
சில பெண்கள் எப்பொழுதும் எதிர்மறையாகவே பேசுவார்கள். தங்களுக்கு எந்த நல்ல விசயமும் நடக்காதது போல் பேசவார்கள். அதுமட்டுமல்லாமல் எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பார்கள். இவர்களால் இவர்களைப் சுற்றியுள்ளவர்களுக்கு இவர்கள் பேச்சு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற பழக்கம் உள்ளவர்களிடம் ஒதுங்கியே இருக்கவேண்டும்.
நாம் எவ்வளவுதான் மிகத்தெளிவாக பேசினாலும் சிலர் அதையெல்லாம் தவிர்த்து தங்கள் இஷ்டம்போல் நடந்துகொண்டு தங்களைப் பற்றி பிரகடனம் செய்வதில் ஒரே குறியாக இருப்பார்கள். இந்த மாதிரி பெண்கள் உங்கள் உரையாடலில் சரியாக விஷயங்களைப் பகிரமாட்டார்கள். இதனால் உங்களுக்கு மனக் கஷ்டம் தான் ஏற்படும்.
ஒரு சிலர் தங்கள் பிரச்னைகளை நம்மிடம் கூறி அதற்கான தீர்வையும் நம்மிடமே எதிர்பார்ப்பார்கள். இதனால் அவர்கள் அவர்களுடைய எல்லா விஷயங் களுக்கும் நம்மைச் சார்ந்தே இருப்பார்கள். இது நீங்கள் மட்டுமே அவருக்கு உதவி புரியும் நிலை ஏற்பட்டு உங்களுக்கு சோர்வை ஏற்படுத்திவிடும்.
அது மட்டுமல்லாமல் உங்கள் சக்தியையும் உறிஞ்சிவிடும். ஒருவருக்கொருவர் நன்மை செய்வதுதான் சிறப்பு இந்த சமச்சீரான உறவு இருந்தால்தான் உடலாலும் மனதாலும் பலமாக எண்ணுவீர்கள்.
ஒரு சில பெண்கள் தவறு செய்திருந்தாலும் அவர்கள் அதற்காக மன்னிப்பு கேட்கமாட்டார்கள். அவர்கள் செய்தது தவறு என்று கூட உணரமாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் அந்த தவறை அடுத்தவர் மீது போடப் பார்ப்பார்கள். இத்தகையவர்களுடன் நட்போ உறவோ விரிசலைதான் ஏற்படுத்தும்.
ஒருசில பேர்கள் மற்றவர்கள் கவனம் அவர்கள் மீதே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். எல்லோரும் பேசும்போது இவர்கள் மட்டும் குரலை உயர்த்தி அடுத்தவர்களை தன்பக்கம் ஈர்க்க முயல்வர். மற்றவர்களின் கவனத்தை நாம் நம் பலத்தால் பெறமுடியாது. மற்றவர்களால் அடையாளம் காண்பதுதான் ஆரோக்கியமானது. அப்போதுதான் மரியாதையும் கிடைக்கும். இத்தகைய பெண்களை அடையாளம் கண்டு ஜாக்கிரதையாகவே பழகவேண்டும்.
ஒரு சில பெண்கள் தாங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மாட்டார்கள். உதாரணமாக ஒரு இடத்திற்குத் குறித்த நேரத்தில் செல்ல வேண்டு மென்றால் தாமதமாக அவர்கள் வந்து நம்மை சங்கடப் படுத்துவார்கள். அவர்களுக்கு நம்மீது மரியாதையின்மையையே இது காட்டுகிறது. சொன்னபடி நடந்து கொள்வதில் தான் நம் மீது நம்பிக்கை பிறக்கும். இத்தகைய பெண்களிடம் பழகுவது கஷ்டம்தான்.
ஒருசில பெண்கள் நாம் எதைச் சொன்னாலும் மறுக்காமல் கேட்டுக் கொள்வார்கள். எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள். மேலும் அவர்களின் அபிப்ராயத்தையும் கூறமாட்டார்கள். இது நீங்கள் ஒருவரே பேசிக் கொண்டிருப்பது போன்ற சூழலை ஏற்படுத்தும். ஆரோக்கிய விவாதங்களால் உறவு நன்கு வளரும். கண் மூடித்தனமாக நாம் சொல்வதையெல்லாம் கேட்கும் பெண்களாலும் நமக்கு முன்னேற்றம் ஏற்படாது.