உங்கள் நேரத்தை தடுக்கும் நுட்பத்தை (Time Blocking) தெரிந்து கொள்ளுங்கள்!

know your time blocking technique!
Time Blocking
Published on

ன்றைய வேகமான உலகில் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை இலக்குகளை அடைவதற்கு பயனுள்ள நேர மேலாண்மை அவசியம். பலர் wish list எனப்படும் விருப்பப்பட்டியல்களை உருவாக்குகிறார்கள். ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில் சில சிக்கல்கள் உள்ளன. ஆனால் டைம் பிளாக்கிங் எனப்படும் நேரத்தைத் தடுக்கும் நுட்பம் பற்றி தெரிந்து கொண்டால் முன்னேற்றத்திற்கும், இலக்குகளை அடைவதற்கும் தேவையான நேரத்தை செலவிடும் உத்திகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். அவற்றை எப்படித் திறம்பட செயல்படுத்துவது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

நேரத்தை தடுப்பது (Time Blocking) என்றால் என்ன?

நேரத்தைத் தடுப்பது என்பது ஒரு நேர மேலாண்மை முறையாகும். தினசரியோ அல்லது ஒரு வாரம் முழுவதற்குமான பணிகள் அல்லது செயல்பாடுகளுக்கு ஏற்ப ஒரு அட்டவணையை உருவாக்கி குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் வேறு எந்தப்

பணிகளும் செய்யாமல் அட்டவணையில் குறிப்பிட்ட பணிகளை மட்டுமே செய்ய வேண்டும். அந்த நேரத்தை அதற்காகவே தடுத்து அந்தச் செயலை செய்ய வேண்டும். இதுவே டைம் பிளாக்கிங் அல்லது நேரத்தை தடுப்பது என்று பொருள்படுகிறது.

விஷ் லிஸ்ட் எனப்படும் விருப்பப்பட்டியல்கள் ஏன் பெரும்பாலும் தோல்வியடைகின்றன?

ஒரு காகிதத்தில் இன்று செய்ய வேண்டிய வேலைகளை ஒரு பட்டியல் போட்டு வைத்துக்கொண்டு செய்ய ஆரம்பித்தால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள 10 வேலைகளில் நான்கு ஐந்தை மட்டும்தான் செய்வோம். மீதி உள்ளவை செய்யப்படாமல் இருக்கும். ஏனென்றால் அதில் தெளிவான வரையறை இல்லாதே காரணம். வேறு வேலைகள் வரும்போது இந்தப் பட்டியலில் எழுதப்பட்டுள்ள வேலைகள் முக்கியமானவைகளாகத் தோன்றாமல் அவற்றை அப்படியே செய்யாமல் விட்டு விடுவோம்.

நேரத்தைத் தடுக்கும் முறைகள்;

விருப்பப்பட்டியல்களுக்கு மாறாக டைம் பிளாக்கிங் எனப்படும் நேரத்தை தடுக்கும் உத்தி நன்றாக பலன் தரும். ஒரு காகிதம் அல்லது நோட்டில் அன்று செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட வேண்டும். அதற்கான நேரத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும். எடுத்துக்காட்டாக காலை ஆறு டு ஏழு நடை பயிற்சி அல்லது உடற்பயிற்சி, 7 டு 8 தியானம் அல்லது புத்தகம் வாசித்தல் என்று திட்டங்களை எழுதிக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தை அதற்காகவே தடுத்து என்ன இடர்ப்பாடுகள் வந்தாலும் அதைச் செய்ய வேண்டும். மழை பெய்தால் வீட்டுக்குள்ளேயே நடைப்பயிற்சி செய்யலாம். அதேபோல குறிப்பிட்ட அந்த வேலையை செய்ய நேரும்போது எந்த இடத்தில் இருந்தாலும், செய்தாக வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வெற்றியாளர்களுக்கும் தோல்வி அடைவோருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
know your time blocking technique!

நேரத்தைத் தடுப்பதன் நன்மைகள்;

மேம்படுத்தப்பட்ட முன்னுரிமை; ஒவ்வொரு பணிக்கும் நேரத்தை ஒதுக்குவதன் மூலம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒருவர் உணர்வுபூர்வமாக மதிப்பிடுகிறார். இது முதலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்களில் கவனம் செலுத்த உதவுகிறது. ஒரு நேரத்தில் ஒரு பணியில் கவனம் செலுத்த முடிகிறது. மல்டி டாஸ்கிங் வாய்ப்புகளைக் குறைக்கிறது.

தெளிவான மற்றும் அடையக்கூடிய இலக்குகள் :

நேரத்தைத் தடுப்பது என்பது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எதைச் சாதிக்க வேண்டும் என்பதை வரையறுத்து, தெளிவான, செயல்படக்கூடிய இலக்குகளுக்கு வழிவகுக்கும். எடுத்துக்காட்டாக, "விளக்கக்காட்சியைத் தயார் செய்" என்று எழுதுவதற்குப் பதிலாக, "விளக்கக்காட்சி ஸ்லைடுகளை உருவாக்கி திருத்துவதற்கு" ஒரு நபர் காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணிவரை தடுக்கலாம்.

அர்ப்பணிப்பு & விழிப்புணர்வு;

பணிகளை செயல்படுவதற்கான அர்ப்பணிப்பை உருவாக்குகிறது. நேரத்தைத் தடுப்பது அதிக நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கிறது. ஒரு பணி எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டாலோ அல்லது புதிய பணிகள் ஏற்பட்டாலோ, அட்டவணையை எளிதாகச் சரிசெய்ய முடியும். நேரத் தடுப்பில் ஈடுபடுவதன் மூலம்,  எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது பற்றிய சிறந்த விழிப்புணர்வு உருவாகுகிறது. இது எதிர்கால திட்டமிடலை மேம்படுத்த உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com