IPL கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடங்கள்! 

ஐபிஎல் மூலம் உந்துதல் பெறும் வாழ்க்கை நெறிகள்!
Life Lessons to Learn from IPL Matches
Life Lessons to Learn from IPL Matches

இந்தியன் பிரிமியர் லீக் ஒரு கிரிக்கெட் போட்டி மட்டுமல்ல இது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்த ஒரு கோலாகலக் கொண்டாட்ட நிகழ்வு. சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளுக்கு அப்பால், மோட்டிவேஷன் மற்றும் வெற்றி அடைவதன் முக்கியத்துவத்தை IPL நமக்கு கற்றுத் தருகிறது. ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களின் அர்ப்பணிப்பானது பல்வேறு அம்சங்களில் நம்மை ஊக்குவிக்கும் பாடங்களைக் கற்றுத்தருகிறது. இப்பதிவில் IPL போட்டிகளில் இருந்து நம் வாழ்க்கைக்குத் தேவையான எதுபோன்ற விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் எனப் பார்க்கலாம். 

ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் அவர்களுடைய முழு ஈடுபாடு மற்றும் ஆர்வத்தால் இயக்கப்படுகிறார்கள். இது நமக்கு பிடித்த விஷயத்தைக் கண்டுபிடித்து விருப்பத்துடன் செயல்படுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. எனவே நாம் எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும், அதிலிருந்து விடுபட முழு மூச்சுடன் செயல்பட வேண்டும் என்பதை ஐபிஎல் கற்றுத் தருகிறது. 

ஐபிஎல் வீரர்கள் காயங்கள், பார்ம் அவுட் மற்றும் தீவிர மனநிலை சவால்களை எதிர்கொள்கின்றனர். இருப்பினும் அவர்களின் குறிப்பிடத்தக்க விடாமுயற்சி, பல மோசமான தருணங்களில் இருந்து அவர்கள் மீண்டு வந்து வெற்றியடைய உதவுகிறது. பல ஐபிஎல் போட்டிகளில் ஒரு அணி தோற்றுவிடும் என நாம் நினைக்கும் வேளையில், யாரோ ஒருவர் போராடி தன் அணியை மீட்டு வெற்றி பெறச் செய்வார். இப்படிதான் நம் வாழ்க்கையிலும் முடியாது என்ற வார்த்தை நாம் விட்டுக் கொடுத்தால் மட்டுமே உண்மையாகிறது.

ஐபிஎல் போட்டி என்பது குழுவாக விளையாடும் விளையாட்டாகும். அதில் ஒரு அணி வெற்றி பெற அனைவரது ஒத்துழைப்பும் அவசியம். ஒரு அணியில் இருக்கும் வீரர்கள் பல்வேறு பின்னணிகள் மற்றும் கலாச்சாரங்களில் இருந்து வருகின்றனர். குறிப்பாக உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் ஒன்றாக ஐபிஎல் மூலமாக இணைகிறார்கள். இதன் மூலமாக ஒரு விஷயத்தில் வெற்றி பெற கூட்டு முயற்சி எந்த அளவுக்கு முக்கியம் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. 

நீங்கள் எந்த ஒரு ஐபிஎல் போட்டியைப் பார்த்தாலும் அதில் உள்ள வீரர்கள் அபார தன்னம்பிக்கையுடன் காணப்படுவார்கள். தன்னம்பிக்கை அவர்களது திறமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தி மிகச் சிறப்பாக செயல்பட உதவும். அழுத்தமான தருணங்களிலும் தன்னம்பிக்கையுடன் அவர்கள் செயல்படுவார்கள். இதன் மூலமாக தன்னம்பிக்கை மற்றும் திறமைகளில் நாம் கவனம் செலுத்தினால் சிறப்பாக மாறலாம் என்பதை ஐபிஎல் உணர்த்துகிறது. 

இதையும் படியுங்கள்:
Morning Habits: உடனடியாக கைவிட வேண்டிய 5 தவறுகள் - ஆரோக்கியமான வாழ்விற்கு வழிகாட்டி!
Life Lessons to Learn from IPL Matches

ஐபிஎல்-இல் ஒவ்வொரு அணியும் பெரிய வெற்றிகளை மட்டுமல்லாமல் சிறிய வெற்றிகளையும் கொண்டாடுவார்கள். சிறப்பாக செயல்பட்ட பந்துவீச்சாளர், பேட்ஸ்மேன், சிறந்த கேட்ச் என போட்டிக்கு உதவிய எதுவாக இருந்தாலும், அதற்கான அங்கீகாரத்தைக் கொடுத்து ஊக்கமளிப்பார்கள். எனவே நாமும் நம்முடைய சொந்த வாழ்வில் சிறு சிறு வெற்றிகளை கொண்டாடி ஊக்கமளித்துக் கொள்ள வேண்டும்.

இப்படி பல விஷயங்களை IPL மூலமாக நாம் கற்றுக்கொள்ள முடியும். இனி நீங்கள் ஐபிஎல் பார்க்கும்போது, அதிலிருந்து எதுபோன்ற உந்துதல் அளிக்கும் விஷயங்களை எடுத்துக் கொள்ளலாம் என்ற கோணத்தில் பாருங்கள். வீரர்களும் அணி நிர்வாகமும் எப்படி செயல்படுகிறது? போட்டியாளர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு விளையாடுகிறார்கள்? எவ்வளவு தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள்? என்பதைப் பார்த்து உங்கள் வாழ்க்கைக்கான உந்துதலை ஏற்படுத்திக் கொண்டு முன்னேற முயலுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com