meta property="og:ttl" content="2419200" />
கொடி வகையைச் சேர்ந்த அவரைக்காய் பல மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. இதில் சுண்ணாம்புச் சத்து, பல்வேறு வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.
அவரை பிஞ்சை சமைத்து சாப்பிட்டு வர, உடல் பலம் பெறும். பித்தத்தினால் உண்டாகும் உடல் சூடு, கண் பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளை குணமாக்குவதில் அவரைக்காய் நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.
வெள்ளெழுத்து குறைபாட்டையும் போக்கும் திறன் அவரைக் காய்க்கு உண்டு. இதில் துவர்ப்பு சுவை உள்ளதால் இது இரத்தத்தை சுத்திகரிக்கும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் தாராளமாக அவரைக் காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
கோபம், எரிச்சலைப் போக்கும். உடலுக்கும், மனதுக்கும் சாந்தத்தைக் கொடுக்கும். மலச்சிக்கலைப் போக்வல்ல தன்மையும் அவரைக்காய்க்கு உண்டு. வயிற்றுப் பொருமலை நீக்குவதோடு, நீரிழிவு நோயாளிகள் அவரைக் காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள மயக்கம், தலைசுற்றல், கை, கால் மரத்துப் போதல் போன்ற பிரச்னைகள் கட்டுப்படும்.
மூல நோயை குணப்படுத்தி, மீண்டும் வராமல் தடுக்கும். அவரைக் காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமானப் பிரச்னைகளை வராமல் குடலை பாதுகாக்கிறது. தசை நார்களை வலிமைப்படுத்துவதோடு, சிறுநீரைப் பெருக்கும் தன்மையும் இதற்குண்டு. சளி, இருமலை குணப்படுத்தும் அவரைக்காய், உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியையும் தருகிறது.
சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளை குணமாக்குவதில் அவரைக்காய் நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. உடல் எடையைக் குறைத்து கலோரி எரிப்பைத் தூண்டி உடல் நலம் காக்கவும் உதவுகிறது. அடிக்கடி அவரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.