கற்பது விரைவில் மறந்து விடுகிறதா? இதோ இருக்கிறது 50/50 விதி! 

50/50 rule: Learn Without Forgetting.
50/50 rule: Learn Without Forgetting.
Published on

ந்தப் பதிவை முழுமையாக நீங்கள் படிப்பதன் மூலம், இனி நீங்கள் கற்கும் விஷயங்களில் 90 சதவீதத்தை உங்கள் நினைவிலேயே நிலை நிறுத்த முடியும்.

கற்றல் என்பது நாம் அறியாத ஒன்றை தெரிந்துகொள்வது. அதனை தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல் அது சார்ந்த விஷயங்களை நம்முடைய வாழ்வில் பயன்படுத்தி ஏதோ ஒரு நன்மையை ஏற்படுத்திக்கொள்வது. ஆனால் பெரும்பாலும் நாம் கற்பது நம் நினைவில் இருப்பதில்லை. இதற்கு காரணம் என்னவென்று நீங்கள் எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா?

நாம் ஒரு சிலரைக் கண்டிருப்போம். அதாவது அவர்கள் என்ன கூறுவார்கள் என்றால், “எனக்கு இதுசார்ந்த விஷயங்கள் தெரியும். ஆனால் அதனை உங்களுக்கு என்னால் விவரிக்க முடியவில்லை” என சொல்வார்கள். இதில் உண்மை என்னவென்றால், அவர்களுக்கு அதைப் பற்றி சரியான புரிதல் இல்லை என்பதனாலேயே, பிறருக்கு அதனை அவர்களால் விவரிக்க முடியவில்லை.

எனவே நாம் கற்கும் அனைத்தையும் மனதில் நிறுத்த பயன்படுத்தும் முறையின் பெயர் 50/50 விதி…

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நாம் ஒரு புத்தகத்தை ஒரு மணி நேரத்தில் படிக்கிறோம் என்று வைத்துக்கள்வோம். அந்த ஒரு மணி நேரமும் அப்புத்தகத்தை அப்படியே படித்துக் கொண்டிருந்தால் அதில் உள்ள கருத்துக்கள் நம் மனதில் அவ்வளவாக பதியாது. இந்த விதியின்படி என்ன செய்ய வேண்டுமென்றால், அந்தப் புத்தகத்தின் பாதியை 30 நிமிடத்தில் படித்து, மீதமுள்ள 30 நிமிடம் நாம் படித்த பாதி புத்தகத்தை பிறருக்கு கற்பிப்பது போல் நினைத்துப் பார்க்க வேண்டும். 

50% கற்றல்.

50% கற்றதை கற்பித்தல்.

எவன் ஒருவன் தான் கற்றதை பிறருக்கு கற்பிக்கிறானோ, அது அவனுடைய நினைவில் 90% நின்றுவிடும். ஒருவருக்கு ஒரு விஷயத்தை நாம் கற்பிக்க முற்படும்போது முதலில் நாம் அதை நன்றாகக் கற்றுக் கொள்ள முற்படுவோம். ஏனென்றால் நாம் பிறருக்கு தவறாக கற்றுக் கொடுத்தால் அவர் நம்மை தவறாக எண்ணுவார் என்ற பயத்தின் காரணமாக இப்படி செய்வோம்.

எனவே ஒரு விஷயத்தை பிறருக்குக் கற்பிப்பது போல் நாம் அறிந்துகொண்டு விட்டாலே, அது நமக்கு முழுவதும் புரிந்துவிடும். புரிந்த விஷயங்கள் அவ்வளவு எளிதில் நமக்கு மறந்துவிடாது.

இதை நான் எப்படி பயிற்சி செய்யலாம்? நாம் கற்றதை பிறருக்கு கற்பித்துதான் பயிற்சி செய்ய வேண்டுமா? என்றால், இதனை மிகவும் எளிமையாக உங்களுடைய திறன்பேசியிலேயே நீங்கள் கற்ற விஷயங்களை ஒரு காணொளியாக பதிவு செய்து பார்க்கலாம். நம்மால் நாம் கற்ற விடயங்களை கோர்வையாக்க முடிகிறதா? என்று முயற்சியுங்கள். அவ்வாறு பயிற்சி செய்து பழகிவிட்டால் அது ஒரு நல்ல முடிவினை உங்களுக்குக் கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
லாபத்தை அள்ளித் தரும் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி!
50/50 rule: Learn Without Forgetting.

இல்லை உங்களால் காணொளி தயாரிக்க முடியவில்லை என்றால், நீங்கள் படித்த விஷயங்களை நன்கு புரிந்துகொண்டு ஒரு காகிதத்தில் அதை ஒரு கட்டுரையாக எழுதிப் பார்க்கலாம். படித்ததை அப்பட்டமாக காப்பி அடிக்க வேண்டாம், அதில் மிக முக்கியமான பாயிண்டுகளை மட்டும் நினைவுகூர்ந்து எழுதிப் பார்த்தல் சிறந்தது. அவ்வாறு நீங்களே சிந்தித்து அதை பற்றி எழுதும்போது, அது இன்னும் உங்களுடைய மனதில் ஆழப் பதியும். இதுவும் சிரமமாக இருந்தால் திறன் பேசியில் ஆடியோ ரெக்கார்ட் செய்து நீங்களே கேட்கலாம். 

எனவே ஒரு விஷயத்தை நாம் என்றைக்கும் மறக்காமல் இருக்க, பிறருக்கு கற்பிப்பதைப் போல் அதனை நாம் கற்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com