இயலாமை என்பது ஒரு மனநிலையே!

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

டலில் ஏற்படும் பலவீனங்களோ, பாதிப்புகளோ, அங்க கோளாறுகளோ இயலாமை அல்ல. அது மனதின்றி முயற்சியில் ஈடுபடுவதும் நம்பிக்கை இன்றி செயல்களில் ஈடுபடுவதுமாகும். இயலாமை என்பது ஒரு உடல் குறைபாடு அல்ல. அது எதிர்மறை எண்ணங்களால் மனதைத் தாக்கி அது இயலாமல் செய்வதாகும். பாதிக்கப்பட்ட உடல் அல்ல பாதிக்கப்பட்ட மனமே இயலாமை ஆகிறது. நம் மனதில் என்ன ஓடுகிறது, மனதை எந்த கோணத்தில் இட்டுச் செல்கிறோம். மனதால் தோல்வி ஒப்புக்கொள்கிறோமா என்பதைப் பொறுத்து நம் இயலாமை தீர்மானிக்கப்படுகிறது.

இயலாது என்பது முட்டாள்களின் அகராதியில் உள்ள சொல் என்றார் புகழ் பெற்ற பிரான்ஸ் நாட்டு அரசர் நெப்போலியன் போனபர்ட். இயலாது என்ற கோணத்தில் எந்த செயலை நோக்கினாலும் அச்செயலை செய்து முடிக்க தடையாக இருப்பவைகளே கண்களுக்கு தெரியும். ஒரு செயலை செய்து முடிக்க முடியும் என்ற எண்ணமும், அதே செயலை செய்து முடிக்க முடியாது என்ற எண்ணமும் மனதின் பிரதிபலிப்புகளே. இயலாது என்று மனம் கூறும்போது அச்செயலை செய்து முடிக்க சிந்தனைகளும் உடலும் துணிவதில்லை. சக்தி குன்றியவர்களாகவே நாம் மாறிவிடுகிறோம்.

பலர் தங்களின் உடல் நலத்தையும், சமூகச் சூழலையும், வசதி வாய்ப்பு குறைவுகளையும் பின் தங்கிய நிலையையும் குற்றம் கூறி முன்னேற்றத்திற்கான பாதையை மூடிவிடுகின்றனர். தங்கள் இயலாமைக்கு மற்றவர்களை காரணம் காண்பது முன்னேற்றத்திற்கான வழி அல்ல. இருக்கும் நிலை எதுவாக இருந்தாலும், மனம் துணிவு பெற்றால் மிகக் கடின இலக்குகளையும் எட்ட முடியும். இதைத்தான் ஸ்டீபன் ஹாக்கிங் "வெற்றிகள் குவிப்பதற்கு உடலின் குறைபாடுகள் ஒரு தடையாக இருக்க முடியாது "என்று கூறினார்.

தடைகளை மீறி வெற்றி குவித்தவர்களின் சரித்திரங்கள் வரலாற்று ஏடுகளில் நிரம்பியுள்ளது. சூழல் கடினமாகும்போது முயற்சியின் கடுமை அதிகரிக்க வேண்டுமே, தவிர முயற்சியின்மை அதிகரிக்க கூடாது. நம் குறிக்கோள்களை எட்ட வேண்டியது நம் கடமை. அதற்கு தேவையான உந்துதல் மனதில் இருந்து வரும்போது வெற்றிகள் அருகில் வந்து விடுகிறது.

இயலாமை என்ற மாயையை மனதைவிட்டு அகற்ற முடியாத காரணத்தால், நல்ல உடல்வாக உள்ளவர்கள் கூட திறன்கள் அற்றவர்களாக மாறிவிடுகின்றனர். மனதை கட்டுப்படுத்தி, நெறிப்படுத்தி உயர்வை நோக்கி இட்டுச் செல்பவர்களுக்கு, சாதனைகள் நிகழ்த்துவதற்கு உடலின் வலிமை குன்றல் ஒரு பெரிய தடையல்ல என்பது உண்மையே .அதே நேரத்தில் மனதினை தாழ்வு மனப்பான்மையினால் கறைபடுத்தினால் பாதகங்களும் கூடவே தொடரத்தான் செய்யும்.

இதையும் படியுங்கள்:
எண்ணத்தில் கவனம் வை!
motivation article

நம் நம்பிக்கை உயர்வாக உள்ளபோதும், முடியும் என்று உறுதியாக நம்பும் போதும் பயம் கலைந்து போகும். எதிர்பாராத துணிவு மனதில் பிறக்கும். உடலின் குறைபாடும், திறமையின் குறைபாடும், வசதி வாய்ப்பின் குறைபாடும், நாம் குறிக்கோள் நோக்கிய பயணத்தை தடுத்துவிட முடியாது. விட்டு விட்டு வெளியேற வேண்டும் என்று மனம் கூறினால் விட்டு விட்டு வெளியேறக்கூடாது என்று மனதிற்கு கட்டளையிட வேண்டும். காரணம் இயலாமை என்பது வெறும் ஒரு மனநிலையே. உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்பியபடி சிறப்பாக கொண்டு செல்வது உங்கள் கையில் உள்ளது என்பதை ஆணித்தரமாக நம்பி செயலாற்றினால் வெற்றி என்பதை கண்டு உணர்வீர்கள்.

சரியான பாதையில் மனதின் ஆற்றலையும், உடலின் ஆற்றலையும் செலுத்தி உடல் வலிமை குன்றியவர்கள் கூட வியத்தகு சாதனைகளை படைக்க முடியும். மாற்றுத்திறனாளிகள் தங்கள் செயல்களை வித்தியாசமாக செய்கிறார்களே தவிர ,அவர்களுக்கு இயலாமை உள்ளதாக கருத முடியாது. இதற்கு மாற்றுத்திறனாளிகளின் சாதனைகளை மிகப்பெரிய எடுத்துக்காட்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com