நீங்கள் நீங்களாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்! 

Learn to be yourself.
Learn to be yourself.
Published on

நீங்கள் நீங்களாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்” - இந்த வாக்கியத்தை நீங்கள் எத்தனை முறை கேட்டிருப்பீர்கள்? எத்தனை முறை நம்மிடம் நாமே சொல்லியிருப்போம்? ஆனால், உண்மையில் நீங்கள் நீங்களாக இருப்பது என்றால் என்ன? நீங்களாக இருக்க கற்றுக்கொள்வது எப்படி? இத்தகைய கேள்விகளுக்கு இந்த பதிவானது பதிலளிக்கப் போகிறது. 

நீங்கள் நீங்களாக இருப்பதற்கு முதலில் உங்களது தனித்துவத்தைக் கண்டறிவது முக்கியம். உங்களை மற்றவர்களிடமிருந்து தனித்துவமாக்குவது எது? உங்கள் ஆர்வங்கள் என்னென்ன? உங்கள் திறமைகள் என்ன? உங்கள் மதிப்புகள் என்ன? இத்தகைய கேள்விகளுக்கு பதில் அளிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்களைப் பற்றி அதிகமாக சிந்திக்கவும். உங்களது உள் உணர்வுகளை கவனிக்கவும். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள். புதிய விஷயங்களை முயற்சி செய்யுங்கள். உங்களை சுற்றி உள்ள உலகத்தை நன்கு ஆராய்ந்து பாருங்கள். 

மனிதர்களாகிய அனைவருக்கும் உணர்ச்சிகள் என்பது இருக்கும். சந்தோஷம், துக்கம், கோபம், பயம், அன்பு போன்ற உணர்வுகளை அனைவருமே வெளிப்படுத்துவார்கள். இத்தகைய உணர்வுகள் உங்களுக்கும் ஏற்படுவது சகஜமே. எனவே, இவற்றை புறக்கணிக்காமல் தைரியமாக ஏற்றுக்கொண்டு அவற்றை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உண்மையிலேயே உங்கள் உணர்ச்சிகள் உங்களுக்கு என்ன சொல்ல வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுடைய உண்மையான கருத்துக்களை மற்றவர்களிடம் வெளிப்படையாக சொல்ல பயப்படாதீர்கள். பிறர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காக உங்களை பிறரிடம் பொய்யாக வெளிப்படுத்த வேண்டாம். உங்களது கருத்துக்களை நீங்கள் தைரியமாக கூறினாலே நீங்கள் நீங்களாக இருக்கிறீர்கள் என அர்த்தம். 

அதேபோல தவறு செய்ய பயப்படாதீர்கள். தவறு செய்வது வாழ்க்கையின் ஒரு பகுதி. நீங்கள் செய்யும் தவறுகளில் இருந்து பாடத்தைக் கற்றுக்கொண்டு அவற்றை வாழ்க்கையில் முன்னேற பயன்படுத்துங்கள். நீங்கள் செய்யும் தவறுகள்தான் உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும். 

இதையும் படியுங்கள்:
நீங்கள் உங்கள் பணியில் சிறக்கவேண்டுமா? அப்போ இது உங்களுக்குத்தான்!
Learn to be yourself.

நீங்கள் நீங்களாக இருப்பதற்கு, உண்மையில் உங்களைப் பற்றி தெரிந்துகொண்டு அதில் நீங்கள் திருப்தியடைய வேண்டும். உங்களது ஏற்ற இறக்கங்கள் அனைத்தும் சேர்ந்ததுதான் நீங்கள். எனவே, உங்களை முதலில் ஏற்றுக்கொண்டு நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்து, கவனித்துக் கொள்ளுங்கள். 

நீங்கள் நீங்களாக இருப்பதென்பது அவ்வளவு எளிதானது அல்ல. இது ஒரு பயணம். இந்தப் பயணத்தில் சவால்கள் இருக்கும், தடைகள் இருக்கும். ஆனால், விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் நீங்கள் செயல்பட்டால் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். நீங்கள் நீங்களாகவே இருந்து உலகிற்கு உங்களது தனித்துவமான பங்களிப்பை வழங்குங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com