எந்த ஒரு மோட்டிவேஷன் வீடியோவும் தர முடியாத எனர்ஜியை கொடுக்கும் 15 சூப்பரான வாசகங்கள்!

powerful-book-quotes
powerful-book-quotes
Published on

நமது அன்றாட வாழ்க்கையில் பலவிதமான போராட்டங்களை நாம் தொடர்ந்து சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். சில நேரங்களில் என்னதான் நாம் பாசிட்டிவ்வாக இருந்தாலும் ஏதோ ஒரு சோர்வு நம்மை அறியாமலேயே தொற்றிக் கொள்ளும். அந்த மாதிரி சமயங்களில் நமக்கு ஒரு சின்ன பூஸ்ட் கொடுக்க புத்தகங்களில் உள்ள சில வரிகள் உதவியாக இருக்கும். அப்படி உங்கள் வாழ்க்கைக்கு தினமும் ஒரு புதிய உத்வேகத்தை கொடுக்கும் 15 அட்டகாசமான புத்தக வரிகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.

உத்வேகம் தரும் 15 வரிகள்!

  1. "The only limit to our realization of tomorrow will be our doubts of today." - உங்களின் நாளைய வெற்றியைத் தடுக்கும் ஒரே விஷயம் உங்களின் இன்றைய சந்தேகங்கள் மட்டுமே.

  2. "It does not do to dwell on dreams and forget to live." - கனவுகளைப் பற்றியே நினைத்துக்கொண்டு உங்களின் நிஜ வாழ்க்கையை வாழ மறந்துவிடக் கூடாது.

  3. "And, when you want something, all the universe conspires in helping you to achieve it." - நீங்கள் ஒரு விஷயத்தை முழுமையாக விரும்பினால், அதை அடைய இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமே உங்களுக்கு உதவி செய்யும்.

  4. "There is some good in this world, and it’s worth fighting for." - இந்த உலகத்தில் இன்னும் சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன, அதற்காக நாம் தொடர்ந்து போராடுவதில் தப்பில்லை.

  5. "We are what we repeatedly do. Excellence, then, is not an act, but a habit." - நாம் தொடர்ந்து எதைச் செய்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம். ஆகையால் சிறப்பு என்பது ஒரு செயலல்ல, அது ஒரு பழக்கம்.

  6. "Even the darkest night will end and the sun will rise." - எவ்வளவு இருட்டான இரவாக இருந்தாலும் அது முடிந்து கட்டாயம் சூரியன் உதித்தே தீரும்.

  7. "It is our choices that show what we truly are, far more than our abilities." - நமது திறமைகளை விட நாம் எடுக்கும் முடிவுகளே நாம் யார் என்பதை உண்மையாகக் காட்டும்.

  8. "Fear doesn't shut you down, it wakes you up." - பயம் உங்களை ஒருபோதும் முடக்கிப் போடாது, அது உங்களை விழித்தெழச் செய்யும்.

  9. "A reader lives a thousand lives before he dies." - புத்தகங்களை தொடர்ந்து வாசிப்பவன் இறப்பதற்கு முன் ஆயிரம் வாழ்க்கையை வாழ்ந்து விடுகிறான்.

  10. "The moment you doubt whether you can fly, you cease for ever to be able to do it." - உங்களால் பறக்க முடியுமா என நீங்கள் எப்போது சந்தேகப்படுகிறீர்களோ, அப்போதே அதற்கான தகுதியை முழுமையாக இழக்கிறீர்கள்.

  11. "I am not afraid of storms, for I am learning how to sail my ship." - நான் புயலைக் கண்டு பயப்பட மாட்டேன், ஏனென்றால் என் கப்பலை எப்படி ஓட்டுவது என நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

  12. "Whatever you are, be a good one." - நீங்கள் யாராக இருந்தாலும், அந்த இடத்தில் மிகச் சிறந்தவராக இருங்கள்.

  13. "Everything is hard before it is easy." - எந்த ஒரு விஷயமும் உங்களுக்கு எளிதாக மாறுவதற்கு முன்பு மிகவும் கடினமாகவே இருக்கும்.

  14. "Happiness can be found, even in the darkest of times, if one only remembers to turn on the light." - இருண்ட காலங்களில் கூட வெளிச்சத்தை தேட நாம் நினைத்தால் நிச்சயம் அங்கு சந்தோஷத்தைக் கண்டுபிடிக்க முடியும்.

  15. "You must be the change you wish to see in the world." - இந்த உலகத்தில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக முதலில் நீங்கள் மாற வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஹெல்த் இன்சூரன்ஸ்: 2026-ல் ஒவ்வொரு குடும்பமும் தெரிந்து கொள்ள வேண்டியவை!
powerful-book-quotes

இந்த ஒவ்வொரு வரியும் பலரின் வாழ்க்கைப் பாடங்களில் இருந்து வடிகட்டி எடுக்கப்பட்ட ஒரு மாபெரும் பொக்கிஷம். எப்போதெல்லாம் உங்கள் மனது டல்லாக இருக்கிறதோ அப்போதெல்லாம் இந்த வரிகளை ஒரு முறை படித்துப் பாருங்கள். இது உங்களுக்குள் ஒரு எனர்ஜியை உடனடியாகக் கொடுக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com