ஹிந்து மதத்தில் கடவுளின் ஆசியை பெற அவர்களுக்கு விருப்பமான மாலைகளை கழுத்தில் அணிவது வழக்கம். புராணக் கதைகளின்படி பிரம்மதேவரும், சரஸ்வதி தேவியும் கையில் ஒரு மணி மாலையை பிடித்து உருட்டிக் ஜெபித்துக் கொண்டிருப்பதை பார்த்திருக்கலாம். ஶ்ரீ ஹனுமான் துளசியில் செய்த மாலையில் உள்ள மணிகளை உருட்டியவாறு ராமநாமம் ஜெபித்துக் கொண்டிருப்பார்.
புனிதமான மாலையை கழுத்தில் அணியவும் அல்லது கைகளில் உருட்டி ஜெபம் செய்யவும் பயன்படுத்தலாம். வழக்கமாக மணி மாலைகளில் மொத்தம் 108 மணிகள் இருக்கும், சில மணி மாலைகளில் நடுவில் ஒரு மணி அதிகமாக இருக்கும் இது குரு மணி மாலை என்று அழைக்கப்படுகிறது. மணி மாலைகளில் நிறைய வகைகள் உள்ளன. ஒவ்வொரு மணி மாலையும் தனித்துவமானது, ஒரு காரணத்திற்காக, ஒரு கடவுளின் ஆசி பெற உருவாக்கப்பட்டது. மணி மாலைகளில் ஏராளமான வகைகள் உள்ளன. அவற்றில் முக்கியத்துவம் மிகுந்த மணி மாலைகளை பற்றி இங்கு அறிவோம்.
பொதுவாக ஹிந்து மதத்தினர் அதிகம் பயன்படுத்தும் மாலை இது தான். தூய்மையின் அடையாளமான துளசி மாலை விஷ்ணு பகவானுக்கும், ஐயப்பனுக்கும் உகந்தது. இந்த மாலை முழுவதும் ஆன்மீக நோக்கத்திற்கு மட்டுமே பயன்படும்.
சிறிய சங்குகளை கோர்த்து உருவாக்கும் இந்த மாலை ஶ்ரீ கிருஷ்ணருக்கு பிடித்தமானது. சிறு வயதில் உள்ளவர்களுக்கு ஒற்றை சங்கை மாலையாகப் போடும் வழக்கம் இருந்தது. இது திருஷ்டி போன்றவற்றில் இருந்தும் காக்கும்.
தாமரை விதைகளில் செய்யப்படும் இந்த மாலை மஹா லக்ஷ்மிக்கு மிகவும் விருப்பமானது, அவர் கையில் இந்த மாலையை வைத்திருப்பார். இது நல் அதிர்வுகளையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும். மஹாலக்ஷ்மி ஆசி பெற விரும்புபவர்கள் இந்த மாலையை அணியலாம்.
இது சிவபெருமானின் சக்தியை பெற அணிவது. ருத்ராட்சம் சிவ பெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து உருவானது. மிகவும் புனிதமான இந்த மாலையை அணியை சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். ருத்ராட்சத்தில் பல முகங்கள் உள்ளது. உங்களின் ஆன்மீக உணர்வுக்கு தகுந்த முகத்தை தேர்வு செய்து மாலை அணிய வேண்டும்.
மஞ்சள் கிழங்குகளை மணிகளாக செதுக்கி செய்யப்படும் மாலை இது. உடலை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த மாலையை அணிகிறார்கள். மங்களகாரமான செயல்கள் நடைபெற அம்பிகையை வேண்டி இந்த மாலை அணிகிறார்கள்.
சிவபெருமானுக்கு உகந்த இந்த மாலையை அணிய சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். தீய சக்தி மற்றும் தீய செயல்களில் இருந்து ஒருவரை இது காப்பாற்றும்.
ஜோதிட ரீதியாக செவ்வாய் அருளைப் பெற விரும்புபவர்கள் இந்த மாலையை அணிந்து கொள்ளலாம். முருகன் அருளைப் பெற விரும்புபவர்களும் இந்த மாலையை அணியலாம்.
சந்தன மரத்தில் இருந்து செய்யப்படும் இந்த மாலை அதிர்ஷ்டத்தை ஈர்க்க கூடியது. மஹா விஷ்ணு, லஷ்மி, ஐயப்பன் போன்ற கடவுளின் அருள் பெற விரும்புபவர்கள் இந்த மாலையை அபியாலாம்.
இந்த மாலை சனிஸ்வர பகவானின் அருளைப் பெறவும், அவரது உக்கிர பார்வையில் இருந்து தப்பிக்கவும் அணியலாம். ஆயினும் செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்கள் இந்த மணியை அணியக் கூடாது.
வெண்மையான முத்து மணி மாலை மகாலட்சுமிக்கு உரியது. தூய்மையின் அடையாளமாக இருப்பதால் சரஸ்வதியின் அருள் பெற விரும்புபவர்களும் இதை அணியலாம். ஶ்ரீ கிருஷ்ணருக்கு முத்து மாலை பிடித்தமானது.
பல ரத்தினங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மணி மாலை முழுவதும் அதிர்ஷ்டத்தை கொண்டு வர வல்லது. ஒவ்வொரு நிறமும் ஒரு கடவுளுக்கு உரியது என்பதால், ரத்தின மாலை பல கடவுளின் ஆசியை கொண்டு வரும்.
கிருஷ்ண அவதாரத்தில் சியமந்தக மணி மாலை என்று ஒரு சக்தி வாய்ந்த மாலை குறிப்பிடப்படும். அது சூரிய தேவனிடம் இருந்து பலர் கைமாறி கிருஷ்ணருக்கு வரும். கிருஷ்ணரை தவிர வேறு யாருக்கும் அந்த மாலை ராசியாக இருக்காது. அது போல உங்களுக்கு அதிர்ஷ்டம் உள்ள மாலைகளை அணியுங்கள்.