Joker Quotes: ஜோக்கரின் 10 தலைசிறந்த வசனங்கள்! 

Joker
Joker's 10 best quotes!
Published on

ஜோக்கர் என்கிற கதாபாத்திரத்திற்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. என்னதான் அவர் வில்லனாக இருந்தாலும், அவரிடத்தில் இருந்து பார்க்கும்போது அவர் செய்யும் விஷயங்கள் நியாயமாகவே தோன்றும். குறிப்பாக அவர் கூறும் வசனங்கள் மிகவும் பிரபலமானவை. அவை நம்மைப் பற்றி ஆழமாக சிந்திக்க வைக்கும். இந்த பதிவில் ஜோக்கரின் தலைசிறந்த 10 வசனங்களைப் பார்க்கலாம்.

  1. “Why So Serious?” - இதுதான் ஜோக்கரை அடையாளப்படுத்தும் மிகவும் பிரபலமான வசனம். இந்த கேள்வி, மக்கள் ஏன் எப்போதும் பதட்டத்துடன் இருக்க வேண்டும்? ஏன் சிறிது நேரம் மகிழ்ச்சியாக இருக்கக்கூடாது? என்பதைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. 

  2. "All it takes is one bad day to reduce the sanest man alive to absolute insanity." - இந்த வசனம், ஒரு சாதாரண நாள் ஒரு நபரின் வாழ்க்கையை நிச்சயமாக மாற்றி விடக்கூடும் என்பதை உணர்த்துகிறது. 

  3. "I'm not a monster. I'm just ahead of the curve." - ஜோக்கர் தன்னை ஒரு மோசமான நபராகப் பார்க்காமல், இந்த சமூகத்தின் எதிர்காலத்தை முன்கூட்டியே சொல்பவராகவே பார்க்கிறார். ஒருவேளை இந்த வசனம் அவர் தனது செயல்களை நியாயப்படுத்திக் கொள்ள சொல்லி இருக்கலாம். 

  4. "If you're good at something, never do it for free." - இந்த வசனம் சமூகத்தில் நிலவும் அநீதியை பிரதிபலிக்கிறது. திறமையானவர்கள் எப்போதும் பிறரால் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களின் திறமைகளுக்கு போதிய மதிப்பு கொடுக்கப்படவில்லை என்பதை இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது. 

  5. "Let's put a smile on that face." - இது ஜோக்கரின் வன்முறை செயல்களை மறைக்க அவர் பயன்படுத்தும் வசனம் ஆகும். அதாவது அவர் தனது செயல்களின் மூலம் மக்களின் மகிழ்விக்க விரும்புவதாகக் கூறுகிறார். 

  6. "You know the thing about insanity? It's not that you're crazy. It's that you're not crazy enough." - இந்த சமூகத்தின் பகுத்தறிவின்மையை இந்த வசனம் கேள்வி எழுப்புகிறது. சமூகத்தின் பல விதிகள் மற்றும் நம்பிக்கைகள் மிகவும் முட்டாள்தனமானவை என்பதை இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது.‌ 

  7. "I believe whatever doesn't kill you simply makes you stranger." - மனிதர்கள் தங்கள் துன்பங்களிலிருந்து எவ்வாறு வலிமை ஆகிறார்கள் என்பதை விளக்குகிறது இந்த வசனம். துன்பங்கள் மனிதர்களை மாற்றுவதற்கான மிகச்சிறந்த வழி என்பதை இந்த வசனம் உணர்த்துகிறது. 

  8. "Madness is like gravity, all it takes is a little push." - ஒரு நபரை மோசமானவராக மாற்ற ஒரு சிறிய தூண்டுதல் போதும் என்பதை இந்த வசனம் எடுத்துரைக்கிறது. 

  9. "I'm not going to kill you. That would be too easy. I'm going to show you how much fun it is to be me." - ஜோக்கரின் மனோபாவத்தை வெளிப்படுத்துவதே இந்த வசனம். அதாவது அவர் தனது எதிரிகளைக் கொல்வதை விட அவர்களை தனது நிலைக்கு கொண்டு வந்து மகிழ்ச்சி அடைகிறார். 

  10. "You see, there's no rule book for how to live your life. You just... you do what you want, and you see what happens." - ஒருவரின் தனித்துவம் எவ்வளவு முக்கியமானது என்பதைக் கூறுகிறது இந்த வசனம். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை தாங்களாகவே உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனது ஜோக்கர் கூறுகிறார். 

இதையும் படியுங்கள்:
உலகில் மிக அதிக மழைப்பொழிவு பெரும் 6 இடங்கள் நமக்கு உணர்த்துவது என்னனு பார்ப்போமா?
Joker

ஜோக்கரின் இந்த 10 வசனங்களும் நம்மை அதிகமாக சிந்திக்க வைக்கும், பல கேள்விகளைத் தூண்டும் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வைக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com