ஆரம்பம் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்... முடிவை மட்டும் பாருங்கள்...!

வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா
வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா

எதற்கும் தயாராக இருக்க வேண்டும் ஒருநாள் நமக்கான வாய்ப்பு வரும்.

- ஆபிரகாம் லிங்கன்.

ங்கள் வாழ்க்கையின் ஆரம்பம் எப்படி வேண்டு மானாலும் இருந்துவிட்டு போகட்டும். முடிவில் உங்கள் வாழ்க்கை உன்னதமானதாக இருக்க வேண்டும். அதற்கு உங்களை நீங்களே மாற்றிக் கொண்டாலே போதுமானது . தவறுகள் நடப்பது உங்களை நீங்கள் திருத்திக் கொள்ள. முயற்சிகள் எடுப்பது உங்களை நீங்கள் முன்னேற்றிக் கொள்ள. உங்கள் மனதை உறுதியாகவும், உற்சாகமாகவும், ஊக்கமுடன் வைத்திருங்கள். வெற்றி தானாக உங்களை தேடி வரும்.

உயர்ந்த இலக்கை அடைவது என்பது ஒரேயடியாக நிகழ்வது இல்லை. ஒவ்வொரு அடியையும், ஒவ்வொரு நொடியுயைம், ஒவ்வொரு படியையும் உன்னிப்பாக உற்று நோக்குவதில் அது அடங்கியிருக்கிறது.

வாழ்க்கையில் உயர ஆசை இருந்தால் வளைந்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். வில் வளைந்து கொடுக்காமல் அம்பு ஒருபோதும் இலக்கை எட்டாது. இல்லாததை தேடுங்கள் நிச்சயம் ஒருநாள் கிடைக்கும். இழந்ததை மட்டும்தேடாதீர்கள் அது வேறொருவரின் கைகளில் கிடைத்திருக்கும்.

ஆரம்பத்தில் பேஜாராக தொடங்கிய பலரது வாழ்க்கை முடிவில்  ஜோராக மாறி இருக்கிறது.! உதாரணமாக பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலரை பார்ப்போம்.

சிறு வயதில் தன் மகனும் ,பெண்ணும் "வீடியோ கேம் "களிலேயே  பொழுதை வீணாக்கி கொண்டு இருக்கிறார்களே என வேதனை அடைந்த அந்த ஏழைத்தாய். அவர்கள் கவனத்தை திசை திருப்ப, "செஸ் போர்டு  "ஒன்று வாங்கி கொடுத்தார்.

அந்த ஒரு சின்ன நல்ல சிந்தனை, அக்குழந்தைகளின் வாழ்க்கையையே திசை மாற்றி விட்டது. ஆம், அந்த குழந்தைகள் தான்  முதல் முறையாக செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற முதல் உடன் பிறந்த ஜோடி என்ற சாதனையை நிகழ்த்திய தமிழகத்தைச் சேர்ந்த அக்கா தம்பியான வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா .அதில் ஒருவர், தன் தாய் வாங்கிக் கொடுத்த செஸ் போர்டு விளையாட்டில் தன் முழு திறமையை காட்டி தன் சிறு வயதிலேயே உலக செஸ் சாம்பியன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று உலகின் பாராட்டைப் பெற்ற பிரக்ஞானந்தா.

ம்ம பிள்ளை உதவாக்கரையாக இருக்கிறானே படிப்பை வரவில்லையே! எந்நக்கடைபில் கொண்டு யோய்வேலைக்கு சேர்த்தாலும் சரியாக வேலை செய்யாமல் அந்தப் பாழும் கணக்கை வைத்து மாரடித்துக்கொண்டு இருக்கிறானே என்று ஒரு ஜெர்மனியத்தம்பதிகள் 1882 ம் ஆண்டு கவலைப் பட்டார்கள். அந்தப்பாழும் கணக்கு தான் அவரை உலகப் புகழும் மா மேதையாக்கியது. அவர் தான் விஞ்ஞானி ஐன்ஸ்டீன்.

ரியான சோம்பேறி. வேலையைச்சரிபாக செய்ய மாட்டான். என்று ஒவ்வொரு துணிக்கடை யிலும் விரட்டிபடிக்கப்பட்டான் ஒரு இளைஞன் ஆரம்பத்தில், அந்த இளைஞன் தான் பின்னாளில் அமெரிக்காவின் ஜனாதிபதியானார் அவர் தான் ஹாரி ட்ரூமன்.

வில்லியம் ஷேக்ஸ்பியர்
வில்லியம் ஷேக்ஸ்பியர்

ண்டன் அருகே ஒரு கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த அந்த சிறுவன் கிராமத்தில் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால் பலருடைய வெறுப்புக்கு ஆளாகி லண்டனுக்கு ஓடும்படியாயிற்று, அங்கு ஒரு நாடகக் கொட்டகையில் நாடகம் பார்க்க வருபவர்களின் குதிரைகளை பார்த்துக்கொள்ளும் வேலை கிடைத்தது. தினமும் பல நாடகங்களை காண நேர்ந்தது அந்த சிறுவனுக்கு. இதன் விளைவாக அந்த சிறுவன் பின்நாளில் உலகப்புகழ் பெற்ற நாடக ஆசிரியரானார் அவர் தான் வில்லியம் ஷேக்ஸ்பியர்.

இதையும் படியுங்கள்:
பார்வை திறனை மேம்படுத்தும் பத்து உலர் பழங்கள்!
வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா

வாழ்க்கையில் தோல்வி மட்டுமே தொடர்ந்து வந்தால் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. தோல்வியை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். உடல் காயத்துக்கு மருந்திடுவது போல மனக்காயத்துக்கு மறப்பதே மருந்தாக எடுத்துக் கொள்ளுங்கள். காலங்களும், காயங்களும் நிலையானது அல்ல. பொறுமையாக இருங்கள். கடைசி நிமிடத்தில் கூட ஆட்டங்கள் மாறலாம். அப்போது சூழ்நிலைகள் மாறி விடியலும் தோன்றும், வெற்றியும் நிகழும்.

ஓராயிரம் முறை தோற்றாலும் ஒரு முறையாவது வெற்றி பெறுவேன் என்று சொல்லுங்கள் அதுவே உங்கள் தன்னம்பிக்கையின் உச்சம். உங்கள் பாதையில் ஆயிரம் தடுமாற்றம் வரலாம். ஆனால் உங்கள் பயணம் தடம் மாறாது. பயமின்றி பயணம் செய்யுங்கள் வெற்றி நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com