பெண்களே! உங்களை நீங்களே காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்!

Motivathin image
Motivathin imagepixabay.com

பெண்கள் நாட்டின் கண்கள், பெண்கள் வீட்டின் தூண்கள் என்று பலர் பெண்களை பற்றி அவ்வபோது புகழ்ந்து பேசினாலும், பெண்கள் தங்கள் குடும்பத்திற்காக செய்யும் தியாகத்தின் அளவு சற்று அதிகமாகவேயுள்ளது.

பெண்கள் எப்போதுமே தன்னை விட தன்னுடைய குடும்பத்தின் தேவைக்கே முதல் இடம் கொடுப்பவர்கள். தன்னுடைய பெற்றோர், கணவன், குழந்தை என்று அவள் முக்கியத்துவம் கொடுக்கும் நபர்கள் காலத்துக்கு ஏற்றார் போல மாறிக்கொண்டேயிருக்கிறார்கள்.

கவனித்திருந்தால் தெரியும், சாதாரணமாக வீட்டிலே உணவு சமைக்கும்போது எல்லோரும் சாப்பிட்ட பின்னரே கடைசியாகவே அம்மா சாப்பிடுவார். சில நேரங்களில் உணவு குறைவாக இருப்பின் அதை அடுத்தவருக்கே கொடுத்து விடும் மனம் அந்த தாய்க்கு உண்டு.

ஆண்களின் தியாகம் அபரிமிதமானது என்றால் பெண்களின் தியாகம் எல்லையற்றதாகும்.

இத்தனை திறனிருந்தும் அவளை அவளே கவனித்துக் கொள்ள மறந்து விடுகிறாள். அவளுக்கான நேரம் செலவிடுவதில் அக்கறை காட்டுவதில்லை. அவளுக்கான சுயசம்பாத்தியம், அவளுக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதில், அவளுக்கான சின்ன சின்ன தேவைகளைக் கூட பெரிதும் கண்டுக்கொள்வதில்லை.

அவளுடைய மன எண்ணத்தை பகிர்ந்து கொள்ள நண்பர்கள் இருப்பதில்லை. தனக்காக நேரம் ஒதுக்கி ஆர அமர உட்கார்ந்து ஒரு காபி குடிப்பதற்கு கூட நேரமிருப்பதில்லை. குடும்பத்தை கவனிப்பதே அவளுடைய தலையாய கடமையாகவும் பொறுப்பாகவும் இருக்கிறது.

பெண்கள் தங்களை மேம்படுத்தி கொள்ள செய்ய வேண்டிய விஷயங்கள்...

இதையும் படியுங்கள்:
ஆளை அசத்தும் அவரைக்காயின் ஆரோக்கியப் பலன்கள்!
Motivathin image

பெண்கள் தன்னை தானே காதலிக்க கற்று கொள்ள வேண்டும்.

பெண்கள் தன்னை அலங்கரித்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை தரும்.

பெண்கள் தனக்கான வருமானத்தை ஈட்டுவதற்கு ஒரு வேலையை தேடிக்கொள்ள வேண்டும்.

பெண்கள் தனக்கென்று தனியாக தன்னுடைய பெயரிலே சேமிப்பு வைத்திருக்க வேண்டும். இது அவர்களுக்கான பாதுகாப்பு உணர்வை தரும்.

னக்கென்று ஒரு தனித்துவத்தை அடையாளத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்.

வாழ்க்கையை கடைசியில் புரட்டி பார்த்தால் முக்கால்வாசி நேரத்தை அடுத்தவர்களுக்காகவே செலவழித்திருக்கிறோம் என்று தோன்றுமாயின், உங்களை மாற்றி கொள்ள வேண்டிய சரியான நேரம் இதுவே!

உங்களை  நீங்களே காதலிப்பது, உங்களுக்காக வாழ வேண்டும் என்று யோசிப்பது சுயநலமாகாது. அப்படியே அது சுயநலமாக இருப்பினும் அதில் தவறில்லை பெண்களே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com