வாழ்க்கை என்பது ஓடம் போன்றது. அதில் அம்சமும், வழிமுறைகளும், தன்மைகளும் சரியாக அமையும் போதுதான் துக்கத்தில் மூழ்காமல் காற்றையும் எதிர்த்து செல்வது போல் விதியையும் எதிர்த்து செல்ல முடிகிறது. இந்த ஓடத்தை ஓட்டிச் செல்ல தனக்கு உதவியாக பலவிதமான துடுப்பெனும் தரங்களை மனிதர்கள் பயன்படுத்துவது உண்டு. நல்ல தரங்களானது, திறமை, மதிப்பும் மரியாதையும், சந்தோஷம் என்பவற்றைக் கூறலாம். இது அவரவர் காரியங்களை நடத்தவே ஆகும். ஒழுக்கம் என்பது தட்டி கேட்டல், திருத்தல், வரையறுத்தல் போன்றவை அடங்கியதாகும். இது மனம், உடல், உடமைகளை காப்பாற்றவே ஆகும். இதில் கடமை, கண்டிப்பு, அழுகை, கோபம், ஏமாற்றுதல் என்னும் பலவும் காணப்படுவதுண்டு. கண்டிப்பு என்பது அரைச் சத்தத்திற்கு உரியது. இதில் அன்பு இருக்காது கவனிப்பு உண்டு. கடமை என்பதில் அன்பு உண்டு. கவனிப்பு இல்லை. எதிலும் ஊனமும், ஆபத்தும் நம் கண்களுக்கு தெரிவது உண்டு. ஆனால் ஆராய வேண்டியது அவசியமாகிறது.
எந்த ஒரு தரத்தை கடை பிடித்தாலும் அதில் சுத்தமும், அன்பும், கவனிப்பும், வழிநடத்தலும், வைத்துக் கொள்ளலும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இங்குள்ள எல்லா விதமான தரங்களும் எவரையும் நம்பாதே என்றுதான் கூறும். ஆனால் ஒழுங்கான பாதையையும், ஒழுங்கில்லாத பாதையையும் காட்டுவதாக அமைவது உண்டு.
வாழ்வில் வசந்தத்திற்கு கணவன், மனைவி இருவர் ஒத்துழைப்பும் தேவை. இதில் ஒரு தரம் தோல்வி அடைந்தால் இன்னொரு தரத்தை பயன்படுத்தி இந்த ஓடத்தை ஓட்டி செல்ல வேண்டும். அங்கே அதில் சுத்தமும், அன்பும், கவனிப்பும், வழிநடத்தலும் வைத்துக் கொள்ளலும் இருக்க வேண்டும்.
எத்தனை தரங்களை பயன்படுத்தினாலும் ஒழுக்கம் என்னும் அம்சமானது பாவத்தை வருமுன் காக்கும். வந்த பின் காப்பது என்பது கஷ்டத்திற்குரியது, கடினமானது, இயலாதது. இது கடினமில்லாத, ஆபத்து இல்லாத வேலையை தேடுவதாகவும் அமையும். இங்கு எதற்கும் உதவியாக ஆட்கள் உண்டு.
பிறர் கை என்பது இங்கு வேதனையானது. அதுபோல் சீரானது என்பது இங்கு வரவேற்கத்தக்கது. ஒரு குறிப்பிட்ட அளவு வேலைகள் என்பது திருப்தியைக் கொடுப்பது அதை செய்ய வெறுப்பு என்பது தகாதது. இந்த வேதனையானது துடைப்பானால் மேசையை சுத்தம் செய்வது போல் இருக்கக் கூடாது. அனைவரின் நிலைமைகளுக்கும் உள்ள ஒன்று தான். ஆனால் இதுதான் பெரிது, இதுதான் அனைவரும் விரும்புவது ஆகும். இதில் தான் உண்மையாக இருக்க வேண்டும். இது எங்கும் எடுபடும்.