மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?

motivation Image
motivation ImageImage credit - pixabay.com

"சிறந்த கண்டுபிடிப்புகள் மற்றும் சீர்திருத்தங்கள் பெரும்பாலும் பல மனங்களின் கூட்டிணைப்பால் உருவானது." --அலெக்சாண்டர் கிரஹாம் பெல்.

கிரஹாம் பெல் பற்றி அறிவோம் பொறியாளர், ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் போன்ற பன்முகத்திறன் பெற்றவர். தொலைபேசியைக் கண்டுபிடித்தவர். இவரது தாயாரும், மனைவியும் செவிடராதலினால் இவரது ஆய்விற்கு அவர்கள் ஓர் உந்துசக்தியாக அமைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டு பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் இவரே.

இவர் சொல்வதுபோல் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த மனங்களின் கூட்டிணைப்பால் பல ஆய்வுகள் வெற்றிகரமாக நிறைவேறியதைப் பார்த்துள்ளோம். உதாரணமாக ராக்கெட் ஏவும் விஞ்ஞானிகள் குழுவில் உள்ளவர்கள் ஊர் விட்டு, சொந்தங்கள் மறந்து வந்து  தங்கள் மனக்கட்டுப்பாட்டினால் வானில் ராக்கெட் ஏவும் பெரும் செயலை சாதிக்கின்றனர். சொந்த ஊர் விட்டுச் செல்லும் விளையாட்டு வீரர்கள் மனக்கட்டுபாடுடன் விளையாடி வெற்றிக் கோப்பைகளோடு திரும்புகின்றனர்.

கூட்டு முயற்சிக்கு மட்டுமல்ல தனி மனிதருக்கும் மனக்கட்டுப்பாடு என்பது மிக மிக அவசியம். மனதை கட்டுப்படுத்த தெரிந்து கொண்டவருக்கே சுதந்திரமான வாழ்க்கை கிட்டும். ஆனால் மனதை கட்டுப்படுத்துவது என்பது சுலபமான காரியம் அல்ல. ஒருவருக்கு வாழ்க்கையில் கிடைக்கும் செல்வம் புகழ் மகிழ்ச்சி போன்றவைகள் அவர் தன் மனதை எந்த அளவில் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கிறார் என்பதை பொறுத்துதான் அமையும்.

நமது மனம் நமது உத்தரவின்படி தான் நடந்து கொள்ள வேண்டுமே தவிர மனதின் உத்தரவுப்படி நாம் நடந்து கொள்ளக் கூடாது.

ஒரு எழுத்தாளர் பத்திரிகை ஒன்றுக்கு நாவல் ஒன்றை முடித்து தர ஒத்துக் கொள்கிறார். ஆனால் அவரின் மனமோ இன்று ஒரு நாள் ஜாலியாக நண்பர்களுடன் சினிமா பார்த்து விட்டு  வாயேன் என்று சொல்கிறது. ஆனால் அவர் தன் மனதை கட்டுப்படுத்தி அந்த நாவல் எழுதி முடிக்கும் பணியை மேற்கொள்வார்.

ஆம்! வெற்றியை நோக்கி செல்லும் மனிதர்கள் இதுபோன்ற மனதின் என்ன அலைகளை தங்கள் மனதில் உருவாவதை அனுமதிக்கவே மாட்டார்கள் அப்படியே சூழல் தோன்றினாலும் அதைப் புறக்கணித்து விடுவர்.

தாழ்வு மனப்பான்மை, பயம், கலக்கம், பொறாமை, வெறுப்பு, குழப்பம், கவலை போன்றவை தங்கள் மனதில் நுழைய அனுமதித்துவிட்டால் அவர்கள் நிரந்தரமான நோயாளிகளாக மாறிவிடுவார்கள் என்று மனவியல் நிபுணர்கள் சொல்கின்றனர். "முதலில் மனதிற்கு வைத்தியம் செய்யுங்கள் அதற்குப் பிறகு வியாதிக்கு சிகிச்சை செய்யுங்கள்" என்று சீனாவில் பழமொழி உண்டு.

இதையும் படியுங்கள்:
பலவித நோய்களுக்கு மருந்தாக ஆவாரம் பூ சூப்!
motivation Image

வாழ்க்கையில் வெற்றிகள் பல கண்டு புகழுடன் வாழ விரும்புபவர்கள் முதலில் தங்கள் மனதில் எப்போதும் அமைதி நிலைக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு சிறந்த புத்தகங்களை படிப்பது, பல்வேறு துறைகளில் உள்ளவர்களுடன் கலந்து உரையாடுவது, பல இடங்களுக்கு பயணப்பட்டு பல விஷயங்களை தெரிந்து கொள்வது, விளையாட்டு, ஓவியம், இசை போன்ற தனக்கு பிடிக்கும் விஷயங்களில் ஆர்வமுடன் ஈடுபடுவது, இன்றைக்கு இதுதான் செய்ய வேண்டும் என்று தங்கள் பணிகளை நேர நிர்வாகத்துடன் திட்டமிட்டுக் கொள்வது போன்ற பல  எளிதான வழிமுறைகளை கடைப்பிடித்து நமது மனதை நாம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

இன்று நல்ல புத்தகம் ஒன்றைப் படித்து முடிக்க போகிறேன், இன்று மிகச்சிறந்த கதை ஒன்றை எழுத ஆரம்பிக்க போகிறேன், இன்று சமூக சேவை செய்யப் போகிறேன், மீதியுள்ள தோட்டவேலையை இன்று முடிக்கப் போகிறேன், இன்று எனது தொழிற்சாலைக்கு நிறைய லாபம் கிட்டும் திட்டம் ஒன்றை தயாரிக்கப் போகிறேன் போன்ற பல வித சுயநலமற்ற எண்ணங்கள் நல்ல பலன்களை தரும் நமது மனதையும் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கும்.
குறிப்பாக மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறன்களுடன் நமது சமூகத் திறன்களையும் மேம்படுத்துவது வெற்றி தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com