
Intrinsic Motivation: உள்ளார்ந்த உந்துதல் என்பது, வெளிப்புற வெகுமதிகள் இல்லாமல், ஒரு செயலில் ஈடுபடத் தூண்டும் ஒரு உள் உந்துவிசையாகும்.
உள்ளார்ந்த உந்துதல் என்பது வெளிப்புற வெகுமதிகளுக்கான ஆசையை விட, அதனால் கிடைக்கும் உள்ளார்ந்த திருப்தியின் காரணமாக ஒரு செயலில் ஈடுபடுவதற்கான உந்துதலைக் குறிக்கிறது. இது, ஒரு செயலில் ஈடுபடுவதால் கிடைக்கும் இன்பம், ஆர்வம் அல்லது திருப்தி ஆகியவற்றை குறிக்கிறது.
அதாவது, ஒரு வேலையைச் செய்யும்போது, நீங்கள் அந்த வேலையில் ஈடுபடுவதால் கிடைக்கும் மனநிறைவை விரும்புகிறீர்கள் என்றால், அது உள்ளார்ந்த உந்துதல் ஆகும். ஒருவர் கடமையை விட உள் உந்துதலால் செயல்படும்போது, சிறந்த மன ஆரோக்கியத்தை அனுபவிப்பார். உள்ளார்ந்த உந்துதல் என்பது உங்களுக்குள் திருப்தியைக் கண்டறிவதற்கான வழிமுறையாகும்.
இது ஒருவர் தனது சந்தோஷத்திற்காக ஏதாவது ஒரு செயலை செய்யத் தூண்டும் உள் இன்பம், ஆர்வம் அல்லது சவாலின் உணர்வாகும். எடுத்துக்காட்டாக, ஒருவர் ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது அவர் அந்த மொழியின் மீதான ஆசையால் இருக்கலாம், ஆனால் அவர் அந்த மொழியை கற்றால் பதவி உயர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பால் அல்ல என்று பொருள்படும். உள்ளார்ந்த உந்துதல் பெரும்பாலும் அதிக அளவிலான ஈடுபாடு, படைப்பாற்றல் மற்றும் திருப்தியுடன் தொடர்புடையது.
உள்ளார்ந்த உந்துதல் ஒருவர் அவர் விரும்பும் ஒரு செயலை தன்னார்வத்தோடு செய்ய, அவர்கள் அனுபவிக்கும் ஒரு பொழுதுபோக்கைத் தொடர அல்லது அவர்களுக்கு சவால் விடும் ஒரு திட்டத்தில் பணியாற்ற வழிவகுக்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட கட்டுரையைப் படிப்பதற்கான உங்கள் உந்துதலை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். கட்டுரை படிக்க உங்களுக்கு ஆர்வம் இருப்பதாலும், அதன் தலைப்பை பார்த்தவுடன் உங்களுக்குள் ஏற்படும் ஒரு உந்துதலாலும், அந்த தலைப்பை பற்றி மேலும் அறிய விரும்புவதாலும் நீங்கள் இதைப் படிக்கிறீர்கள் என்றால், நீங்கள் உள்ளார்ந்த உந்துதலால் செயல்படுகிறீர்கள் என்று அர்த்தம்.
நீங்கள் ஒரு தோட்டத்தை அமைக்கலாம் அல்லது ஒரு படத்தை வரையலாம் அல்லது ஒரு கதை எழுதலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது என்றாலும், அதற்கு மாறாக, நாம் விரும்புவதால் அவற்றைச் செய்கிறோம். அது நம்மை மகிழ்ச்சியடையச் செய்கிறது. ஒரு கடினமான சிக்கலைத் தீர்க்கும்போது, ஒரு புதிய திறமையில் தேர்ச்சி பெறும்போது ஏற்படும் திருப்தி உணர்வு இது.
நீங்கள் ஒரு செயலை உங்களின் மனதிருப்திக்காக, சந்தோஷத்திற்காக செய்யும்போது, நீங்கள் உள்ளார்ந்த உந்துதலால் அவ்வாறு செய்கிறீர்கள்.
அதனால் கிடைக்கும் பரிசுகள், பணம் அல்லது பாராட்டு போன்ற சில வகையான வெளிப்புற வெகுமதிகளைப் பெறுவதற்காக அல்ல, மாறாக உள்ளிருந்து எழும் உள்ளார்ந்த உந்துதலால் என்று அர்த்தம்.
நீங்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும்போது அல்லது ஒரு பணியில் நீங்கள் அதிக திறமையானவராக மாறும்போதும், அதில் உங்கள் திறமையைக் காணும்போது அவை உங்களுக்கு முன்னேற்ற உணர்வைத் தரக்கூடும். நாம் ஒருசெயலை செய்யும் போது, அதாவது ஒரு படத்தை வரைகிறோம் என்றால் அதை சுவாரஸ்யமாக்குவது மற்றும் அதில் உங்கள் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு உள்ளார்ந்த உந்துதல் நம்மை தூண்டுகிறது.
உங்கள் சொந்த வாழ்க்கையில், உள்ளார்ந்த உந்துதலால் தூண்டப்படும் பல விஷயங்கள் இருக்கலாம். பணம் சம்பாதிப்பதற்காக நாம் நம் முழு நேரத்தையும் வேலையில் செலவிட்டால், வாழ்க்கையின் எளிய இன்பங்களை நாம் அதிகம் இழக்க நேரிடும் என்பதை மறக்க வேண்டாம்.