வாழ்க்கையை அழகாக மாற்ற நாம் கடைப்பிடிக்க வேண்டிய 10 தத்துவங்கள்!

beautiful women
10 life quotesImage Credits: Vecteezy

இரண்டு வரிகளைக் கொண்ட திருக்குறளில் எப்படி எண்ணற்ற உலக ஞானம் அடங்கியிருக்கிறதோ, அதைப்போன்று சில மேற்கோள்கள் சிறியதாக இருந்தாலும் படிக்கும் போது உற்சாகமும், ஊக்கமும் கொடுக்கக்கூடியதாக இருக்கும். அப்படிப்பட்ட 10 மேற்கோள்களைப் பற்றி தான் இந்த பதிவில் காண உள்ளோம்.

1. வாழ்க்கை போகும் பாதையை மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வழி கிடைக்கும். அதை அலட்சியமாக கையாள்பவர்களுக்கு, ஏன் மாற்ற முடியவில்லை என்று சொல்வதற்கு சாக்குப்போக்குகள் தான் கிடைக்கும்.

2. நீங்கள் யாரைப் போல ஆக விரும்புகிறீர்களோ அவர்களிடம் நெருக்கமாகவும், யாரைப் போல ஆக விரும்பவில்லையோ அவர்களிடமிருந்து விலகியும் இருப்பதே வாழ்க்கைக்கு நல்லதாகும்.

3. நாம் அனைவருமே நம்முடைய சிந்தனைகளுக்கு அடிமையானவர்களே! நாம் எப்படி யோசிக்கிறோம் என்ற விதத்தை நம்மால் மாற்ற முடியவில்லை என்றால் நம் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையுமே கொண்டுவர முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

4. நாம் எதில் கவனம் செலுத்த வேண்டும், எதைப் புறக்கணிக்க வேண்டும் என்று தெளிவாக எடுக்கும் முடிவே நம் வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.

5. ஒவ்வொரு நாளும் சின்ன சின்ன அடியாக எடுத்து வைத்து என்ன நாம் செய்கிறோம்? என்ன நாம் யோசிக்கிறோம்? என்று நாம் எடுக்கும் முடிவுகள் தான், என்ன நாம் ஆகப் போகிறோம்? என்பதை நிர்ணயம் செய்கிறது.

6. உனக்கு வேண்டியதை இந்த உலகில் யாராவது தரமுடியும் என்றால் அது நீயாகவேயிருப்பாய்!

7. வாழ்க்கையில் பெற்ற வெற்றி என்பது நமக்கு என்ன கிடைத்தது என்பதை பொருத்ததில்லை. நாம் அதனால் என்னவானோம் என்பதை பொருத்தே இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
கம்பர்ட் ஸோனை விட்டு வெளியே வரக் கற்க வேண்டிய 9 பாடங்கள்!
beautiful women

8. வாழ்க்கையில் எது செய்வதாக இருந்தாலும், இப்போதே இந்த நொடியே செய்துவிடுவது சிறந்தது. ‘அப்பறம் செய்கிறேன்’ என்று சொல்லும் நேரம் நம் வாழ்வில் வரப்போவதே கிடையாது.

9. அடுத்தவர்கள் வாழ்வில் வெற்றிப் பெற நாம் உதவும் போது, நமக்கு தேவையானது தானாகவே நம்மிடம் வந்து சேர்ந்துவிடும்.

10. நம் வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டும் என்றால், நிச்சயமாக மாற்றம் இருக்க வேண்டும். தன்னுடைய மனநிலையை மாற்ற முடியாதவர்களால், வாழ்க்கையிலும் பெரிதாக எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com