உலகத்திலேயே தலைசிறந்த டான்ஸர் மற்றும் ‘கிங் ஆப் பாப்’ என்று அனைவராலும் அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்சன் 150 வயது வரை வாழ ஆசைப்பட்டார் என்பது தெரியுமா? இவரைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1958 ல் அமேரிக்காவில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் மைக்கேல் ஜாக்சன் பிறக்கிறார். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர். இவருடைய ஐந்து வயதிலேயே பாட்டுப்பாடிக்கொண்டு டான்ஸ் ஆடத்தொடங்குகிறார். இவருடைய ஏழு வயதிலிருந்து Professional ஆக பயிற்சி செய்யத் தொடங்குகிறார்கள்.
மைக்கேல் ஜாக்சனுடைய தந்தை மிகவும் கண்டிப்பானவர் என்பதால் இது எதுவுமே அவருக்கு தெரியாது. ஒருமுறை ஒரு சின்ன போட்டியில் மைக்கேல் ஜாக்சன் அவருடைய நண்பர்களுடன் சென்று கலந்துக்கொள்கிறார். இவருடைய பாட்டையும், நடனத்தையும் பார்த்து ரசித்து அனைவருமே கைத்தட்டுகிறார்கள். அந்த போட்டியில் இவருக்கு முதல் பரிசுக் கொடுக்கிறார்கள்.
இதிலிருந்து இவரை வீட்டிலேயும் ஊக்கப்படுத்த ஆரம்பிக்கிறார்கள். இதுவே இவருக்கு ஒரு போதையாக மாறுகிறது. அதற்கு பிறகு நிறைய கச்சேரிகள் நடத்துகிறார். இவருடைய நடனத்தில் கின்னஸ் ரெக்கார்டும் செய்கிறார்.
இவருடைய புகழ் உலகம் முழுவதும் பரவுகிறது. மைக்கேல் ஜாக்சனின் Thriller, Beat it, Smooth criminal, Billie Jean போன்ற பாடல் ஆல்பங்கள் உலகப்புகழ் பெற்றவையாகும். இவருடைய நடனத்தில் உள்ள Moonwalk, lean step மிகவும் பிரபலமாகும். இன்றுவரை நடனம் என்றாலே மைக்கேல் ஜாக்சனைப்போல ஆட வேண்டும் என்று ஆசைப்படும் எண்ணற்ற ரசிகர்களை சம்பாதித்திருக்கிறார்.
இப்படி நன்றாக சென்றுக் கொண்டிருந்த இவருடைய வாழ்க்கையில் திடீரென்று இவருக்கு தோல் சம்மந்தமான பிரச்னைகள் வருகிறது. இதற்காக இவர் முகத்தில் நிறைய அறுவை சிகிச்சைகள் செய்கிறார். இவருக்கு 150 வயது வரை வாழ ஆசையிருந்தது. அதனால் பலகோடி செலவு செய்து நிறைய மருத்துவர்களைக் கொண்டு தன் வீட்டையே மருத்துவமனையாக மாற்றினார்.
இருப்பினும், விதி யாரை விட்டது. நிறைய ஊசிகளும், மருந்துகளும் எடுத்துக்கொண்டதால், இவருடைய 50 ஆவது வயதிலேயே இறந்து போகிறார். மைக்கேல் ஜாக்சனின் உடல் அழிந்துப்போனாலும் இவருடைய பெயரை இந்த உலகம் மறக்கவில்லை. 150 வயது வரை இவரால் வாழ முடியவில்லை என்றாலும் இவர் செய்த சாதனைகள் நிச்சயமாக இவருடைய பெயரை காலத்திற்கும் சொல்லும் என்பதில் ஐயமில்லை.