கற்றது கையளவு கல்லாதது உலகளவு!

Motivation i,age
Motivation i,agepixabay.com

ம் வாழ்க்கையில் கற்றலுக்கான தேடல் எப்போதுமே இருந்துக்கொண்டேதான் இருக்கும். எந்த சமயத்திலும், “நான் கற்று தேர்ந்துவிட்டேன். எனக்கு எல்லாம் தெரியும்” என்று சொல்லும் தருணம் வரப்போவதில்லை. ஒவ்வொரு நொடியிலும் புதிதாக ஏதோ ஒன்றை கற்று தெரிந்து கொண்டேதான் இருக்கிறோம். அதற்கான அவசியமும் நம் வாழ்வில் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

நம் வாழ்க்கையில் நாம் கற்றதை விட நமக்கு தெரியாத விஷயங்கள் நிறையவே இருக்கிறது. ஒரு சிங்கத்தை நேருக்கு நேர் எதிர்க்கொள்ளும்போது எப்படி தப்பிப்பது என்பதை எந்த பித்தகோரஸ் தியரத்தை வைத்தும் தீர்த்து விட முடியாது. அந்த தருணத்தில் நாம் இதுவரை கற்ற அனைத்தும் ஒன்றுமில்லாமல் போய்விடும்.

ஒரு மெரைன் இஞ்சினியருக்கோ, கம்ப்யூட்டர் இஞ்சினியருக்கோ அவரவர்  துறையிலே அவர்கள் கோலோச்சினாலும் அதை தவிர்த்து வேறு என்ன தெரியும் என்று வரும்போது கேள்விக்குறியாகி விடுகிறது.

உலகத்திலே பெரிய மலைத்தொடரான ஆன்டீஸில் மாட்டிக்கொண்டு உயிர் தப்பியவர்களின் கதையை கேட்கும்போது வியப்பாகவே உள்ளது. நம் வாழ்க்கையில் எதிர்ப்பாராத தருணம் எந்த நொடி வேண்டுமானாலும் வரலாம் அதற்கு நாம் எப்போதுமே தயாரான நிலையில் இருக்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

சமைக்க தெரிந்திருக்க வேண்டியது கூட சர்வைவலுக்கான முதற்படியேயாகும். நம் தேவைக்கு நாம் சமைக்க கற்று கொள்ள வேண்டும். யாரையும் எதிர்பார்த்து காத்திருக்க கூடாது.

எப்போதும் வாழ்க்கையில் கம்பர்ட் ஸோனிலேயே இருந்து விட முடியாது. கஷ்டங்களை எதிர்க்கொண்டால் தான் தேவையான நேரத்தில் அதற்கு தகுந்தார் போல நம்மை மாற்றி கொண்டு வாழ முடியும்.

கற்றல் என்பது புத்தகத்தில் இருப்பதை மட்டும் பயில்வதில்லை. அதை தாண்டி வாழ்வில் அவசர தேவைகளுக்காக நாம் புதிதாக என்ன கற்றுக்கொண்டோம் என்பதிலும் உள்ளது.

இதையும் படியுங்கள்:
பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள்! 
Motivation i,age

நம் வாழ்க்கையில் கற்றல் என்பது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

அது வேறு யாருடைய வாழ்க்கையை பார்த்து வந்ததாகவோ இருக்கலாம் அல்லது நம்முடைய வாழ்க்கையில் செய்த தவறுகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடமாக இருக்கலாம். எப்படி பார்த்தாலும் கற்றலே நம்மை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com