மகிழ்ச்சி என்பது தாற்காலிகமானதா நிரந்தரமானதா?

happiness
Happiness
Published on

ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம்‌ ஒன்றை விரும்பியிருப்போம்.‌ அதுதான் மகிழ்ச்சி என நினைத்திருப்போம். நினைத்ததும் விரும்பியதும், கையில் கிடைத்துவிட்டால், அது தரும் மகிழ்ச்சி மட்டுமே உண்மையான மகிழ்ச்சி என நினைத்துக் கொண்டிருப்போம். மற்றவைகள் கண்ணுக்குப் புலப்படாது. வயது ஏற‌‌ ஏற‌, சிறு வயதில் ஆனந்தம் என நினைத்துக் கொண்டு செய்த செயல்கள்  எல்லாம் அற்பமாக தெரியும். 

எது தற்காலிக மகிழ்ச்சி எது நிரந்தரமானது என அவ்வளவு எளிதில் எந்த வயதிலும் நம்மால் பிரித்துப் பார்க்க முடிவதில்லை.

நாம்‌ தினம் தினம் செய்து கொண்டிருக்கும் சில செயல்களுள், இதுதான்  நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது, இது தொடரும், இதை நாம் வாழ்நாள் முழுவதும் உற்சாகத்தோடு செய்து கொண்டே இருப்போம் என நினைத்துக் கொண்டிருக்கையில், ஏதாவது ஒரு சில தடைகளின் மூலம் அந்தச் செயல்கள் நிறுத்தப்பட்டு, 'இது வரை அனுபவித்த மகிழ்ச்சியை இனிமேலும் அனுபவிப்போமா?' என்ற கேள்வி வரும்.

எப்போது நம்முள் கேள்விகள் எழுகிறதோ, அப்போதே நம்மை நாமே கொஞ்சம் சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நேற்று வரை  ஆனந்தம் என நினைத்து செயல்படுத்திக் கொண்டிருந்த செயல்கள் இன்று‌ முதல் செயல்படுத்த முடியாது என்ற நிலையில், மனம் என்ற ஒன்றை‌ எப்படிக் கையாள்வது? 

நிஜத்தில் நிரந்தரமான மகிழ்ச்சி என்ற  ஒன்றை எங்கு எப்படி அடைவது? 

வாழ்க்கையின்‌ சூட்சமம் இந்தத் தேடலில் தான்‌ அடங்கியிருக்கிறதா?

தேடல்களுக்கான‌ விடைகளை அளிக்க நம்மிடம் நிறைய அறிவுரைகள் கொட்டிக் கிடக்கின்றன. அறிவுரைகளை அவ்வளவு எளிதில் நம்மால் புரிந்து கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியவே முடியாது. அப்படி ஏற்றுக் கொண்டு விட்டால் மனிதர்களில் குறைந்தபட்சம் ஒரு சதவீதம் பேராவது ஞானிகள் ஆகி இருப்போம்.‌

இதையும் படியுங்கள்:
சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?
happiness

The root of suffering is attachment என்ற ஒன்றை‌ நாம்‌ கேள்விப்பட்டிருப்போம். அந்தப் பற்றை‌ எப்படி புறந்தள்ளுவது? 

நமக்கு ஒன்றின் மீது ஏற்பட்ட பற்று தான், அது  உண்டாக்கிய மகிழ்ச்சியை‌விட,  வருத்தங்களை பன்மடங்காக திருப்பித் தருகிறது என தெரிய வருகையில்... எப்படி அதிலிருந்து மீள்வது என நினைக்கையில்... 

ஒரே‌ ஒரு‌ பதில் தான் மிஞ்சும்.

நாம் செய்யும் செயல்களின் பால் எந்தப் பற்றும் இல்லாமல், மகிழ்ச்சியை வெளியில் தேடாமல், ஆத்ம திருப்தியுடன் உள்ளுக்குள் தேடும் போது .....‌ எந்த மகிழ்ச்சியும் நிரந்தரம் தான்....

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com