செயல்திறனை அதிகரிக்கும் ஜப்பானிய கான்பன் (Kanban Technique) டெக்னிக்கை தெரிந்து கொள்வோம்!

motivation articles
motivation articlesImage credit - pixabay

கான்பன் நுட்பம், 1940களில் ஜப்பானில் டொயோட்டா குழுமத்தால் பயன்படுத்தப்பட்டது. டொயோட்டாவின் தொழில்துறை பொறியாளரான தைச்சி ஓனோவால் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக உருவாக்கப்பட்டது. "கான்பன்’’  என்ற வார்த்தைக்கு ஜப்பானிய மொழியில் "கையெழுத்து பலகை" அல்லது "காட்சி சமிக்ஞை" என்று பொருள். இந்த நுட்பம் இன்று உலகில் உள்ள பிற உற்பத்தி நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கான்பன் நுட்பம் என்றால் என்ன?

கான்பன் என்பது ஒரு காட்சி கட்டமைப்பாகும். கான்பன் அட்டைகள் இதில் ஒரு முக்கிய அங்கமாகும். இந்தக் கார்டுகளில் செய்யவேண்டிய வேலைகள், திட்டங்கள், வழிமுறைகள் போன்றவை குறிக்கப்பட்டு ஒரு பலகையில் பொருத்தப்படும். ஒவ்வொரு பணியும் முடிந்த பின் அவை அதற்குரிய வரிசையில் (column) வைக்கப்படும். இதனால் பணிகள் விரைவாக முடிக்கப்படும்.

யாருக்கெல்லாம் இந்த நுட்பம் பயன் தரும்?

தேர்வில் அதிக மதிப்பெண் வாங்க விரும்பும் மாணவருக்கு, தொழிலில் முன்னேற்றம் காண நினைப்பவருக்கு, வெற்றி பெற நினைப்பவருக்கு, இல்லத்தரசிக்கு என எல்லாத்தரப்பினருக்கும்   உதவும். 

வீட்டில் இதை எப்படி பயன்படுத்துவது?

வீட்டில் வெள்ளை போர்டு அல்லது கார்ட்போர்ட் அட்டை இருந்தால் அதில் ஒட்டிக் கொள்ளும் ஸ்டிக்கி நோட்ஸ் எனப்படும் சிறு காகிதங்கள் கொண்ட ஒரு நோட் வாங்கி ஒட்டிக்கொள்ளலாம். போர்டில் சில வரிசைகளை அமைத்துக்கொள்ளவும்.

வரிசை நம்பர் 1 ல் செய்ய வேண்டிய வேலைகள் பற்றிய ஒரு பட்டியல். (To do list) தயார் செய்ய வேண்டும்

உதாரணமாக, மாணவராக இருந்தால், அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மென்ட்கள், ப்ராஜக்ட்டுகள் மற்றும் படிக்க வேண்டிய பாடங்கள், தேர்வுத் தயாரிப்புகள் போன்றவற்றை குறித்துக் கொள்ளவும்.

அடுத்த வரிசையில் செய்து கொண்டிருக்கும் வேலை-  அதாவது பள்ளி அசைன்மென்ட் அல்லது ப்ராஜெக்ட். (Work doing) மூன்றாவதில் - செய்து முடித்த வேலை பற்றிய விவரம் (Done) இந்தக் குறிப்புகளை ஸ்டிக்கி நோட்டுகளில் எழுதி அவற்றை அந்தந்த குறிப்பிட்ட வரிசையில் ஒட்டி வைக்கவும். வேலை முடிய முடிய அந்த நோட்டுகளை சரியான வரிசையில் அமைக்கவும். 

இதையும் படியுங்கள்:
எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்; ஏற்றம் நிச்சயம்!
motivation articles

நுட்பத்தின் பிற நிலைகள்;

தாம் எடுக்கவிருக்கும் முயற்சிகளையும் அவற்றின் நிலையையும் காட்சிபடுத்திப் பார்க்க வேண்டும். அதற்காக தான் செலவிடும் நேரத்தையும் திட்டமிட்டு கொள்ள வேண்டும். பின்பு உடனே செய்து முடிக்க வேண்டிய முக்கியமான வேலைகளை  சரியான நேரத்தில் முடிக்க வேண்டும்.

தன்னுடைய முன்னேற்றத்தை கண்காணிக்க வேண்டும். தள்ளிப்போடுதலை குறைத்துக் கொள்ள வேண்டும். எல்லா வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்யத் தொடங்காமல் ஒரு நேரத்தில் ஒரு வேலை என்று செய்ய வேண்டும். ஒன்றை முடித்துவிட்டு அடுத்ததை தொடங்க வேண்டும். 

பயன்கள்;

இந்த முறை மனதிற்கு சுமையில்லாமல் மிகவும் இலகுவாக இருக்கும். தங்களுடைய இலக்கு மற்றும் திட்டங்களை எழுத்து வடிவில் எழுதும் போதும் அதை பார்க்கும்போதும் மனம் லேசாகிறது. வேலை செய்ய தூண்டுகிறது. அதில் குறிப்பிட்டுள்ள திட்டத்தின்படி ஒவ்வொரு பணியாக முடிய முடிய அது உற்சாகத்தை தரும். மீண்டும் நன்றாக வேலை செய்ய தூண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com