ஒவ்வொரு இல்லத்திலும் யாரேனும் ஒருவர் பெருந்தன்மையாக இருப்பதால்தான் உறவுகள் நீடிக்கின்றன. பெருந்தனாமை என்பது உணர்வுஙளின் உச்சம். அன்பு கருணை, பொறாமையின் மை, மன்னித்தல் போன்ற உத்தம குணங்கள் பெருந்தன்மையால் ஏற்படும். பெருந்தன்மை என்பது பலத்தால் வரவேண்டுமே தவிர பலவீனத்தால் அல்ல. அன்பால் வர வேண்டுமே தவிர ஆளுமையால் அல்ல. பெருந்தன்மை என்பது விழிப்புணர்வுடன் வெறும் உணர்ச்சி மட்டும் உந்தாமல் எடுக்கப்படுகின்ற உணர்வுபூர்வ நடவடிக்கை. அது தேனீக்களுக்கு மகரந்தத்தைத் தருகின்ற செயலாக இருக்க வேண்டுமேதவிர இலைகளையே தின்ன அளிக்கிற மூடத்தனமாக இருக்கக் கூடாது.
பெருந்தன்மை என்பது ஒருவர் பெற்றிருக்கும் செல்வம் பொறுத்து அமைவதில்லை. விமானத்தில் பயணம் செய்கின்ற சிலர் அற்பத்தனமான பணிப் பெண் தரும் மிட்டாய்களை அள்ளி பையில் திணித்துக் கொள்வார்கள். உயரமான பயணத்திலும் தரைமட்டமான குணம் இது.வயதாக ஆக பெருந்தன்மை வரும் என்பது தவறான முடிவு. வயதான ஒரு பாட்டி யாருக்கும் எதுவும் கொடுக்காமல் பணத்தை மூட்டை கட்டி அலமாரியில் வைத்திருந்த விஷயம் இறந்தபிறகு தெரிந்தது. இத்தனைக்கும் வசதியானவர் அவர்.
மிகப் பெரிய பதவி என்பது தந்தை தகுதியைப் போன்றது மன்னிக்கும் மனப்பான்மையே ஒருவரை குடும்பத் தலைவர் ஆக்குகிறது. பதவி உயர்வு பெறும் சிலர் முதலில் ஒரு பட்டியல் தயாரித்து தனக்குப போட்டியாக செயல்பட்டவர்களை துன்புறுத்துவது தான்.மிகச் சிலரே விருப்பு வெறுப்பின்றி நடந்து கொள்வர்.
பெருந்தன்மை அதிகரிக்கும்போது ஒருவன் மனம் பிரபஞ்ச மாக விரிகிறது. அவன் எந்த துன்பம் அணுகினாலும் அதைப் பொருட்படுத்துவதி் ல்லை.இன்று மருத்துவம் கல்வி ஆகியவை வர்த்தகமாகிவிட்டது. கிராமங்களில் பூரான் கடி,தேள்கடி போன்றவற்றிற்கு மருத்துவம் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் காசு வாங்காமலேயே வைத்தியம் பார்ப்பார்கள். உயிரைக் காப்பது கடமை என்ற பெருந்தன்மையோடு இருப்பார்கள். சில மருத்துவர்கள் நோயாளிகள் என்ன கொடுக்கிறார்களோ அதை பெற்றுக் கொள்வதுண்டு.
ஒருவரிடம் வன்மம் உண்டானால் அதைத் தீர்க்க அடுத்த கணமே பெருந்தன்மையுடன் நடந்து கொண்டால் கசப்புணர்வு கரைந்து இனிய மனநிலை உண்டாகும். அற்பத்தனத்தை அற்பத்தனத்தால் அடக்க நினைப்பது முட்டாள்தனம். மிகவும் சாமானியர்கள் ஆக இருப்பவர்கள் தாங்கள் பெருந்தன்மையுடன் இருப்பது கூடத் தெரியாமல் நடந்து கொள்வார்கள் பெருந்தன்மையுடன் வாழும் நாட்டில் அன்பும் பண்பும் மகிழ்ச்சியும் தவழும். நிம்மதி நிறையும்.