Matrix திரைப்படம் கற்றுத் தந்த வாழ்க்கைப் பாடங்கள்!

The Matrix Movie!
The Matrix Movie!

நீங்கள் ஆங்கிலத் திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பவர் என்றால் நிச்சயம் The Matrix என்ற திரைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். நான் பார்த்த சில சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. மேலோட்டமாக பார்ப்பதற்கு இத்திரைப்படம் Neo என்கிற கதாபாத்திரத்தை சுற்றி நடப்பது போல தெரிந்தாலும், இந்த உலகம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல கருத்துக்களை இத்திரைப்படம் நமக்குக் கற்றுத்தரும். எனவே The Matrix திரைப்படம் வாயிலாக நான் கற்றுக்கொண்ட சில வாழ்க்கைப் பாடங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம். 

கேள்வி கேளுங்கள்: இந்த படத்தின் கதாநாயகன் Neo தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஒருவராக இருப்பார். அதனால் அவரது வாழ்வில் எவ்விதமான முன்னேற்றத்தையும் காண மாட்டார். சுய வளர்ச்சி என்பது நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை கேள்வி கேட்டு புரிந்துகொள்வதன் மூலமே தொடங்குகிறது. இத்தகைய கேள்விகள் நமக்கு புதிய விஷயங்களைக் கற்றுத்தந்து தனிப்பட்ட வளர்ச்சிக்கு பெரிதளவில் உதவும். 

தெரியாததைத் தேடுங்கள்: இந்த திரைப்படத்தில் கதாநாயகனின் பயணம் சுயக் கண்டுபிடிப்பு மற்றும் தெரியாத விஷயங்களைத் தெரிந்துகொள்ள முயற்சிப்பதை சுற்றியே நடக்கும். இதேபோல நீங்கள் உங்கள் வாழ்வில் முன்னேற வேண்டுமென்றால், Comfort Zone-ஐ விட்டு வெளியேறி, உங்களுக்கு தெரியாத பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களது பயத்தை எதிர்கொண்டு, ஆபத்தை சமாளிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வதன் மூலமாக வாழ்வில் எதை வேண்டுமானாலும் நீங்கள் சாதிக்கலாம். 

வரம்புகளுக்கு உட்பட்டு இருக்காதீர்கள்: படம் முழுவதும் நியோ சுய சந்தேகம் மற்றும் வரம்புகளுக்குட்பட்ட விஷயங்களுடன் போராடிக் கொண்டிருப்பார். அதாவது தான் நினைத்துக் கொண்டிருக்கும் விஷயங்களும், வெளியே நடக்கும் விஷயங்களும் முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதால், எதை சரியென ஏற்றுக் கொள்வதென்பது அவருக்குத் தெரியாது. பெரும்பாலும் உலகம் பற்றி அவர் நினைக்கும் விஷயங்கள் அனைத்துமே மாறுபட்டதாக இருக்கும். எனவே ஒவ்வொருவரும் தங்களது சிந்தனைகேற்ப இருக்காமல், உலக யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறான முடிவுகளை எடுக்க இத்திரைப்படம் ஊக்குவிக்கிறது. 

சரியானதைத் தேர்வு செய்யுங்கள்: தி மேட்ரிக்ஸ் திரைப்படத்திலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய மற்றொரு விஷயம் என்னவென்றால், நமது சுய வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவது நாம் எதைத் தேர்வு செய்கிறோம் என்பதுதான். இத்திரைப்படத்தில் ஒரு காட்சியில் நியோவிடம் சிவப்பு மற்றும் நீல நிறத்தில் இரண்டு மாத்திரைகள் காட்டப்பட்டு, நீ எதைத் தேர்வு செய்கிறாய்? என்ற கேள்வி முன் வைக்கப்படும். அப்படிதான் நமது வாழ்க்கையிலும் நல்லது கெட்டது என அனைத்துமே நம் கண் முன்னே இருக்கும். அதில் நாம் எதைத் தேர்வு செய்து வாழ்கிறோம் என்பது மிகவும் முக்கியம்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் ஏழையாக இருக்கிறீர்கள் என்பதற்கான 7 அறிகுறிகள்!
The Matrix Movie!

இந்த நான்கு விஷயங்களும் The Matrix திரைப்படம் மூலமாக நான் தெரிந்து கொண்டேன். இது தவிர மேலும் பல கருத்துக்களை இந்த படம் எனக்கு புரிய வைத்தது. இந்த உலகில் நாம் எப்படியெல்லாம் பிறரால் நம்ப வைக்கப்படுகிறோம் என்பதையும் தெள்ளத்தெளிவாக புரிய வைத்தது இத்திரைப்படம். நேரம் கிடைத்தால் இத்திரைப்படத்தின் அனைத்து பாகங்களையும் கட்டாயம் பாருங்கள். நிச்சயம் உங்களுக்குள்ளும் ஓர் மாற்றம் பிறக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com