மாணவர்களுக்கான ஊக்கத்தரும் தத்துவங்கள்!

Motivation Image
Motivation Imagehttps://phys.org/news
Published on

வாழ்விலேயே மிக மிக மன அழுத்தம் தரும் நாட்கள் என்றால் அது மாணவர்களின் தேர்வு நாட்கள்தான். பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் அவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டுமென்று திரும்பத் திரும்ப கூறுவார்கள். அவர்கள் நிலையிலிருந்து பார்த்தால் அவர்கள் கூறுவது சரிதான். ஆனால் மாணவர்களுக்கு ‘ நாம் அதிகமாக இன்னும் உழைக்க வேண்டுமே’, ‘ நாம் ஒருவேளை நல்ல மதிப்பெண் எடுக்கவில்லையென்றால் என்னாகும்’ போன்ற பயத்தினால் மன அழுத்தங்கள் அதிகமாகவே ஆகும்.

அழகான நாட்களை மட்டுமே கழித்த உங்களுடைய  குழந்தைகள் திடீரென்று ஒருவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் கடமைக் கொண்டவர்களாக ஆகும் பொழுதும், அடிக்கடி சவால்கள் சந்திக்கும் பொழுதும் நிச்சயம் மன அழுத்தம் கொள்வது இயல்பு. முடிந்தவரை உங்கள் எதிர்ப்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ளுங்கள் அல்லது அதனை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருங்கள்.

இதுவே பிள்ளைகளின் முதல் கட்ட மன அழுத்தத்தைக் குறைக்கலாம். மேலும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு ஊக்கம் தரும் தத்துவங்கள் சொல்வதும் அவர்களுடைய மன அழுத்தத்தைப் படிபடியாக குறைக்கும்.

அவர்களுடைய கற்றலின் திட்டம் சொதப்பலாகும்போது:

ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும்.

அவர்கள் தேர்வின் முடிவில் நம்பிக்கையில்லாத போது:

நம்பிக்கை வெற்றியோடு வரும். ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும்.

தேர்வு நேரங்களில் மாணவர்கள் மனம் அலைப்பாய்வது தெரிந்தால்:

மனம் உங்களைக் கட்டுப்படுத்தும் முன் உங்கள் மனதை நீங்கள் கட்டுப்படுத்துங்கள்.

முயற்சிகளில் தோல்விகளை சந்திக்கும்போது:

நீங்கள் நிறுத்ததாத வரை எவ்வளவு மெதுவாக சென்றாலும் பரவாயில்லை.

ஒரு விஷயத்திற்காக தயங்கும்போது:

தைரியம் பயத்தை விட ஒருப்படி மேலே உள்ளது.

மதிப்பெண் குறைவாக வாங்கினால்:

அறிவை விட முக்கியமானது, உங்கள் இலக்கை அடைய உங்களிடம் இருக்கும் விருப்பம்.

படிப்பதற்கு அதிகம் இருக்கும்போது:

1.   மலையைப் பார்த்து மலைத்து விடாதே, மலை மீது ஏறினால் அதுவும் உன் காலடியில்.

2.   உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்.

படிப்பதற்கு சிரமப்படும்போது:

1.   இன்று நீங்கள் உணரும் வழி நாளை நீங்கள் உணரும் பலமாக இருக்கும்.

2.   நாம் வலியைத் தழுவி , அதை நமது பயணத்திற்கு எரிபொருளாக எரிக்க வேண்டும்.

எதாவது தடங்கள் வந்தால்:

ஒரு சிக்கல்  சிறந்தவற்றை செய்வதற்கான வாய்ப்பாகும்.

தோல்விகளை சந்திக்கும்பொழுது:

விழுவதெல்லாம் எழுவதற்கு தானே தவிர அழுவதற்கு இல்லை.

இதையும் படியுங்கள்:
சூப்பர் சுவையில் மசாலா சப்பாத்தி!
Motivation Image

மேலும் அனைத்து சூழ்நிலைகளிலும் தெரிந்துக்கொள்ள வேண்டிய தத்துவங்கள்:

1.   பழைய பழக்கங்கள் புதிய பாதைகளைத் திறக்காது.

2.   நீ இன்று செய்யும் சிறு சிறு முயற்சிகள் நாளை மாறும் வெற்றியின் ஆணி வேர்கள்.

3.   சிந்தனை மட்டும் செய்ய தெரியுமானால் நீயே உனக்கு மிகச்சிறந்த ஆலோசகன்.

4.   உறுதியுடன் எழுந்திருங்கள், திருப்தியுடன் படுக்கைக்கு செல்லுங்கள்.

5.   நீங்கள் கட்டியெழுப்பும் சுவர்களால் மட்டுமே நீங்கள் அடைக்கப்படுகிறீர்கள்.

காலையில் ஊக்கப் பாடல் கேட்டு எழுவதும், ஊக்கம் தரும் தத்துவங்கள் கேட்டு எழுவதும்தான் நம்மை எப்போதும் உற்சாகமாக வைத்துக்கொள்ளும் கருவிகள். உற்சாகமே வெற்றியின் ரகசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com