வாழ்க்கை: பலவித மனிதர்களும், அவர்களின் மன ஓட்டங்களும்!

Motivational articles
Various peoples
Published on

வ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிந்தனைகள் எண்ண ஓட்டங்கள் இருப்பது இயல்பு.

வெகு சீக்கிரம் பணக்காரன் ஆகிவிடவேண்டும், நமக்கே எல்லாம் கிடைக்கவேண்டும், யாரைப்பற்றியும் எனக்கு கவலையில்லை, நான், என் குடும்பம் நன்றாக இருந்தால்போதும், இந்த சுயநலமே வாழ்க்கையின் ஆதாரமாகக் கொண்டு வாழ்பவர்களின் மன ஓட்டமாக உள்ளது.

சிலர் என்ன வாழ்க்கை இது என அலுப்பாக அங்கலாய்ப் பவர்களும் இருக்கத்தான் செய்கிறாா்கள்.

அதேபோல இந்த வாழ்க்கைக்கு என்ன குறை இதுகூட கிடைக்காதவர்கள் மத்தியில் என் வாழ்க்கை எவ்வளவோதேவலாமே என கிடைத்ததைக்கொண்டு திருப்திப்படுபவர்களும் உண்டே!

பொதுவாக சில விஷயங்களில் நாம் ஜொலிக்க முடியாமல் போவதும் உண்டு. அதற்கு காரணம் நமது இரக்க குணம், அதற்காக இரக்க குணமே வேண்டாம் என சொல்ல வில்லை, அதாவது நமது இரக்க குணத்தை பலர் பலவீனமாக கருதி நம்மை ஏமாற்றிவிட்டு புத்திசாலிகளாவதும் உண்டல்லவா?

ஒருவரது பாசம், பற்றுதல், வெகுளித்தனம், இவைகளை பயன்படுத்தி ஏமாற்றி பிழைப்பு நடத்தும் சாமர்த்திய சாலிகளும் நிறையவே உலா வருகிறாா்களே! இறைவனின் கணக்குகளில் அவர்கள் நோட்டடு பர்சன் என்பதை யாரும் புறந்தள்ள முடியாது.

அதேபோல நாம் எவ்வளவு பக்குவ சாலியாக இருந்தாலும் நமது பக்குவத்தை புாியாதவர்கள் மத்தியில் சரியான புாிதல் இல்லாதவர்களிடத்தில் நாம் மெளனமாகவே இருந்து விடவேண்டும்.

அவர்கள் பக்குவமானவர்கள்தான். ஆனால் அவர்களோ வெளிவேஷம் போடும் கபடநாடகதாாிகளே ஆவாா்கள்.

நமது எண்ண ஓட்டமும் சிந்தனையும் தெளிவாக இருக்கவேண்டும். நல்ல சிந்தனையே வெற்றிக்கு வழி வகுக்கும்.

இதையும் படியுங்கள்:
மனிதனின் ஆசைகளும் வாழ்வின் நெறிகளும்!
Motivational articles

நாம் நமது செயல்பாடுகளாலேயே உயர்ந்தவர்களாகவும் குறைந்தவர்களாகவும் அறியப்படுவோம், அதுவே நிஜம்.

பொதுவாகவே யாாிடத்திலும் குறைகள் கண்டு பிடிப்பதையே நமது குறிக்கோளாக வைத்திருப்பது தவறு.

நமது வாழ்க்கையை அடுத்தவர் வாழ்க்கையோடு ஒப்பிடாமல் வாழ்வதே சாலச்சிறந்தது. நமக்காகத்தான் நாம் வாழ்கிறோம் அடுத்தவர்களுக்காக நாம் வாழக்கூடாது. சங்கடத்தில் இருப்பவர்களுக்கு நம்மால் முடிந்த நமது சக்திக்கேற்ப உதவலாம் அது தப்பில்லை.

மகிழ்ச்சியை நாம்தான் உருவாக்க வேண்டும். அது தானாக வராது.

"தூரத்தில் இருக்கும் மகிழ்ச்சியை அடைய முயற்சிப்பவன் முட்டாள்" மாறாக தனது காலடியில் அதை வளர்ப்பவனே அறிவாளி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com