நீரிழிவு நோயாளிகள் பலாப்பழம் சாப்பிடலாமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

Diabetic Patient & Jackfruit
Can Diabetic Patients Eat Jackfruit?
Published on

பலாப்பழம் அதன் தனித்துவமான சுவைக்கு மிகவும் பிரபலமானது. முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அந்த அளவுக்கு அனைவருக்கும் பிடித்தமானது பலாப்பழம். நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவுகளை நிர்வகிக்க வேண்டும் என்பதால், அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த பதிவில், நீரிழிவு நோயாளிகள் பலாப்பழம் சாப்பிடலாமா, வேண்டாமா? என்பது பற்றி பார்க்கலாம் வாங்க. 

Glycemic Index: நீரிழிவு நோயாளிகள் முதலில் இந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு உணவை சாப்பிடும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு விரைவாக உயருகிறது என்பதன் அடிப்படையில் உணவுகளை வரிசைப்படுத்தும் அளவுகோல்தான் கிளைசெமிக் இன்டெக்ஸ். அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவுகள் விரைவாக செரிமானம் அடைந்து உடலால் உறிஞ்சப்படுவதால் ரத்த சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிக்கும். மறுபுறம், குறைந்த GI உணவுகள் மெதுவாக ஜீரணம் ஆவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு படிப்படியாக அதிகரிக்கும். 

பலாப்பழத்தின் Glycemic Index: பலாப்பழத்தின் கிளைசெமிக் குறியீடு அதன் முதிர்ச்சி நிலையைப் பொறுத்து மாறுபடும். சரியாக பழுக்காத ஓரளவுக்கு காயாக இருக்கும் பலாப்பழத்தில் குறைந்த GI உள்ளது. இதுவே அதிகம் பழுத்த பலாப்பழத்தில் அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் காணப்படுவதால், பழத்தின் தன்மையைப் பொறுத்து ரத்த சர்க்கரை அளவுகளில் அதன் தாக்கம் இருக்கும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 

நீரிழிவு நோயாளிகள் பலாப்பழம் சாப்பிடுவதன் நன்மைகள்: 

  • பலாப்பழம் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவாகும். இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. மேலும் ஃபைபர் உள்ளடக்கம் செரிமானத்தை மேம்படுத்தி சர்க்கரை, உறிஞ்சுவது ஒழுங்குபடுத்தப்படுகிறது. இதனால் குளுக்கோஸ் அளவு விரைவாக உயர்வது தடுக்கப்படும். 

  • பலாப்பழத்தில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் பெரிதளவில் உதவுகின்றன. 

இதையும் படியுங்கள்:
Summer Diabetes Tips: கோடை காலமும், நீரிழிவு நோயும்! 
Diabetic Patient & Jackfruit

“சரி, நீ இப்போ என்ன தான் பா சொல்ல வர? நாங்க பலாப்பழம் சாப்பிடலாமா, வேண்டாமா?” எனக் கேட்கிறீர்களா?

நீரிழிவு நோயாளிகள் பலாப்பழத்தை சாப்பிடலாம் என்றாலும், அது ஒட்டுமொத்த உணவின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் மிதமாக எடுத்துக் கொள்வது முக்கியமானது. எனவே உட்கொள்ளும் அளவை கவனத்தில் கொண்டு, ரத்த சர்க்கரை அளவை முறையாக கண்காணியுங்கள். இதுகுறித்து உங்களுக்கு மேலும் சந்தேகங்கள் இருப்பின், ஒரு சுகாதார நிபுணரை அணுகி கலந்தாலோசிப்பது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com