வாழ்வை வடிவமைத்து வெற்றி தரும் முடிவுகள்!

Life-shaping and winning results!
Stephen William HawkingImage credit: endz.in
Published on

நாம் எடுக்கும் முடிவுகள்தான் நமது வாழ்வை வடிவமைக்கிறது என்பார்கள் சாதனையாளர்கள். ஆம் நமது நிலைமை எப்படிப்பட்டதாக இருப்பினும் நமது முடிவுகள் நமது குறிக்கோளை நோக்கி இருக்கும்போது நமது வாழ்க்கையும் அதை சார்ந்து வடிவமைக்கப் படுகிறது என்பதுதான் உண்மை. இந்த உலகத்தில் நம்முடன் வாழும் பல உண்மையான வெற்றியாளர்களின் அனுபவங்களை பார்த்து வருகிறோம்.

உயிருடன் வாழ  இன்னும் 2 வருடங்கள் மட்டுமே என்ற  கெடுவை துச்சமாக எண்ணி சாதித்த பின்தான் மரணம் என்ற உறுதியுடன் உலகின் முன்னணி இயற்பியலாளராக வலம் வந்தவர்தான் ஸ்டீபன் ஹாக்கிங்.

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளராவார். 21 வயதில் ALS நோயால் கண்டறியப்பட்ட ஸ்டீபன் ஹாக்கிங் 2 வருடங்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என்ற மருத்துவர்களின் முரண்பாடுகளை மீறி மேலும் 55 ஆண்டுகள் வாழ்ந்துகாட்டி தான் நினைத்ததை சாதித்தார்.

ஆக்ஸ்போர்டில் படித்தபோது அவர் ALS நோயால் பாதிக்கப்பட்டார். தனது பேச்சில் தடுமாற்றம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட தொடர்ச்சியான மருத்துவ சோதனைகளால் காரணம் அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் (ALS) என்று கண்டறியப்பட்டது, இது தசைகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகள் செயலிழக்கும்போது. அவர் இரண்டு வருடங்களுக்கு மேல் உயிர்வாழ மாட்டார் என்று கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்:
காலம் உயிருக்குச் சமம்!
Life-shaping and winning results!

தனது நிலை கண்டறியப்படுவதற்கு முன்புவரை வாழ்க்கையில் சலிப்பாக இருந்தவர் அதன் பின் மேலும் சோர்ந்துவிடாமல் எடுத்த முடிவுதான் சிறப்பு. ஆம் முனைவர் பட்டம் பெறுவதற்கு கூட நீண்ட காலம் வாழ முடியாது என்பதை உணர்ந்த ஹாக்கிங், தனது அனைத்து ஆற்றல்களையும் தனது பணி மற்றும் ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்தார். 

ஸ்டீபன் ஹாக்கிங் உலகமே உற்று நோக்கிய கருந்துளைகள் பற்றிய ஆய்வுக்காக இயற்பியலில் கவனம் செலுத்தியவர். கருந்துளைகள் இறுதியில் வெடிக்கும்வரை துணை அணுத் துகள்களை வெளியிடும் என்று அவர் முன்மொழிந்தார். அவரது நோய் உடல் ரீதியாக பலவீனப்படுத்தியது.

 ஆனால்  தன்னம்பிக்கை முடிவு அவரை சாதிக்க வைத்தது. அவரது உடல் தோல்வியுற்றபோது அவர் மனதை மூடவில்லை,   மனதிலிருந்தே வேலை செய்ய அவர் தயாராக இருந்தார், "என்னால் நகர முடியவில்லை என்றாலும், கணினி மூலம் பேசவேண்டும், என் மனதில் நான் சுதந்திரமாக இருக்கிறேன்" என்று நம்பினார்.

"நான் மரணத்திற்கு பயப்படவில்லை, ஆனால் நான் இறப்பதற்கு அவசரப்படவில்லை." ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னதுபோல மரணம் வரவேண்டும் என்பது இயற்கை. ஆனால் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் இருக்கும் வாழ்க்கை நம் கையில். நாம் எப்படி வாழ விரும்புகிறோம் என்பது நம் விருப்பம். 

இதையும் படியுங்கள்:
மென்மையே மேன்மை தரும்!
Life-shaping and winning results!

அவரது அற்புதமான பணி மற்றும் உறுதிப்பாடு இன்றும் மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகம் தருகிறது. அசையவோ, பேசவோ முடியாத நபர் அதிசயங்களைச் செய்து  உலகம் போற்ற சாதித்து வெற்றி பெறும்போது நம்மில் எல்லாத் தகுதியும் இருந்தும் சிலர் ஏன் நம்பிக்கை இழந்து தோல்விகளை ஏற்கவேண்டும்? சிந்திப்போம். நல்ல முடிவுகளை எடுத்து வெற்றி பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com