
கவலைப்படாதீர்கள். மகிழ்ச்சியாக இருங்கள். எப்பொழுதெல்லாம் உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி ஒரு குறிப்பிட்ட எண்ணச் சுழற்சியில் சிக்கிக் கொள்கிறதோ, இதற்குப் பெயர்தான் கவலை. அப்போதுதான் நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். கவலை என்பது ஏதோ ஒன்றைப் பற்றி சிந்தித்து மீண்டும் மீண்டும் அந்த எண்ணச் சூழ்ச்சியில் சிக்கிக் கொள்வதுதான்.
ஏதாவது ஒன்றைப் பற்றிச் சிந்திப்பதற்குப் பெயர் கவலை இல்லை. ஆனால் ஒன்றைப் பற்றியே மீண்டும் மீண்டும் சிந்தித்துக் கொணாடிருப்பீர்களானால் அதுதான் கவலை. அப்படியானால் உங்கள் மனமும் ஒரு கீறல் விழுந்த ரிகார்டுபோல் ஆகிவிட்டது. இது மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கின்றது.
உங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு நிகழ்வு உங்களை வெகுவாக பாதித்திருக்கக்கூடும். புண்படுத்தி இருக்கலாம். அதை சரி செய்வதற்கும் பதிலாக நீங்கள் வேறொரு சிந்தனைக்கு மாறிவிடுகிறீர்கள். முதலில் இது உங்களுக்கு ஆறுதலாகத் தெரிந்தாலும் காலப்போக்கில் உங்களை மேலும் விரக்தி அடையச் செய்கிறது.
ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட நேர்மறை சிந்தனையை உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப் பலர் முயற்சித்திருப்பார்கள். கவலைப்டாதே, மகிழ்ச்சியாக இரு. எது நடந்தாலும் நல்லதற்கே. அனைத்தும் சரியாகிவிடும். இதுபோன்ற பல போதனைகள் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.
நேர்மறையைப் போதித்தவர்களே பின்னாளில் தங்கள் மனதை இழந்து, தற்கொலையும் செய்து கொண்டார்கள். ஏனென்றால் அவர்களுடைய இந்த கோட்பாடு ஆரம்பத்தில் மட்டுமே சிறிதளவு பயனளித்தது. அது வாழ்க்கையின் அனைத்து பரிணாமங்களுக்குள் பலனளிக்கவில்லை.
இந்தப் படைப்பிற்கு ஆதாரமாக விளங்கும் உண்மையைத் தவிர வேறு எதுவும் வாழ்க்கையின் அனைத்து பரிணாமங்களுக்குள் பலனளிக்காது. இந்தப் படைப்பிற்கு ஆதாரமாக இருப்பது கடவுள். உங்கள் படைப்பின் மூலமானது எங்கேயிருப்பதாக, தற்போது உங்கள் அனுபவத்தில் உணர்கிறீர்களா? உள்ளுக்குள்ளேயா அல்லது வெளியிலா? கண்டிப்பாக உங்களுக்கு உள்ளேதான் இல்லையா? இந்த படைப்பின் மூலமே உங்களுக்குள் இருந்துதான் நடக்கிறது. உங்கள் இருப்பின் ஆதாரமும், படைப்பின் மூலமும் ஆனந்தம்தான். இது ஒன்றுதான் வழி.