Karl Marx
Karl Marx

Karl Marx quotes: கார்ல் மார்க்ஸ் கூறிய 16 பொன்மொழிகள்!

Published on

ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவஞானியும், பொருளாதார வல்லுனரும், சமூகவியலாளரும் மற்றும் முதன்முதலில் பொதுவுடைமைக் கொள்கையை முன்வைத்தவரும்தான் கார்ல் மார்க்ஸ் (Karl Marx). அவர் நமக்குத் தேவையான பல தத்துவங்களை கூறியிருக்கிறார். அந்தவகையில் அவர் கூறிய 15 தத்துவங்களைப் பற்றி பார்ப்போம்.

1.  ஒரு சமூகத்தின் பெண்களின் நிலை கொண்டே அந்த
சமூகத்தின் தரம் மதிப்பிடப்படும்.

2.  என்றும் நினைவில் கொள்! மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது.

3.  உழைப்பு தான் எல்லா செல்வங்களுக்கும் மதிப்புகளுக்கும் மூலதனம்.

4.  மக்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை, உங்கள் சொந்தப் பாதையை பின்தொடருங்கள்.

5.  வரலாற்றின் போக்கை தீர்மானிப்பதில் பணம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது.

6.  அன்புமிக்க பெண்ணிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மேலும் மேலும் மனிதனாக்கும்.

7.  எல்லாவற்றிற்கும் காரணங்கள் எப்போதும் இருக்கின்றது, ஆனால், நியாயமானதாக இருப்பதில்லை!

8.  தத்துவவாதிகள் உலகை விளக்குவதில் நேரத்தை செலவிட்டனர். ஆனால், உலகை விளக்குவது அல்ல, அதை மாற்றுவதே நமது இலக்கு.

9.  முதலாளித்துவம் : ஒருவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடு. ஆனால், அது அவனுக்கு சொந்தமல்ல, அதை காசு கொடுத்து வாங்குபவனுக்கு சொந்தம். கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் தனக்காக மீன் வாங்கிக் கொள்ளும் அளவுக்கான காசு இவனுக்கு கிடைக்கும்.

10.  'மதம் என்பது ஒடுக்கப்பட்ட உயிரினத்தின் பெருமூச்சு, இதயமற்ற உலகின் இதயம் , ஆன்மா இல்லாத நிலைமைகளின் ஆன்மா.'

11.  நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது.

இதையும் படியுங்கள்:
Helen Keller Quotes: ஹெலன் கெல்லர் கூறிய 15 வாழ்க்கைத் தத்துவங்கள்!
Karl Marx

12. மக்கள் அனைவரும் இன்பம் காண்பதற்கு முதல் இன்றியமையாத தேவை எது தெரியுமா? மதங்களை ஒழிப்பதுதான்.

13. நம் வாழ்வில் கிடைக்காத பெரும் செல்வம், நாம் வீணாக கழிக்கும் ஒவ்வொரு வினாடியும்தான்.

14.  பிரச்சனைகளின் வீரியம் அதிகரிக்கும்போதுதான், அதிலிருந்து வெளிவருவதற்கான எளிமையான வழிகள் நம் கண்களுக்குத் தெரிய தொடங்கும்.

15. அது அவன் பணம்தான். ஆனால், அதை அவனால் உண்ண முடியாது.

16. நிலைமையை மட்டும் மாற்றினால் போதாது, நீங்களும் மாற வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com