வாழ்வில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு ஆணுக்குமான முக்கியப் பணிகள்!

Motivation Image
Motivation Imagepixabay.com

உடல் மன ஆரோக்கியம்;

த்தான உணவுகளை எடுத்துக் கொள்வதுடன் தினமும் 30 லிருந்து 45 நிமிடங்கள் முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். தேவையான அளவு தூக்கம் இருக்க வேண்டும். இதனால் உடல், மன ஆரோக்கியம் நன்றாக வேண்டும். எனவே செய்யும் வேலைகளில் கவனம், தன்னம்பிக்கை, சுய ஒழுக்கம், அவர்களுக்கு கிடைக்கும்.

சுய முன்னேற்றத்திற்கு நேரம் ஒதுக்குதல்;

ன்னுடைய சுய முன்னேற்றத்திற்காக சில நிமிடங்களை ஒதுக்க வேண்டும். தங்கள் வாழ்வில் உயர வழிவகுக்கும் புத்தகங்களை படிக்கலாம், அல்லது பாட்காஸ்ட்டுகளை கேட்கலாம். ஆன்லைன் கோர்ஸ் ஏதாவது செய்யலாம். தினமும் 30 நிமிடங்களை ஒதுக்கி வாழ்வில் தன்னை உயர்த்தும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அறிவுத் தேடலுக்கு அந்த 30 நிமிடம் அவசியம்.  ஒரு புதிய விஷயம், புதிய மொழியை கற்றுக் கொள்வது, அல்லது கணித திறமைகளை கற்றுக் கொள்வது, என நேரம் ஒதுக்க வேண்டும்.

நல்ல நட்பு, உறவு வட்டம்;

ங்களை சுற்றிலும் நல்ல ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்வது மிக மிக அவசியம். அலுவலகத்தில், வீட்டில், உறவினர்கள் மத்தியில்  தனக்கு உதவக்கூடிய நல்ல நண்பர்கள் உறவினர்கள் பணியாளர்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவர்களுக்கும் இவர்கள் உதவ வேண்டும். அவர்களுக்கான நேரத்தையும் தவறாமல் இவர்கள் ஒதுக்க வேண்டும்.

நேர மேலாண்மை, பொருளாதார மேலாண்மை;

நேர மேலாண்மையும் பொருளாதார மேலாண்மையும் கற்றுக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் கண்டபடி பணத்தை செலவழித்து விரயம் செய்வது கூடாது. அதேபோல தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்தி நேரத்தையும் வீணாக்கக்கூடாது. பணத்தைப் போலவே நேரமும் மிகவும் மதிப்பு வாய்ந்தது. பணம், நேரம் இவற்றை முறையாக திறமையாக செலவழிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
10 நிமிடத்தில் செய்யலாம் இந்த இஞ்சி பூண்டு துவையல்! 
Motivation Image

உணர்ச்சிகளை திறமையாக கையாள தெரிந்துகொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்கள், அலுவலகத்தில் தன்னுடைய பணியாளர்கள், உடன்  வேலை செய்பவர்கள், வியாபாரம் சம்மந்தப்பட்ட ஆட்கள், சமூகத்தில் பழகும் சக மனிதர்கள் இவர்களிடம் பழகும்போது, உணர்ச்சிகளை திறமையாக கையாள தெரிந்துகொள்ள வேண்டும். மனஅழுத்தம் தரக்கூடிய கடினமான விஷயங்களில் உணர்வுகளில் சமநிலையை கடைபிடித்தால் மட்டுமே  மனிதர்களை சரியாக கையாள முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com