்பனை செய்யும்போது மூளைப் பிரதேசம் தூண்டப்பட்டு, நிறைய நியூரான்கள் உருவாகும். இது ஞாபகசக்தியை அதிகரிக்கும். தொடர்ந்து கற்பனை செய்துகொண்டே இருப்பது நம்மை இளமையாக வைத்திருக்கும். நம் ஆயுளை கூட்டும். இதை ஒரு பயிற்சியாக எடுத்துக் கொண்டால் வயது முதிர்ந்த காலத்தில் டிமென்சியா எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.

2. இலக்குகளை அடைய வழி செய்யும்:

ரு இலக்கை வைத்துக்கொண்டு அதை அடைய நாம் முயற்சி செய்யும்போது கற்பனை தூண்டப்பட்டு, மூளையும் நன்றாக ஆக்டிவேட் ஆகிறது.  தேவையான திட்டங்களைப் போட்டு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தத்தைக் குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மீன்வளம்!
Motivational articles

3. சிக்கலை தீர்ப்பதற்கு உதவுகிறது:

வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை, பிரச்னைகளை கற்பனையின் மூலம் புதிய யுக்திகளை உருவாக்கி, நிஜ வாழ்வில் அவற்றைக் கையாண்டு சமாளிக்கலாம். அது சிறியதோ, சமூக பிரச்னையோ எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம்.

4. தன்னம்பிக்கையை உயர்த்துகிறது:

ம்முடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் நாம் நம்ப ஆரம்பிக்கும்போது கற்பனையின் வாயிலாக அவற்றை படங்களாகப் பார்க்க முடியும். பயம், சந்தேகம் போன்றவை விலகி, நம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செயல்திறனும் ஆற்றலும் கூடும்.

5. பிறர் மேல் அனுதாபத்தை வளர்க்கச் செய்யும்:

ற்பனை சக்தியின் மூலம் பிறருடைய பிரச்னைகளை அவரவர் கோணத்தில் சரியாக புரிந்துகொள்ள முடியும். இதனால் மன அழுத்தத்தைக் குறைத்து சிறப்பாக உறவுகளைப்பேண முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com