ஒரு விளையாட்டுப் போட்டியைக் காணும் பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட அணிக்கு விசுவாசமாக இருக்கக்கூடும். அல்லது அப்போட்டியில் முடிவில் பொருளாதார ரீதியாக ஏதாவது ஆதாயம் இருக்கக் கூடும். அல்லது தங்களுக்கும் பிடித்தமான அணி, எந்த நகரம் எந்த பள்ளியைச் சேர்ந்தோ அந்த மனப் போக்குதான் அப்போட்டியைக் குறித்தும், அதன் விளைவைக் குறித்தும் அவர்கள் அளிக்கின்ற செயல் விடையைத் தூண்டுகின்றன.
மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின் மையை உருவாக்குவதுதான் போட்டி எனும் அந்த நிகழ்வின் நோக்கம் என்றால் ஒன்று எல்லோரும் மகிழ்ச்சியடைய வேண்டும். அல்லது வருத்தமடைய வேண்டும். எனவே ஒருவர் மகிழ்ச்சி கொள்கிறாரா அல்லது வருத்தம் கொள்கிறாரா என்று அந்த நிகழ்வு தீர்மானிப்பதில்லை. மாறாக அந்த நிகழ்ச்சி குறித்த கண்ணோட்டம்தான் அவருக்கு மகிழ்ச்சியையோ, வருத்தத்தையோ ஏற்படுத்துகிறது.
வாழ்வின் அனைத்து நிகழ்வுகளும் இப்படித்தான் செயல்படுகின்றன. விஷயங்களை நீங்கள் பார்க்கின்ற விதமும் இவற்றோடு நீங்கள் தொடர்புடுத்துகின்ற விதம்தான் உங்கள் மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மையை தீர்மானிக்கின்றனவே அன்றி அவ்விஷயங்கள் அல்ல.
ஒரு சிறிய வீட்டில் நாம் வாழ்வதாக வைத்துக் கொள்வோம். நம்முடைய பக்கத்தில் ஒரு பெரிய வீடு கட்டப்படும்போது நமக்கு மகிழ்ச்சி அளிப்பதில்லை. நம் வீடு சிறியது என்ற வருத்தத்தைத் கொடுக்கிறது. ஒருசில மாதத்துக்கும் பிறகு நம்மிடம் ஒரு பணக்கார உறவினர் ஒருவர் அந்த பெரிய வீட்டை நமக்கு பரிசளிப்பதற்காகக் கட்டிக் கொண்டிருப்பதாகக் கூறினார் என்று வைத்துக் கொள்வோம். உடனே நம் மனப்பான்மை மாறிவிடும் புதிய வீட்டினால் ஏற்படும் புழுதி சத்தம் எல்லாம். தாற்காலிகள்தான் அது நமக்கு சொந்தமாகப் போகிறது அதனால் பொறுப்போம் என்று எண்ணுவோம்.
நம்முடைய எண்ணங்கள் மீது தாக்கம் ஏற்படுத்து வதற்கும், ஒரு குறிப்பிட்ட விஷயத்தை இரண்டு பேர் வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்க்கும்படி செய்வதற்கும் நம்முடைய மனதிற்கு இருக்கும் சக்தியை, கொடிக்கம்பம் ஒன்றில் கட்டிடப்பட்டுள்ள ஒரு கொடியை இரு துறவிகள் பார்ப்பதைப் பற்றிய ஜென் கதை தெளிவாகக்காட்டுகிறது.
கொடிதான் அசைந்து கொண்டிருப்பதாக ஒரு துறவி கூறுகிறார். இன்னொருவர் அதை மறுத்துவிட்டு காற்றுதான் அசைந்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார். அப்போது அவ்வழியே போய்க் கொண்டிருந்த மூத்த ஜென் துறவி அவர்கள் வாக்குவாதத்தைக் கேட்டு அவர்களிடம், "காற்றும் அசையவில்லை.கொடியும் அசையவில்லை. உங்கள் மனம்தான் அசைந்து கொண்டிருக்கிறது" என்றாராம்.