(நான்) பேசுவது சரியா?

motivation Image
motivation ImageImage credit - pixabay.com

பேசுவது ஒரு கலை. பிறருக்குப் புரியும்படி தேவையான வற்றை மட்டும் தெளிவாகப் பேசுவது முழுமையான பயன் அளிக்கும். பேசும்பொழுது பிறருக்கு பழக்கப்பட்ட சுலபமான வார்த்தைகளை கையாள்வது முக்கியம். அடுக்கு மொழிகள், வாசகங்கள் நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையில்லை. அவற்றை ஒதுக்குவது நலம் தரும்.

பேசுவது நாம் நினைப்பதை பிறரிடம் சரியான முறையில் கொண்டு சேர்க்கும் செயல்முறை. (communication process).
அதன் மூலம், நோக்கம் (purpose) பூர்த்தியானால், குறிப்பிட்ட நபருடன் பேசியது பலன் தரும்.
பேசுவதற்கு முன்பு, யோசித்து பேசுவது அவசியம். என்ன பேசுகிறோம், எப்படி பேசுகிறோம், எதற்காக அந்த சமயத்தில் பேசுகிறோம் என்று அறியாமலேயே, பலர் பேசுவதைக் கேட்டு இருக்கிறோம். அவ்வகை பேச்சுகள், நேரம் விரயம் அடைய செய்வதுடன், குழப்பமும் உண்டு பண்ணும்.

பேசுவதில் முக்கியமான அம்சம், நாம் பேசியது கேட்டவருக்குப் புரிந்ததா என்று நாம் மறக்காமல் தெளிவு படுத்திக்கொள்ளவதுதான். பல சமயங்களில் பேசியவர் கூறவந்தது ஒன்றாகவும், கேட்டவர் புரிந்துக்கொண்டது வேறு ஒன்றாகவும் இருந்து, அப்பேச்சிற்கு பலனே இல்லாமல் போவதுண்டு.

உதாரணமாக, ஒருவர் மற்றவரிடம், நாளை நான் வரமுடியாது என்று கூறுகிறார். கேட்டவர் கவனம் செலுத்தாமல் கேட்டு, நாளை அவர் வரப்போகிறார் என்று புரிந்துக்கொண்டால், என்னவெல்லாம் ஆகும்.
நாம் கூறுவதை அடுத்தவர் புரிந்துக்கொண்டாரா என்று கேட்டு தெளிவு செய்துகொண்டால், இரு நபர்களுக்கும் பெரிதும் உதவும். அப்படி இல்லாமல், நாம் சொல்லுவதை அவர் கேட்டு புரிந்துக்கொண்டு விட்டார் என்ற யுகத்தில் (assumptiom) சரி பார்க்க (check) தவறி விட்டால் நஷ்டம் ஏற்படும்.

ஒருவர் சொல்வதை (communication) கேட்டுக்கொள்பவர் சரிவர புரிந்துக்கொள்ளாமல் தோராயமாகவோ, அரைகுறையாகவோ அறிந்து அல்லது புரிந்துக்கொள்வது, தொடர்பு இடைவெளி ஏற்பட செய்கின்றது .
(Communication Gap) இதுவே வாழ்க்கையில் பல வகையான பிரச்னைகளுக்கு அடித்தளம் (base ) ஆக மாறுகின்றது. உடனுக்கு உடன் சரி செய்யாவிட்டால், விஸ்வரூபம் எடுத்து பல்வேறு சிக்கல்கள் ஏற்படக் காரணமாகிறது.

இதையும் படியுங்கள்:
மூலிகைப் பொருட்களின் குணங்களும், உபயோகங்களும்!
motivation Image

பேசுவதை தவிர எழுத்து மூலம் எழுதியும் தகவல்கள் பரிமாற்றம் செய்து கொள்ளலாம் (written communication).
அந்த முறையிலும் தொடர்பு இடைவெளிக்கு (Communication gap) சாத்தியம் உண்டு. எழுதும்பொழுது பொருத்தமான, தெளிவு மிக்க, சுலபமான வார்த்தைகளை (words) பிழைகள் இல்லாமல் உபயோகிப்பது பலன் அளிக்கும்.
பேசுவதிலும், எழுதுவதிலும் communication gap ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, நடைமுறை வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com