கவியரசர் கண்ணதாசனின் செப்பு மொழிகள்!

lifestyle philosophies...
Kavyarasar Kannadasan
Published on

பிறர் மனதைக்காட்டும் கண்ணாடி என்னிடம் ஒன்று இருந்திருந்தால், நான் எவ்வளவோ பொருட்களை மிச்சம் பிடித்திருப்பேன். ஆனால் அனுபவங்களே இல்லாத மரக்கட்டையாக ஆகியிருப்பேன்.

ழுவாத காலோடு பூஜையறைக்குள் நுழைவதை விடச் செருப்புப் போட்டுக் கொண்டு நுழைவது ஒன்றும் தவறல்ல. களங்க மனம் படைத்த நண்பனை விட கொலைகாரன் ஒன்றும் கொடியவனல்ல.

ரங்களைவிட மனிதன் உயர்ந்தவனா? இல்லை. மரங்கள் இறந்த பிறகும் அவற்றை நீண்ட நாட்கள் வீட்டில் வைத்திருக்க முடியுமே!

செருப்புத் தேயும்போது, கால் ஜாக்கிரதையாகி விடவேண்டும். வயது வளரும் போது பணச்சேமிப்பு பத்திரமாக இருக்க வேண்டும்.

சிறு வயதில் வரவு வையுங்கள்; பெரிய வயதில் செலவழியுங்கள். அந்த வயதில் நீங்கள் உட்கார்ந்துதான் செலவழிக்க முடியும்; ஓடியாட முடியாது.

கொய்யாப் பழத்தை அறுக்கும் முன்பே, அதற்குள் விதை இருப்பது உனக்கு தெரியவேண்டும். ஒருவனோடு நன்கு பழகுவதற்கு முன்பே, அவனைப் பற்றி நீ புரிந்து கொண்டு விடவேண்டும்.

காலை நேரம் எப்படித்தோன்றுகிறதோ, மாலை நேரமும் அப்படியே தோன்றுகிறது. விடியும் பொழுதிற்கும், முடியும் பொழுதிற்கும் தோற்றத்தில் வேறுபாடில்லை. இன்ப துன்பங்களையும் அப்படியே நினைத்து விடு. எந்த கட்டத்திலும் நீ அழ வேண்டிய அவசியம் இருக்காது.

னித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்து பார். ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது கடவுள் இருக்கிறார் என்பதே!

நிலத்தில் வளரும் களைகள் பெரிய மரங்களாவதில்லை. அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித்தருவதில்லை

லரைப்பார்; கொடியைப்பார் வேர் எப்படியிருக்குமென்று முயற்சிக்காதே.

ருதரம் பெய்த மழையே ஒரு தலைமுறைக்குப் போதுமானதாக இருந்து விடுமானால் ஆண்டவனின் இயக்கத்திற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். நீ ஒருநாள் செய்த நன்மையே வாழ்நாள் முழுவதும் போதுமானதாக விடுமானால் உன் ஒவ்வொரு நாளும் வீணான நாளாகி விடும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் உண்மையான நண்பர்களை தெரிந்துக்கொள்ள வேண்டுமா?
lifestyle philosophies...

யிற்றை வெட்டிவிட்டு முடிச்சுப் போட்டால் அந்த முடிச்சுக் கடைசிவரை கண்ணுக்கு தெரிந்து கொண்டே இருக்கும். ஒரு முறை பகை வந்து மீண்டும் எவ்வளவு நெருங்கி பழகினாலும் அந்த பகை மனதில் நின்று கொண்டே இருக்கும்.

ன்று நீங்கள் சிரிப்பது, நாளை அழுவதற்காகத் தானென்றால், அதற்காக இன்று சிரிப்பதை நிறுத்தாதீர்கள், நாளை அழுவதைப் தடுப்பது எப்படி என்று யோசித்து கொண்டே சிரியுங்கள்.

தைச் சிந்திக்கிறாய் என்பதிலல்ல, எப்படி சிந்திக்கிறாய் என்பதில்தான் புதிய கருத்துக்கள் வெளிவருகின்றன.

விளிம்பில்லாத குவளையிலிருந்து தண்ணீர் ஊற்றினால், நீ விரும்புகின்ற பாத்திரத்தில் ஊற்ற முடியாது. அடிப்பகுதி வழியாகக் கீழே வழிந்து விடும். எந்த முறையில் வெளியிடுவது என்ற திட்டமில்லாமல் ஒரு விஷயத்தை நீ வெளியிட தொடங்கினால், நீ விரும்புகிற பலன் கிடைக்காது.

மைதியை நாடுங்கள்; கூட்டத்தில் இருந்து விலகி இருங்கள்; மனதுக்கு சுகமான விஷயங்களை சிந்தியுங்கள்; பதமான காய்கறிகளை சாப்பிடுங்கள்; அங்கே அடிக்கிற காற்று கூட உங்களுக்கு இதமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com