
பொதுவாக எவ்வளவுதான் வாழ்க்கை சீராக அமைந்தாலும் அமையாவிட்டாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு வித ஆசை, லட்சியம், கனவு, உந்துதல் இப்படி பல்வேறு விதமான செயல்பாடுகள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது.
தாயாருக்கு கருவுற்ற காலத்திலிருந்தே குழந்தை நல்லவிதமாக பிறக்கவேண்டும் என்ற வேண்டுகோள்.
கணவனுக்கோ மனைவியானவள் நல்ல விதமாய் பிரசவித்து தாயும் சேயுமாய் வீடு வந்து வரவேண்டுமென வேண்டுகோள்.
மாமியாருக்கு மருமகள் குடும்ப வாாிசோடு நல்ல விதமாய் வரவேண்டுமென்ற வேண்டுகோள்.
குழந்தை நோய்நொடி இல்லாமல் வாழவேண்டுமென தாயாாின் வேண்டுகோள்.
வளா்த்து ஆளாக்கி பள்ளியில் சோ்க்கும்போது நன்கு படித்து பொிய ஆளாக வரவேண்டுமென தாய், தந்தையின் வேண்டுகோள்.
குழந்தை பிறந்த நேரம் வேலையில் அல்லது பதவியில் மேலும் வளா்ச்சி கிடைக்க வேண்டுகோள்.
மகனோ, மகளோ பொிய படிப்பு படிக்க வேண்டுகோள்.
நல்ல வருமானம் வரவேண்டுமென தாய் தகப்பனா் இவர்களின் வேண்டுகோள். நல்ல மனைவி நல்ல கணவன் வரவேண்டுமென வாலிப வேண்டுகோள்.
வருமானம் குறைவாக இருந்தாலும் வயிறு நிறைய உணவு கிடைக்க வேண்டுகோள்.
வாழ்நாள் குறைவானாலும் நோய் நொடியில்லா வாழ்வு வேண்டுமென வேண்டுகோள்.
அன்பான உறவு மற்றும் நட்பு நீடிக்க வேண்டுகோள்.
வசதி குறைவானாலும் பக்தி செலுத்த நோ்த்திக்கடன் நன்றாக அமைய வேண்டுகோள்.
வாாிசுகள் வேலைக்குப் போனதும் நல்ல மருமகள், நல்ல மருமகன், வரவேண்டுமே என வேண்டுகோள். மருமகனோ, மருமகளோ வந்த பின் வாாிசு பிறக்க வேண்டுகோள்.
நல்ல வீடு கட்ட வேண்டும் என்ற வேண்டுகோள்,
மேலும் மேலும் வாழ்வில் எல்லாவளமும் பெருகிட வேண்டுகோள்.
வயதானதும் நீண்ட நாள் ஆரோக்கியமாய் வாழ வேண்டுகோள்.
கணவனுக்கு ஒரு குறையும் வரக்கூடாது என மனைவியின் வேண்டுகோள்.
மனைவிக்கு நீண்ட ஆயுள் வேண்டி கணவனின் வேண்டுகோள்.
இப்படி மனித மனங்களின் வேண்டுதல் அளவிட முடியாமல் வந்தாலும், அத்தனையும் பலிதமாகி விடுகிறதா இல்லையே!
சில வெற்றி, சில தோல்வி, வரத்தானே செய்கிறது.
இதுதான் ஆண்டவன் கட்டளை! எத்தனை வேண்டுதல் வைத்தாலும், உண்மை, நோ்மை, நியாயம், தர்மசிந்தனை, கடவுள் நம்பிக்கை, அடுத்தவர் நலன் கண்டு பெறாமைப்படாத எண்ணம், அனைவரும் வாழவேண்டும் என்ற நற்சிந்தனை, நல்ல ஒழுக்கம், நல்ல பண்பாடு, நோ்மறையான சிந்தனை, தான தர்மங்கள் செய்தல், நிதானம் கடைபிடித்தல், தாய் தந்தையரை அரவணைக்கும் குணம், சகோதர சகோதரி பாசம். நல்ல நட்பு தேடல், நோ்மை தவறாமை, பொய் சொல்லாத குணம், இவை அனைத்தும் இருப்பதே நல்லது!
மனசாட்சியை அடகு வைக்காத நற்பண்பு, இப்படி நிறையவே சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்தையும் கடைபிடித்து வந்தாலே வேண்டுவதும் வேண்டாததும்தானே கிடைக்கும். இதுதான் இறைவன் வகுத்த நியதியாகும்!