பொய் சொல்பவர்களை உடனடியாக கண்டுபிடிக்க சில டிரிக்ஸ் தெரிஞ்சுக்கோங்க!

Lie
Lie
Published on

பொய் சொல்லாதவர்கள், இந்த காலத்த்தில் மிகவும் அரிதாகவே இருக்கிறார்கள். கார்ப்பரேட் யுகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பொய்களை தினமும் சொல்ல வேண்டி உள்ளது. பொய்கள் முதலில் பள்ளிப் பருவத்தில் இருந்து ஆரம்பித்து விடுகிறது. பள்ளிக்கு தாமதமாக வந்து விட்டால் ஆசிரியர் அடிக்க பிரம்பை ஓங்கும் போது , "வண்டி பஞ்சர் ஆயிடுச்சு சார்", சைக்கிள் "செயின் அறுத்துருச்சு சார்", "டயர் வெடிச்சிருச்சு சார்" இப்படி பல மாதிரியான பொய்களை கூறி இருப்பார்கள். ஆனால் அந்தப் பையனிடம் சைக்கிளே இருந்து இருக்காது ஆனாலும் சைக்கிள் பஞ்சர் என்று சொல்லுவான். 

இதை உடனடியாக ஆசிரியர் கண்டுபிடித்து, "உன்கிட்ட தான் சைக்கிள் இல்லையே" என்று கேட்டால் , "அது இன்னொருத்தங்க வண்டியில் டபுள்ஸ் வந்தேன் சார் " என்று அடுத்த பொய்யை  அவிழ்த்து விடுவான். இந்த பொய்க்கள் பள்ளி பருவத்துடன் முடிவதில்லை . 

கல்லூரியில், மச்சான் "அந்த பொண்ணு உன்னை தான் பார்க்கிறா" என்று ஆரம்பித்து , "இன்னைக்கு நீ அஜித் மாதிரி இருக்கடா" என்று மானாவாரியாக பொய்களை வாரி இறைப்போம். இது ஒரு மகிழ்ச்சிக்காக தான். 

அலுவலகத்தில் தினசரி வேலைகளையும் , வேலை அழுத்தங்களையும் சமாளிக்க வேண்டி பல பொய்களை சொல்ல வேண்டியுள்ளது. பொய் சொல்வது தவறு என்றாலும் இன்றைய வாழ்வியலில் அது ஒரு இயல்பான ஒரு விஷயமாக மாறி விட்டது. பொய் சொல்வதை சொல்லும் போதே கவனமாக கூர்ந்து கவனித்தால் அது பொய் என்று கண்டறிந்து விடலாம். 

நம்மால் 54 சதவீத பொய்களை மட்டுமே துல்லியமாகக் கண்டறிய முடியும் , குறைந்தது 82 சதவீத பொய்கள் கண்டறியப்படாமல் போகின்றன.பொய்களை சில உத்திகளை பயன்படுத்தி கண்டறியலாம்.

1. பொய்களை சொல்பவர்கள் , வரிசையாக பொய்களை அடுக்கிக் கொண்டே இருப்பார்கள். முதலில், அவர்கள் கூறிய விஷயம் உண்மை போல இருந்தாலும் அடுத்தடுத்து அவர்கள் சொல்ல வந்த விஷயம் நம்பும் படி இருக்காது. இவர்கள் நம்மிடம் இருந்து தப்பிக்கும் மனநிலையில் இருப்பார்கள் , உடனடியாக ஏதோ அவசர வேலை இருப்பது போலவும் , அந்த இடத்தை விட்டு நகர ஏதேனும் சொல்லி முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். இதை வைத்து இவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதை நாமே கண்டறிந்து விடுவோம்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; பொய் சொல்லலாகாது மம்மீ!
Lie

2. பொய் சொல்றவங்க கண்ணை பார்த்து பேசுங்க. சிரிச்சிக்கிட்டே அவர் கையையும் இறுக்கி பிடியுங்கள். அவரிடம் பொய் இல்லா விட்டால் அடர் உடல் மொழியில் மாற்றம் இருக்காது. உடனடியாக உங்கள் கையில் இருந்து கையை விடுவிடுத்தால், உங்கள் கண்களை பார்க்க முடியாமல் எங்கெங்கோ பார்த்து பேசினாலும் கண்டறிந்து விடலாம். சிறிய பதட்டம் அவரை காட்டி கொடுத்து விடும்.

3. சிலர் தான் பொய் சொல்வதை யாரும் அறியக் கூடாது என்றும் , தான் மிகவும் அறிவாளி என்று நினைத்து , தன் பொய்யில் பல விவரங்களை சேர்த்து சொல்வார்கள். உதாரணமாக இவர்கள் தாமதமாக வந்தால் , வரும் வழியில் ஒரு அமைச்சர் 8.30 க்கு வந்தார் , போலீஸ் காரர்கள் 20 பேர் வழியை அடைத்து விட்டார்கள் , அமைச்சர் கார் நகர 9 மணி ஆகி விட்டது , அவ்வளவு நேரமும் டிராபிக்கில் பைக் எஞ்சின் ஆனில் இருந்ததால் பெட்ரோல் முழுக்க தீர்ந்து விட்டது. 9 மணிக்கு அந்த ரோடில் இருந்து சரியாக அரை கிமீ தூரத்தில் உள்ள குமரன் ஏஜென்சி பெட்ரோல் பேங்க் சென்று பெட்ரோல் போட்டு விட்டு அரக்க பரக்க ஓடி வந்தேன் சார் என்பார். 

இதில்  நேரம் , தெரு , பெட்ரோல் ஏஜென்சி வரை விவரமாக சொல்வதால் பொய் என்று கண்டுபிடித்து விடலாம். உண்மையில் காரணம் இருந்தால் , சாரி சார் , இனி இப்படி நடக்காது என்று அவர் பாட்டுக்கு வேலையை செய்ய கிளம்பி விடுவார். மேனேஜரின் சமாதானம் ஆகி விட்டாரா? என்று பொய் சொல்பவர் காத்துக் கொண்டிருப்பார்.

4. பொய் சொல்பவரின் கண்களையும் உடல் மொழியையும் கூர்ந்து கவனியுங்கள். கண்களை அவர்கள் பார்த்து பேசும் போது சுதாரிப்பாக முகத்தை பாவமாகவோ, அல்லது கோவமாக இருப்பதை போலவோ நடிப்பார்கள் . இவர்கள் பொய் சொல்வதில் தங்களை எக்ஸ்பர்ட் என்று நினைப்பார்கள். அவர்கள் சொல்வதை நாம் கேட்டுக் கொண்டால் சட்டென்று அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியும் திருப்தியும் கிடைக்கும். ஹப்பாடா , நம்ம சொன்ன பொய்யை நம்பிட்டாங்க என்று. உண்மையை பேசுபவர் தங்களின் சோகத்தையும் கோபத்தையும் உடனடியாக மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இதை வைத்து கண்டறியலாம்.

இதையும் படியுங்கள்:
அற்ப விஷயங்களுக்கு பொய் சொல்வதில் அப்படி என்ன ஆனந்தம் குழந்தைகளுக்கு?
Lie

5. யாரேனும் பொய்யா கதை சொல்றாங்கன்னு தெரிஞ்சா , திரும்ப திரும்ப அதே கதையை கேளுங்க. அப்போது அவங்க முகத்தை கூர்மையாக கவனியுங்க. இப்போது அவங்க சொன்ன பொய்யில் எக்ஸ்ட்ரா 4 பிட் சேர்ப்பாங்க. கதையில் சில மாற்றங்களும் செய்வாங்க. அங்கங்க நீங்க ஒரு சில நிமிடம் அவர் பேச்சை நிறுத்தி மீண்டும் சொல்ல சொன்னால் , அவர் லேசாக திணற தொடங்குவார். அவராகவே கதையை சொல்லி கிளம்பும் மனநிலையில் இருப்பார் , இதை வைத்துக் கண்டறியலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com