எந்த சூழலும் முடிவல்ல… துவக்கத்தின் புள்ளி என்பதைப் புரிந்து முன்னேறுவோம்!

motivation article
motivation articleImage credit - pixabay.com
Published on

"உங்களின் தற்போதைய சூழ்நிலைகள் நீங்கள் எங்கு சென்றடைய வேண்டும் எனத் தீர்மானிப்பதில்லை; அவை வெறுமனே நீங்கள் எங்கு தொடங்க வேண்டும் என்பதைத்தான் தீர்மானிக்கின்றன. " -Nido Qubein.

லெபனான் அமெரிக்க தொழிலதிபரான இவர் 2005 முதல் ஹை பாயிண்ட் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்து வருகிறார். கிரேட் ஹார்வெஸ்ட் ரொட்டி நிறுவனத்தின் தலைவராக உள்ளார். 1974 முதல், Nido Qubein 5,000 க்கும் மேற்பட்ட விளக்கக்காட்சிகளை வழங்கியுள்ளார், தொழில்முறை பேச்சில் பல விருதைப் பெற்றவர் . இவர் ஒரு தன்னம்பிக்கை பேச்சாளராகவும், வணிகப் பேச்சாளராகவும் கருதப்படுகிறார்,

அந்த மாணவி படிப்பில் சுமார் ரகம் என்பதால் வசதியுள்ள அவரின் பெற்றோர் அவரின் பெற்றோர்  அவளூக்கு ஒரு பயிற்சியாளரை நியமித்தார்கள். கல்வியில் அனுபவமிக்க அவர் எவ்வளவோ பாடுபட்டு கற்றுத் தந்தும் பள்ளி இறுதி படிக்கும் அந்த மாணவியால் பாடங்களை அவள் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை ஆனால் அவள் நடனத்திலும் பாட்டிலும் மிகச்சிறந்த ஆர்வத்துடன் இருப்பதை  அந்த பயிற்சியாளர் பார்த்தார்.

தேர்வு வந்தது. அந்த மாணவியால் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெற முடியவில்லை. பெற்றோருக்கு பெரும் ஏமாற்றம். அவர்கள் பயிற்சியாளரை குறை சொன்னார்கள். "சிறந்த பயிற்சியாளர் என்பதால்தான் உங்களைத் தேர்ந்தேடுத்தோம் ..உங்கள் பயிற்சியில்தான் தவறு" என்று அவர்கள்  பயிற்சியாளரை கடிந்து அனுப்பினார்கள்.

மாணவிக்கு தன் பயிற்சியாளர் மீது மரியாதை உண்டு. ஏனெனில் அவர் குரு ஸ்தானத்தில் மட்டுமல்லாமல் அவளின் மற்ற திறமைகளை ஊக்குவிக்கும் ஒரு தோழராகவும் இருந்ததால்தான். தன் குருவிடம் அவள் தன் பெற்றோர் நடந்து கொண்ட விதத்தை எண்ணி வருத்தப்பட்டு அவரை சந்தித்தாள்.. பயிற்சியாளர் முன் அவள் நின்ற அவள் கண்களில்  கண்ணீர். "நீங்கள் நன்றாக சொல்லித் தந்தீர்கள். சாரி. என்னால்தான் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. தேர்வில் என்னால் கவனம் செலுத்தி எழுதவும் முடியவில்லை. இந்த சூழலில் இருந்து நான் எப்படி தப்பிக்க போகிறேன்? இனி எனக்கு வாழ்வில் கல்வி என்பது எட்டா கனிதானா?" என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு அவள் மனம் தளர்ந்தாள்.

இதையும் படியுங்கள்:
எல்லா பிரச்னைகளையும் தீர்க்கும் வல்லமை நமக்கு உண்டு!
motivation article

அந்த பயிற்சியாளர் அவளை ஆசுவாசப்படுத்தி அமர வைத்தார். "பார் உனக்கு நான் கற்றுக்கொடுத்தேன். ஏனெனில் எனக்கு கல்வி என்றால் இஷ்டம். ஆனால் நீயோ நடனம் என்றாலும் பாட்டு என்றாலும் நீ அப்படியே லயித்துப்போவதை நான் கவனித்து இருக்கிறேன். உன் கவனம் முழுவதும் அதில்தான் இருக்கிறது. ஆகவே இந்த சூழலை விட்டுவிடு. கல்வி என்பது அவசியம் தேவை தான். ஆனால் அதுவே வாழ்க்கை அல்ல. திரும்ப தேர்வு எழுதி பாஸாகலாம். ஆனால் உன்னிடம் இருக்கும் இந்த திறமைகளை நீ மேம்படுத்து நல்ல நடனம் கற்று தரும் பயிற்சியாளரைத் தேடு. இசை சம்பந்தப்பட்டவற்றையும் தேடிக் கண்டுபிடி. அதில் உன் ஆர்வத்தை செலுத்து. இது முடிவல்ல இதுதான் உன் துவக்கம் என்று எண்ணிக்கொள்" என்று அவளுக்கு ஒரு வழியை காட்டி அனுப்பினார். அந்த மாணவியும் உடைந்த தன் மனதில் உற்சாகம் நிரப்பி தன்னம்பிக்கையுடன் தன் பெற்றோரிடம் தன் நிலையை விளக்கினாள். அவர்களும் தெளிவாக பேசிய அவளை புரிந்து கொண்டு நல்லதொரு நடனப் பள்ளியில் அவளை சேர்த்தார்கள். அங்கு அந்த மாணவியின் கலைப் பயணத்தின் துவக்கம் ஆரம்பமானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com