பாரதியாரின் புதுமைப்பெண் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

Motivation Image
Motivation Image

பெண் விடுதலையின் பொருட்டாக தர்ம யுத்தம் தொடங்குங்கள். நாம் வெற்றி பெறுவோம்.நமக்கு பராசக்தி துணை புரிவாள்.

பெண் தாழ்வாகவும் ஆண் மேலாகவும் கருதி நடத்தும் முறைமை தவறு. அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம். அநீதிகளுக்கு எல்லாம் கோட்டை, கலியுகத்திற்கு பிறப்பிடம்.

ஸ்திரீகளுக்கு ஜீவன் உண்டு; மனம் உண்டு; புத்தி உண்டு; ஐம்பதங்கள் உண்டு. அவர்கள் செத்த இயந்திரங்கள் அல்ல. உயிருள்ள செடி கொடிகளைப் போலவும் அல்ல. சாதாரண ஆண்மாதிரியேதான் புற உறுப்புகளில் மாறுதல், ஆத்மா ஒரே மாதிரி.

ஸ்திரீரிகள் தமக்கு இஷ்டமானவரை விவாகம் செய்து கொள்ளலாம். விவாகம் செய்து கொண்ட புருஷனுக்கு ஸ்திரீ அடிமை இல்லை. உயிர் துணை வாழ்க்கைக்கு ஊன்றுகோல்; ஜீவனிலே ஒரு பகுதி.

நம்மைப் போன்றதொரு ஆத்மா. நமக்கு அச்சத்தினால் அடிமைப்பட்டிருக்கும் என்று நினைப்பவன் அரசனாயினும், குருவாயினும், புருஷனாயினும் மூடனைத் தவிர வேறில்லை. அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது. அச்சத்தினால் மனுஷ்ய ஆத்மா வெளிக்கு அடிமைபோல நடித்தாலும் உள்ளே துரோகத்தை வைத்துக் கொண்டுதான் இருக்கும்.

ஸ்திரீரிகள் புருஷனிடம் அன்புடன் இருக்க வேண்டுமானால், புருஷர் ஸ்திரீரிகளிடம் அசையாத பக்தி செலுத்த வேண்டும். பக்தியே விளைவிக்கும்.

பெண்களுக்கு விடுதலை கொடுத்ததினால் ஜனசமுகம் குழம்பிப் போய்விடும் என்று சொல்லுவோர் பிறர் தமது கண்முன் சுயேச்சையுடன் வாழ்வதை தான் பார்க்கக் கூடாது என்று அசுயையால் சொல்லுகிறார்களே ஒழிய வேறொன்றும் இல்லை.

இதையும் படியுங்கள்:
போரா குகைகள் எங்கே இருக்கு தெரியுமா?
Motivation Image

ஸ்திரீகளை மிருகங்களாக வைத்து நாம் மாத்திரம் மகரிஷிகளாக முயலுதுதல் மூடத்தனம். பெண் உயராவிட்டால் ஆண் உயராது.

ஸ்திரீ சுதந்திரம் ஆத்ம ஞானத்தை ஆதாரமாக உடையது.

மகாசக்தியே தாய் அல்லது மனைவி வடிவத்தில் மனிதன் உயிருக்கு துணை புரிகிறாள். ஆதலால் பெண்ணை அதிசயப்படுத்திய வாழ்க்கையே தேவ வாழ்க்கை.

பாரதியார் பெண் உரிமை பற்றி அப்பொழுதே புதுமைப் பெண்களை உருவாக்க அவர் கூறிய எழுச்சிமிகு வார்த்தைகள் எவ்வளவு அற்புதமானவையாக உள்ளன. பெண்களுக்கு இத்தனை சுதந்திரமும் வேண்டும் என்று அன்றே கனவு கண்டார். பெண்ணுக்கு ஆண் அடிமை இல்லை என்று அன்று ஆணித்தரமாக எடுத்துரைத் திருக்கிறார். பெண்கள் புதுமைப் பெண்களாக பாரதியார் கண்ட கனவை நினைவாக்க எழுச்சிமிகு நடை போட வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com