உலகப் பந்தை உருட்டி விளையாடுவோம்!

Let's play the world ball rolling!
Let's play the world ball rolling!pixabay.com

"உழைப்பிலிருந்து பிறக்கின்ற இன்பத்தை உணர்ந்துதான் பாரேன்" என்கிறார் அறிஞர் லாங் பெல்லோ. 

பிறருக்காக நாம் உழைப்பதற்கு நேரம் செலவிடுவது பாராட்டத்தக்கது தான் .அதே நேரத்தில் உங்களுக் காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும் .அது உங்களுக்கு மாறுதலாக இருந்து புத்துணர்ச்சி அளிப்பதோடு, உங்களது சொந்த தேவைகளை நிறைவு செய்து கொள்ளவும் உதவும். மீண்டும் உங்கள் பணியை அதிக ஆற்றலோடு செய்யவும் உதவும்.

உங்கள் பணியில் உங்களுக்கு பிடித்ததையும், பிடிக்காததையும் நன்கு ஆய்வு செய்யுங்கள். பின்னர் அவற்றை கையாள தக்க நுட்பங்களை கண்டறியுங்கள். இயலுமானால் உங்கள் உடன் பணியாற்று பவருடன் ஒருங்கிணைந்து பொது நுட்பங்களை கண்டறிந்து கையாளுங்கள். 

ஆற்றலுக்கு மீறிய உழைப்பு தேவைப்படும்போது மனிதனுக்கு திறன் குறைகிறது .தான் விரும்பிய பணியை ஒருவன் வெறுக்கத் தொடங்குகிறான். மன அழுத்தத்தையும் ,திறன்  முறிவினையும் முதலில் ஒருவன் உணர வேண்டும். அவ்வாறு உணர்ந்தால்தான் அவன் அவற்றிற்கு தீர்வு காண இயலும். 

தற்போதைய பணியிலேயே, தற்போதைய நிலைமையில் கவனம் செலுத்துங்கள். வருங்காலத்திற்கு திட்டமிடும் போது தற்போதைய சாதனையே அதற்கு ஆதாரமாக அமையும். உழைப்பு, பொழுது போக்கு இரண்டிலும் தக்க சமச்சீர் பராமரியுங்கள் ;வெற்றியும் கிட்டும்; மகிழ்ச்சியும் பெறலாம்.

'உழைக்காத மனிதனுக்கு மகிழ்ச்சி கிடையாது'-டிஸ்ரேலி

ழைப்பு மனத்தில் இருந்த வெறுப்பையும் கவலையையும் ஒழித்துக் கட்டும் தன்மை உடையது. உழைப்பு வாழ்க்கையை அன்பு மயமாக்கும். பிறர் வாழ்வில் ஒளியேற்ற உதவும்! தம்மை மறந்து பிறரை நினைக்கத் தூண்டும் ! பிறர் எவ்வாறு உங்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அதைவிட நயமாக பிறரிடம் நடந்து கொள்வதை வலியுறுத்தும்! உழைத்தால் நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வது உறுதி!

இனி உழைப்பு ப் பற்றிய ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்! 

ரு கிராமத்தில் ராமு என்ற இளைஞன் இருந்தான். அவன் அந்த கிராமத்திலேயே முதன்முதலாக பட்டப்படிப்பு படித்திருந்தான். ஆனால் அவனுக்கு வேலை கிடைக்க வில்லை .அவனுக்கு நான்கு ஏக்கர் நிலம் இருந்தது. அதில் விவசாயம் செய்ய வயதான அவனுடைய தந்தையால் முடியவில்லை. ராமுக்கும் விவசாயத்தில் நாட்டமில்லை. 

மகன் எந்த வேலையும் இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை பார்த்த அவனுடைய தந்தை அவனிடம் 'இருப்பதை வைத்துக் கொண்டு இல்லாததை பயன்படுத்த வேண்டும் 'என்றார். புரியாமல் அவரைப் பார்த்தான் ராமு .

சக்கரத்தில் 24 ஆரங்கள் இருந்தாலும் அச்சாணியை ஒரு துவாரத்தில் தானே நுழைக்கிறோம். மிகப்பெரிய அரண்மனையைக் கட்டினாலும் அரசர் வசிப்பது ஒரு வெற்றிடத்தில் தானே? வெள்ளி பாத்திரம் ஆனாலும் அதில் உள்ள வெற்றிடத்தில் தானே பாலை ஊற்றுகிறோம். 

தன் தந்தை என்ன சொல்ல வருகிறார் என்று மகன் புரிந்து கொண்டான். மறுநாள் அவன் நான்கு ஆட்களை அழைத்துக் கொண்டு, மண்வெட்டியைத் தூக்கிக் கொண்டு பயிர் செய்யாமல் வெற்றிடமாக கிடந்த தனது நிலத்துக்கு வேலை செய்யச் சென்றான்.

இதையும் படியுங்கள்:
ராகி பர்ஃபி & ராகி ரிப்பன் பக்கோடா!
Let's play the world ball rolling!

அன்பர்களே!

நீங்கள் உண்ணும் உணவுக்கு சுவை கூட்டுவது உழைப்பது தான். உழைப்பால் பெற முடியாதது உலகில் ஒன்றும் இல்லை. உழைப்பில்லாமல் அடையப்பட்டது எதுவுமே கிடையாது .உள்ளத்தில் பதியுங்கள்.; உழையுங்கள்; உயிர்வீர்கள்! 

எல்லா உயிரினங்களிலும் மனிதப் பிறவியே மகத்தானது. அதைவிட மகத்தானது மனிதனின் உழைப்பு. ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்துக் கொண்டே இருங்கள். உழைப்புதான் உங்களை உயர்த்தும்.

எழுந்திருங்கள், விழித்திடுங்கள், உழைத்திடுங்கள், உழைப்பு என்னும் நெம்புகோலால் உலகப் பந்தை உருட்டி விளையாடி வெற்றி பெறுங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com